Tag Archives: தங்கலான்

தங்கலான் முதல் நாள் வசூல் நிலவரம்!.. இத்தனை கோடியா?

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம்தான் தங்கலான். இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் இதற்கு நடுவே இன்னும் சில திரைப்படங்களும் நேற்று வெளியாகி உள்ளது.

இதற்கு நடுவே ரசிகர்கள் சிலர் இது அபகலிப்டோ என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பி என்று ஒரு பக்கம் பேசி வருகின்றனர். ஆனால் பெரும்பாலும் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே பெரும் வெற்றியை கொடுக்க கூடியவை.

பா.ரஞ்சித் வெற்றி படங்கள்:

அவர் இயக்கிய திரைப்படத்திலேயே நட்சத்திரம் நகர்கிறது என்கிற திரைப்படம் மட்டும்தான் பெரிதாக வெற்றியை பெறவில்லை மற்ற திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை பெற்ற படங்களாகதான் இருந்து வருகின்றன.

இதனால் கண்டிப்பாக சியான் விக்ரமின் தங்கலான் நல்ல வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தங்கலானை பொருத்தவரை இது வெள்ளையர்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் நடக்கும் கதையாக இருந்து வருகிறது.

இந்த சமயத்தில் பண்ணை அடிமை முறையில் பணி புரிந்து வரும் பழங்குடியின மக்களுக்கு தங்கத்தை தேடும் வாய்ப்பு கிடைக்கிறது. அதனை தொடர்ந்து அந்த மக்கள் தங்களுக்கான தங்கத்தை எப்படி தேடி எடுக்கப் போகிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று இந்த திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது பலருக்கும் எதிர்பார்ப்பை தூண்டும் விஷயமாக இருந்து வருகிறது.

பட வசூல்:

தங்கலான் திரைப்படத்திற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரைப்படங்கள் மீது வெளிநாட்டினர் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றனர்.

அதனை தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும் இந்த மாதிரியான திரைப்படங்களை வாங்க துவங்கியிருக்கின்றன. தற்சமயம் தங்கலான் திரைப்படத்தையும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்தான் வாங்கி இருக்கிறது 35 கோடிக்கு இந்த திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கி இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் இந்திய அளவில் இந்த திரைப்படம் 12 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் அமெரிக்காவிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது தங்கலான்.  நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 75 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்துள்ளது தங்கலான் என்று கூறப்படுகிறது எந்த ஒரு தமிழ் திரைப்படமும் இதற்கு முன்பு அமெரிக்காவில் இவ்வளவு வசூல் செய்தது கிடையாது என்றும் கூறப்படுகிறது 

ஆஸ்கருக்கு தகுதியான படம் தங்கலான்… இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!.. அப்படி என்ன இருக்கு படத்துல!..

ஹாலிவுட்டில் வெளிவந்த அவதார் திரைப்படம் வரையிலுமே தொடர்ந்து வெளியாகும் அதிகபட்ச திரைப்படங்கள் அடிமைத்தனத்துக்கு எதிரான ஒரு விஷயத்தை பேசும் படங்களாகவே இருந்து வந்திருக்கின்றன.

அந்த வகையில்தான் இன்று தமிழில் வெளியான தங்கலான் திரைப்படம் அடிமைத்தனத்துக்கு எதிரான ஒரு திரைப்படமாக அமைந்திருக்கிறது. பழங்குடியின மக்களின் கதையாக தங்கலான் திரைப்படம் இருக்கிறது விக்ரம் இதுவரை நடித்த திரைப்படங்களிலேயே இந்த திரைப்படத்திற்குதான் அதிகமாக கஷ்டப்பட்டேன் என்று கூறியிருக்கிறார்.

தங்கலான்:

அந்த அளவிற்கு இந்த படத்திற்காக அதிகமாக உழைத்திருக்கிறார் விக்ரம் அதிக சமயங்களில் விக்ரம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும் கூட அந்த திரைப்படங்களுக்கு அதற்கான வரவேற்பு என்பது கிடைக்காமல் போய்விடும்.

ஆனால் தங்கலான் திரைப்படத்திற்கு அந்த மாதிரி நடக்கவில்லை. முதல் நாளே தங்கலான் திரைப்படம் முக்கால்வாசி திரையரங்குகளில் அதிக புக்கிங் ஆகி ஹவுஸ்புல் ஆகி இருக்கிறது. படத்தை பார்த்த பலரும் இதற்கு நேர் மறையான விமர்சனங்களைதான் வழங்கி வருகின்றனர்.

இந்த திரைப்படத்திற்காக மக்களும் வெகு காலங்களாக காத்திருந்தனர் இந்த திரைப்படத்தில் முக்கிய அம்சமே இதில் நடித்திருப்பவர்களின் நடிப்புதான். மேக்கப் மூலமே படத்தில் யாருமே அடையாளம் தெரியாத அளவிற்கு அவர்களை மாற்றி இருக்கின்றனர்.

சிறப்பான நடிப்பு:

இந்த நிலையில் நடிப்பை பொறுத்தவரையில் நடிப்பும் சாதாரணமாக நடிக்கும் விக்ரமின் நடிப்பை போலவே இல்லை. ஒட்டுமொத்தமாக மாற்றமாக இருக்கிறது மேலும் மாளவிகா மோகனின் நடிப்பும் வித்தியாசமாக இருக்கிறது.

இதற்கு முன்பு நடிப்புக்காக அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளான மாளவிகா மோகனனுக்கு இந்த திரைப்படம் ஒரு மாற்றமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் ஆஸ்காருக்கு தகுதியான படம் என்று கூறுகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் படத்தின் தயாரிப்புதான் பழங்காலம் போலவே இந்த படத்தை  இயக்கியிருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித். தங்கலான் திரைப்படத்தில் உண்மையிலேயே பழங்காலத்தில் படப்பிடிப்பை நடத்தியது போன்ற அனுபவத்தை உருவாக்கி இருக்கின்றனர். படத்தின் நடிப்பு காட்சிப்படுத்தல் இரண்டிலுமே சிறப்பாக இருப்பதாக விமர்சனங்கள் வந்துள்ளன.

இதுதான் ஒரிஜினல் கே.ஜி.எஃப்பா? எப்படி இருக்கு தங்கலான்.. பட விமர்சனம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் தங்கலான். தங்கலான் திரைப்படத்தில் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை மற்றும் சாதகங்கள் பாதகங்களை இப்போது பார்க்கலாம்.

படத்தின் கதை:

படத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கின்றனர். படத்தின் கதைப்படி விக்ரம் மற்றும் அவரை சேர்ந்த பழங்குடியின மக்கள் காலம் காலமாக அடிமையாக வாழ்ந்து வரும் மக்களாக இருந்து வருகின்றனர்.

அவர்கள் போட்டுக்கொள்ள உடை கூட இல்லாமல் கோவணத்தோடு வாழும் மக்களாக இருக்கின்றனர். ஒரு மிராசுதாரரிடம் பண்ணை அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். பண்ணை அடிமைகளுக்கு சம்பளம் என எதுவும் கிடையாது.

சாப்பிட உணவு கிடைக்கும். மிராசுதாரர் நினைத்தால் ஆடை போன்றவற்றை வழங்குவார். இந்த கதை நடப்பது விடுதலை இந்தியாவுக்கு முந்தைய காலக்கட்டத்தில், இந்த நிலையில் ஒரு பிரிட்டிஷ் காரர் இந்த பழங்குடி மக்களிடம் ஒரு ஒப்பந்தம் போடுகிறார்.

அதாவது கே.ஜி.எஃப்பில் இருக்கும் தங்கத்தை எடுக்க இவர்கள் உதவ வேண்டும். அதற்கு மாதா மாதம் அவர்களுக்கு சம்பளமும் சுகப்போகமான வாழ்க்கையும் கிடைக்கும் என கூறுகிறார் அந்த பிரிட்டிஷார். ஆனால் தங்கத்தை எடுக்க ஒரு பெரிய பயணத்தை செய்ய வேண்டும்.

இதற்கு நடுவே ஆரத்தி என்கிற சூனிய காரி ஒருவள் செல்லும் வழியில் இருப்பாள். அவளை கடந்தால்தான் தங்கத்தை அடைய முடியும். இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக விக்ரம் என்னவெல்லாம் செய்ய போகிறார் என்பதுதான் கதையாக இருக்கிறது.

சாதகமான விஷயங்கள்:

படத்தில் மேக்கப் ரகளையாக செய்யப்பட்டுள்ளது. விக்ரம், மாளவிகா மோகனன் என யாருமே பார்ப்பதற்கு நிஜத்தில் எப்படி இருப்பார்களோ அப்படி இல்லை. தத்ரூபமான மேக்கப்பாக இருந்தது.

அதே போல படத்தில் ஆர்ட் ட்ரைக்‌ஷனும் நன்றாக இருந்தது. உண்மையிலேயே நம்மை பழங்காலத்துக்கு அழைத்து சென்றது போன்ற மனநிலையை ஏற்படுத்துகிறது.

ஜிவி பிரகாஷின் பிண்ணனி இசை நன்றாகவே இருந்தது. ஆனால் கேப்டன் மில்லர், சூரறை போற்று, ஆடுகளம் அளவிற்கு சிறப்பாக இருப்பதாக தோன்றவில்லை.

பாதகங்கள்:

இந்த திரைப்படம் குடும்பமாக சென்று பார்க்க எந்த அளவிற்கு ஏதுவான படமாக இருக்கும் என தெரியவில்லை. அதே சமயம் குழந்தைகளை அழைத்து கொண்டு இந்த படத்திற்கு செல்ல முடியாது என்கிற நிலை இருக்கிறது.

இந்த நிலையில் படம் நல்ல வெற்றியை கொடுக்குமா என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.

அப்பாடா… புஷ்பா பட வெளியீடு மாறியதால் குஷியில் களமிறங்கிய 3 முக்கிய படங்கள்..!

பொதுவாகவே மக்கள் எதிர்பார்ப்போடு பெரிய படம் ஒன்று வெளியாகிறது என்றால் அப்பொழுது மற்ற திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அந்த திரைப்படத்திற்கு வழி விட்டு நிற்பது வழக்கம்.

அந்த வகையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பல திரைப்படங்கள் வெளியிடுவதற்கு ப்ளான் செய்திருந்த போது புஷ்பா திரைப்படம் அந்த தேதியில் வெளிவருவதாக தகவல் வெளியானது.

தேதியில் மாற்றம்:

அதனை அடுத்து பலரும் தங்கள் படத்தை வெளியிடாமல் ஒதுங்கி நின்றனர் இந்த நிலையில் புஷ்பா திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு நிறைய வரவேற்பு இருக்கிறது.

vanangaan arun vijay

கண்டிப்பாக இந்த திரைப்படம் பெருமளவில் வெற்றியை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பிறகு நடிகர் அருண் விஜய் நடித்து பாலா இயக்கிய வணங்கான் திரைப்படத்தையும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.

களம் இறங்கும் தமிழ் படங்கள்:

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெகுநாட்கள் ஆகியும் படம் வெளியிடுவதற்கான சரியான தேதி கிடைக்காமல் அப்படியே வைத்திருக்கின்றனர். இந்த இரண்டு திரைப்படங்களுடன் போட்டி போட்டு சிவகார்த்திகேயன் தற்சமயம் கமல்ஹாசன் தயாரிப்பில் நடித்து வரும் அமரன் திரைப்படத்தை வெளியிட உள்ளனர்.

Sivakarthikeyan-in-Amaran

ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த திரைப்படத்திற்கும் வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. நான் இந்த மூன்று திரைப்படங்களில் வணங்கான் திரைப்படத்தை விடவும் தங்கலான் மற்றும் அமரன் திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கலானை தொடர்ந்து வரிசையாக ஸ்கோர் செய்யும் விக்ரம்!.. லிஸ்ட்டுல மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனரும் இருக்காராம்!.

தமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி தேடி நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். பொதுவாக அவர் நடிக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் காரணமாக அவருக்கு பெரிய ரசிகர்கள் உண்டு.

ஆனால் சமீபத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் எதுவுமே எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. சொல்லப்போனால் அவை மக்கள்  மத்தியில் அதிருப்தியைதான் ஏற்படுத்தின. கோப்ரா மாதிரியான திரைப்படங்களில் விக்ரம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் கதைரீதியாக மிகவும் சுமாரான கதையாக இருந்ததால் அந்த கதை ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.

vikram

இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தங்கலான் திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, பொதுவாகவே பா.ரஞ்சித் திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல வெற்றியை கொடுக்க கூடியவை என்பதால் தங்கலான் நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்து சித்தா திரைப்படத்தின் இயக்குனரான அருண் குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம். சித்தா திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம் விக்ரம்.

manjummel-boys-malayalam

மஞ்சுமல் பாய்ஸ் தென்னிந்திய அளவில் சிறப்பான வெற்றியை கொடுத்தது. அதற்கு இயக்குனர் படத்தை சிறப்பாக உருவாக்கி இருந்ததே காரணமாக இருந்தது. எனவே இந்த படம் கண்டிப்பாக விக்ரமிற்கு ஒரு சிறப்பான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தங்கலானை தொடர்ந்து வரிசையாக இன்னும் இரண்டு வெற்றி படங்களை விக்ரம் கொடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக பேச்சுக்கள் உள்ளன.

இயக்குனர் ஷங்கரே அமைதியாக இருக்கார் உங்களுக்கென்ன?.. தேர்தல் பிரச்சனையில் சிக்கிய தங்கலான் திரைப்படம்!..

Director Shankar: சமீபத்தில் விக்ரம் நடித்த திரைப்படங்கள் எதுவுமே அவருக்கு அவ்வளவாக பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது என்றாலும் அதில் விக்ரம் மட்டுமே கதாநாயகனாக நடிக்கவில்லை.

அது இல்லாமல் தனியாக விக்ரம் நடித்த திரைப்படங்கள் எதுவும் நல்ல வெற்றியை கொடுக்கவில்லை. இருந்தாலும் நடிப்பு ரீதியாக அவர் தன்னுடைய முழுமையான நடிப்பை அதில் வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அடுத்து விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படமாக இருக்கிறது.

vikram thangalaan

இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான பொழுதே மக்களுக்கு வரவேற்பு அதிகரித்துவிட்டது. அந்த அளவிற்கு படமும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்த நிலையிலும் இன்னும் படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படாதது குறித்து நிறைய சர்ச்சைகள் எழுந்து வந்தன.

உண்மையை கூறிய பா.ரஞ்சித்:

பா.ரஞ்சித்திற்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை என்றெல்லாம் பேச்சுக்கள் வர துவங்கின. இந்த நிலையில் இது குறித்து பேசிய பா.ரஞ்சித் தற்சமயம் தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கலாம் என்று காத்திருக்கிறோம்.

படத்தின் முழு படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து விட்டன தேர்தலுக்குப் பிறகு தணிக்கை குழுவிற்கு அனுப்பி சான்றிதழ் பெற்று படத்தை வெளியிட்டு விடுவோம் எனவே தேவையில்லாத சர்ச்சைகளை நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார் பா.ரஞ்சித்.

தேர்தல் சமயத்தில் படத்தை வெளியிடுவது என்பது கடினமான விஷயமாகும். இதனால்தான் இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டையே தேர்தலுக்கு பிறகு வைத்துள்ளனர். இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் பா.ரஞ்சித் படத்தை வெளியிடுவது அவருக்கு ரிஸ்க் என்பதை மிகத் தாமதமாகதான் அறிந்திருக்கிறார். அதனால்தான் அதற்குள்ளாகவே இப்படியான சர்ச்சைகள் மக்கள் மத்தியில் எழ துவங்கி இருக்கின்றன.

அவசரப்பட்டுட்டியே குமாரு!.. தயாரிப்பாளர் சூழ்ச்சி தெரியாமல் சிக்கிய பா.ரஞ்சித்!..

Director Pa Ranjith: தமிழில் வரிசையாக வெற்றி படங்களாக கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். அவர் இயக்கிய முதல் படமான அட்டக்கத்தி திரைப்படத்தில் துவங்கி அனைத்து திரைப்படங்களுமே வரவேற்பை பெற்ற திரைப்படங்களாகவே இருக்கின்றன.

அவர் இயக்கிய சார்ப்பாட்டா பரம்பரை திரைப்படம் பெருமளவில் பேசப்பட்டது. கமர்ஷியல் கதைகளாக இருந்தாலும் அதன் வழியே சமூக அரசியலை பேசியிருப்பார் இயக்குனர் பா. ரஞ்சித்.

pa-ranjith

இந்த நிலையில் தற்சமயம் பா.ரஞ்சித் தங்கலான் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் சியான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எஃப் பகுதியில் உள்ள தங்கத்தை எடுப்பதற்காக அங்குள்ள பழங்குடியினரை விரட்ட நினைக்க தங்கள் நிலத்திற்காக அவர்கள் செய்யும் போராட்டங்களே கதை என கூறப்படுகிறது.

செலவில் வந்த பிரச்சனை:

இந்த நிலையில் இந்த படத்திற்கு தயாரிப்பு செலவு என்பது அதிகமாக இருக்கும். ஆனால் ஃபர்ஸ்ட் காபி முறையில்தான் பா.ரஞ்சித் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அதாவது ஆரம்பத்திலேயே தயாரிப்பாளர் ஒரு தொகையை இயக்குனருக்கு கொடுத்து விடுவார். அந்த தொகையில் எவ்வளவு குறைத்து படத்தை எடுக்க முடியுமோ அப்படி எடுத்துவிட்டு மீத பணத்தை இயக்குனர் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் பா.ரஞ்சித் ஆரம்பத்தில் படத்திற்கு குறைவான தொகையை தயாரிப்புக்காக கேட்டிருக்கிறார். படத்திற்கு அதிக செலவாகும் என்று தெரிந்தே தயாரிப்பாளரும் குறைவான தொகையை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

thangalaan

இந்த நிலையில் தற்சமயம் படத்திற்கான செலவுகள் எதிர்பார்த்ததை விட அதிகரித்ததால் தனது சொந்த பணத்தை போட்டு படத்தை இயக்கியிருக்கிறாராம் பா.ரஞ்சித். மொத்தமாக அவர் 20 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறாராம். இந்த நிலையில் தயாரிப்பாளரிடம் அந்த தொகையை கொடுத்துள்ளாராம் பா.ரஞ்சித்.

இதனையடுத்து படப்பிடிப்பில் பிரச்சனையாகி பாதியிலேயே நிற்கிறதாம் தங்கலான் திரைப்படம்.

ஒருத்தருக்கு சுண்டு விரலே போய்டுச்சு.. தங்கலான் படத்தில் நடிகர்கள் பட்ட அவதிகள்!..

தமிழில் தரமான திரைப்படங்கள் எடுப்பவர்கள் என்று கூறப்படும் இயக்குனர்களில் இயக்குனர் பா ரஞ்சித்தும் ஒருவர். பா.ரஞ்சித் சமூகப் பிரச்சினைகளை பேசும் அதே நேரத்தில் வரலாற்றில் நடந்த பல விஷயங்களை தனது திரைப்படம் மூலமாக வெளிக் கொண்டு வருவார்.

சிங்கப்பூரில் தமிழ்நாட்டு மக்கள் பண்ணை அடிமை முறையில் பணிபுரிந்ததை தனது கபாலி திரைப்படத்தில் கூறி இருப்பார். அதேபோல காலா திரைப்படத்தில் தாராவியில் வாழும் தமிழ் மக்கள் பற்றி பேசியிருப்பார்.

இந்த நிலையில் தற்சமயம் மற்றொரு வரலாற்று திரைப்படமாக தங்கலான் திரைப்படத்தை எடுத்திருக்கிறார் பா.ரஞ்சித். இந்த திரைப்படத்தில் பணிபுரிந்த அனைவருமே படப்பிடிப்பில் மிகவும் கஷ்டப்பட்டதாக கூறுகின்றனர். அதில் ஒருவர் கூறும் பொழுது படத்தில் நடித்த அனைவருமே செருப்பை போடாமல்தான் படத்தில் நடித்தோம்.

ஏனெனில் அந்தப் பகுதியில் செருப்பு போட்டுக் கொண்டு நடக்க முடியாது அப்படியான ஒரு சூழல். அதில் விக்ரம் மாதிரியான நடிகர்கள் கோவணம் கட்டிக்கொண்டு நடிப்பது போன்ற காட்சி இருந்த பொழுது இயக்குனர் ரஞ்சித்தும் கூடவே கோவணம் கட்டிக்கொண்டு நின்றார்.

எதற்கு என்று கேட்கும் பொழுது அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரும் கட்டிக்கொண்டு நின்றார். ஆனால் பல இடங்களுக்கு செருப்பு இல்லாமல் பயணம் செய்த பொழுது பலருக்கும் காலில் அடிபட்டது அதில் ஒருவருக்கு சுண்டு விரலே இல்லாமல் போய்விட்டது.

எப்படியும் படபிடிப்பு முடிவதற்குள் ஒவ்வொரு நபருக்கும் 100க்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டிருக்கும் என்று அவர் கூறுகிறார். விக்ரமும் கூட தங்கலான் படம் குறித்து கூறும் பொழுது மற்ற எந்த படத்தையும் விட தங்கலான் படத்திற்கு அதிகமாக கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

பாலா ஷங்கரை விட ரஞ்சித் படத்துல ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்… ஓப்பனாக கூறிய விக்ரம்!..

Vikram in thangalaan : தமிழ் சினிமாவில் அதிகமாக மாறுவேடம் போட்டு திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். அவரது திரைப்படத்தில் அதிகம் மாறு வேடங்கள் இருக்கிறது என்றாலே உடனே அந்த படத்திற்கு நடிக்க சென்று விடுவார்.

அப்படி அவர் நடித்த இருமுகன், கோப்ரா, ஐ போன்ற திரைப்படங்களில் பல வேடங்களில் அவர் நடித்திருப்பதை பார்க்க முடியும். அப்படியாக தற்சமயம் ரஞ்சித் இயக்கும் தங்கலாம் திரைப்படத்திலும் புதிய கெட்டப்பில் அறிமுகமாகி இருக்கிறார் விக்ரம்.

இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்து படம் குறித்து அதிக வரவேற்பு நிலவி வருகிறது. தமிழில் ஒரு சிறப்பான திரைப்படம் வரவிருக்கிறது என்று மக்கள் மத்தியில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் பட விழாவில் விக்ரம் கலந்து கொண்ட பொழுது பாலா, சங்கர், ரஞ்சித் மாதிரியான மூன்று பெரியஇயக்குனர்கள் திரைப்படத்தில் பணிபுரிந்து இருக்கிறீர்கள்.

அந்த மூன்று படங்களிலுமே கடினமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள் இதில் எது உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்று விக்ரமிடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த விக்ரம் பாலா இயக்கிய சேது படமாக இருக்கட்டும். ஷங்கர் இயக்கிய ஐ படமாக இருக்கட்டும் இப்போது நடிக்கும் தங்கலானாக இருக்கட்டும் அனைத்து படங்களிலுமே மிகவும் கஷ்டப்பட்டு தான் நடித்திருக்கிறேன்.

ஆனால் தங்கலான் படத்துடன் ஒப்பிடும் பொழுது சேது திரைப்படம் அல்லது ஐ திரைப்படம் எனக்கு பெரிய கஷ்டமே கிடையாது, அந்த அளவிற்கு தங்கலான் திரைப்படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் உடலளவிலும் மனதளவிலும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் விக்ரம்.

ஒரே படத்தில் சம்பளத்தை கூட்டிய விக்ரம்.. விஜய் அஜித்துக்கு போட்டியா வருவார் போல!..

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்க கூடியவர் நடிகர் விக்ரம். ஒரு திரைப்படத்திற்காக உடல் எடையை கூட்ட வேண்டும் என்றாலும் குறைக்க வேண்டும் என்றாலும் அதற்கு எந்த ஒரு தயக்கமும் கூறாமல் செய்யக்கூடியவர் விக்ரம்.

ஆனால் சில காலங்களாக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் பெரிதாக வரவேற்பை பெறாத காரணத்தினால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வீழ்ச்சியை கண்டு வந்தார் விக்ரம். ஆனாலும் அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் முழு முயற்சியுடன்தான் நடித்து வருகிறார் என்பதை அவரது திரைப்படங்களில் பார்க்கும் போதே தெரிகிறது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் விக்ரமிற்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருந்தது. பொன்னியின் செல்வனின் அவர் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது.

அதைத் தொடர்ந்து தற்சமயம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். தங்கலான் திரைப்படம் தனது மார்க்கெட்டை பெரிதாக உயர்த்தும் என நம்புகிறார் விக்ரம்

இதனால் சில நாட்களாக வேறு எந்த திரைப்படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார். ஏனெனில் தங்கலான் திரைப்படம் தரும் வரவேற்பு அவருக்கு சம்பளத்தை உயர்த்தும் என்று நம்பினார். தங்கலான் திரைப்படத்திற்கு 22 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார் விக்ரம்.

ஆனால் தற்சமயம் அடுத்து கமிட்டாகும் திரைப்படத்திற்கு அவருக்கு 50 கோடி சம்பளமாக தருவதாக பேசப்பட்டுள்ளது. இப்படியே கதைகளை தேர்ந்தெடுத்துச் சென்றால் கண்டிப்பாக விஜய் அஜித்திற்கு ஒரு போட்டியான நடிகராக விக்ரம் வந்து நிற்பார் என்று சீயான் ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர்.