Tag Archives: Vikram

விக்ரம் படத்துடன் கனெக்ட் இருக்கா… கூலி படம் குறித்து வந்த அப்டேட்..!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அவற்றிற்கு நல்ல வகையிலான வரவேற்பு என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் இப்போது வர இருக்கும் கூலி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு என்பது இருந்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார் என்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றி படங்களாகதான் அமைந்தன. இந்த நிலையில் கூலி திரைப்படமும் கூட நல்ல வெற்றி படமாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படம் பேன் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜை பொறுத்தவரை அவர் இயக்கும் படங்கள் எல்லாம் பெரும்பாலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கும். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி,விக்ரம், லியோ திரைப்படங்களோடு தொடர்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் விக்ரம் கதாபாத்திரத்திரத்திற்கு கூலி படத்தில் ஒரு கேமியோ வைக்கலாம் என யோசித்து வருகிறாராம் லோகேஷ் கனகராஜ். அப்படி காட்சி இருக்கும் பட்சத்தில் பல வருடங்களுக்கு பிறகு ரஜினியும் கமலும் சேர்ந்து நடித்த படமாக கூலி திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.

வீர தீர சூரன்ல இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… உருக்கமாக வீடியோ வெளியிட்ட விக்ரம்.!

நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக வீர தீர சூரன் திரைப்படம் இருந்தது. இயக்குனர் அருண் குமார் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு நடுவே வெளியாகியது.

பெரும்பாலும் நடிகர் விக்ரமை பொறுத்தவரை அவர் ஒவ்வொரு திரைப்படத்தில் நடிப்பதற்குமே அதிகப்பட்சமான உழைப்பை போடுகிறார். ஆனாலும் கூட அவர் நடிக்கும் நிறைய திரைப்படங்கள் எதிர்பார்க்கும் வெற்றியை பெற்று தருவதில்லை.

அந்த வகையில் வீர தீர சூரன் திரைப்படம் பழைய விக்ரமின் ஆக்‌ஷன் திரைப்படங்களை போலவே அமைந்திருந்தது. இதனால் விக்ரமின் ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்திருந்தது.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் இந்த திரைப்படம் குறித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது வீர தீர சூரன் திரைப்படத்திற்காக மிக கடினமாக உழைத்தோம். படம் வருவதற்கு முன்பே பலரும் இந்த படத்தை புகழ்ந்து பேசினர். ஆனாலும் படம் முதல் நாள் வெளியாக இருந்தப்போது பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் படத்தில் இரண்டு காட்சிகள் ரத்தானது. ஆனால் அதற்கு பிறகு வெளியாகியும் கூட வீர தீர சூரன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என கூறி அதற்காக ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார் விக்ரம்

வீர தீர சூரன் தடை நீக்கம் படம் எப்போ ரிலீஸ்..!

சித்தா படத்தை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த திரைப்படம் வீர தீர சூரன் பாகம் 2. இந்த படம் ஒரு முழு ஆக்‌ஷன் ப்ளாக் திரைப்படமாகும். தமிழ்நாடு முழுக்கவே இந்த படத்தின் மீது அதிக ஆர்வம் இருந்து வந்தது.

இந்த படத்தில் விக்ரம், எஸ்.ஜே சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நிதி வழங்கிய பிரச்சனையில் பி.4.யு என்கிற நிறுவனம் படத்தின் மீது டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.

அதனை தொடர்ந்து இன்று காலை 9 மணி காட்சிகள் ஏற்கனவே நீக்கப்பட்டு இருந்தன. மேலும் 4 வாரங்களுக்கு இந்த படத்தை வெளியிட கூடாது எனவும் அறிவித்திருந்தது டெல்லி உயர்நீதி மன்றம்.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரும் பி.4.யு நிறுவனமும் தற்சமயம் சுமூகமான பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து படத்திற்கு விதித்த தடையை நீக்கிய உச்சநீதிமன்றம். ஆனால் வீர தீர சூரன் வெளியாக இருந்த திரையரங்குகளில் எல்லாம் பெரும்பாலும் இன்று வெளியான எம்புரான் திரைப்படம் மாற்றப்பட்டுள்ளது.

எனவே மாலை காட்சிகளில் இருந்து வீர தீர சூரனுக்கு திரையரங்குகள் ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது,

 

 

 

படப்பிடிப்பில் கண்ணீர் வடித்த இயக்குனர்.. வீர தீர சூரன் படத்தில் இயக்குனர் செய்த சம்பவம்.!

நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாக இருக்கும் திரைப்படம் வீர தீர சூரன். இந்த திரைப்படத்தின் சில பிரச்சனைகள் காரணமாக முதல் காட்சியே 11 மணிக்குதான் வெளியாக இருக்கிறது.

சிறப்பு காட்சிகள் எதுவும் இந்த திரைப்படத்திற்கு வழங்கப்படவில்லை. ஆனால் இந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அருண்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் நடித்த மலையாள நடிகரான சுராஜ் பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. இயக்குனர் அருண்குமாரை பொறுத்தவரை ஒரு காட்சி நன்றாக வரவில்லை என்றால் திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டே இருப்பாராம்.

உதாரணத்திற்கு ஒரு நாள் இரவில் படப்பிடிப்பு காட்சியை எடுக்கப்பட வேண்டி வந்தது அந்த காட்சி திரும்பத் திரும்ப எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவதற்கு காலை நான்கு மணி ஆகிவிட்டது.

ஆனாலும் கூட காலை 4 மணிக்கு கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தாராம் இயக்குனர். என்னவென்று கேட்ட பொழுது இந்த காட்சியே எனக்கு பிடிக்கவில்லை மீண்டும் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது என கூறி இருக்கிறார்.

மீண்டும் ஒரு நாளில் போட வேண்டிய ஷெட்டை மறுபடி அரை மணி நேரத்தில் போட்டு இருக்கின்றனர் அதன் பிறகும் படப்பிடிப்பு முடிந்த பிறகு இவர் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார் என்னவென்று கேட்டபோது இப்பொழுது ஆனந்தத்தில் அழுகிறேன் என்று கூறியிருக்கிறார் அருண்குமார் இந்த விஷயத்தை சுராஜ் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

ப்ரீ புக்கிங்கிலேயே அதிக வசூல்..! மாஸ் காட்டிய வீர தீர சூரன்..!

நடிகர் விக்ரம் நடிப்பில் பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படமாக வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் வர இருக்கிறது. இந்த மாதம் 27 ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தை பொருத்தவரை முதலில் இரண்டாம் பாகமும் அதற்குப் பிறகு முதல் பாகமும் வெளியாக இருக்கிறது. வெகு காலங்களுக்கு பிறகு நடிகர் விக்ரம் நடிக்கும் முழு ஆக்ஷன் கிரைம் திரைப்படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படமாவது அவருக்கு நல்ல வெற்றியை பெற்று தர வேண்டும் என்று இது குறித்து பேச்சுக்கள் இருக்கின்றன. இந்நிலையில் பிரீ புக்கிங் ஓபன் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 80 லட்சம் மதிப்பிலான டிக்கெட் இந்த படத்திற்காக விற்பனையாகி இருக்கின்றன.

இதுவே படத்திற்கு ஒரு வகையில் வெற்றி தான் என்று பேச்சுக்கள் இருக்கின்றன

அஜித் மேல வன்மம் ஓ.கே. சூர்யா,விக்ரம் மேல எதுக்கு வன்மம்.. விஜய் செயலால் அதிருப்தியில் இருக்கும் பிரபலங்கள்.!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்தாலும் கூட இப்பொழுது அதை விட்டு விலக இருக்கிறார். தொடர்ந்து அடுத்து அரசியலில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார் விஜய்.

மேலும் மொத்தமாக சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபாடு காட்டி இருக்கிறார். அடுத்து விஜய்யின் இடத்தை யார் பிடிப்பார் என்கிற கேள்வி தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. ஏனெனில் ரஜினியை விடவும் அதிக சம்பளம் வாங்கும் ஒரு உச்சபட்ச நடிகராக இருந்து வந்தார் விஜய்.

அப்படி இருக்கும் பொழுது இப்பொழுது இருக்கும் எந்த ஒரு நடிகருமே அந்த ஒரு உச்சத்தை தொட முடியாது. ஆனால் போட்டி நடிகராக பார்க்கும் பொழுது விஜய்க்கு அடுத்து முக்கிய நடிகராக தமிழ் சினிமாவில் இருப்பவர் நடிகர் அஜித் மட்டும் தான்.

vijay sivakarthikeyan

விஜய் கொடுத்த அங்கீகாரம்:

எனவே அஜித் வேண்டுமானால் அந்த இடத்தை பிடிக்கலாம் என்று ஒரு பேச்சு இருந்து வருகிறது. ஆனால் இதற்கு நடுவே சிவகார்த்திகேயன் போன்ற சில நடிகர்களின் பெயரும் அடிபட்டு வந்தன. ஆனால் அதை உறுதி செய்யும் வகையில் கோட் திரைப்படத்தில் ஒரு காட்சியை விஜய் வைத்திருந்தார்.

அதில் சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கியை கொடுப்பது போல காட்சி இருக்கும். உடனே சிவகார்த்திகேயன் உங்களுக்கு நிறைய வேலை இருக்கு நீங்க அத பாருங்க நாங்க இத பாக்குறோம் என்று கூறியிருப்பார். விஜய் இப்படி ஒரு சலுகையை ஏன் சிவகார்த்திகேயனுக்கு கொடுக்க வேண்டும்.

விஜய்க்கு அடுத்த இடத்தில் அஜித் இருக்கிறார். அஜித் போட்டி நடிகர் என்பதால் அவரை கூறவில்லை ஆனால் விக்ரமும் சூர்யாவும் விஜய் இருந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்து சினிமாவில் முக்கிய நடிகர்களாக இருந்து வருகின்றனர். விஜய்க்கு அடுத்தபடியான நிலையை அவர்களுக்கு தானே விஜய் கொடுத்திருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகிறது.

தங்கலான் முதல் நாள் வசூல் நிலவரம்!.. இத்தனை கோடியா?

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம்தான் தங்கலான். இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் இதற்கு நடுவே இன்னும் சில திரைப்படங்களும் நேற்று வெளியாகி உள்ளது.

இதற்கு நடுவே ரசிகர்கள் சிலர் இது அபகலிப்டோ என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பி என்று ஒரு பக்கம் பேசி வருகின்றனர். ஆனால் பெரும்பாலும் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே பெரும் வெற்றியை கொடுக்க கூடியவை.

பா.ரஞ்சித் வெற்றி படங்கள்:

அவர் இயக்கிய திரைப்படத்திலேயே நட்சத்திரம் நகர்கிறது என்கிற திரைப்படம் மட்டும்தான் பெரிதாக வெற்றியை பெறவில்லை மற்ற திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை பெற்ற படங்களாகதான் இருந்து வருகின்றன.

இதனால் கண்டிப்பாக சியான் விக்ரமின் தங்கலான் நல்ல வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தங்கலானை பொருத்தவரை இது வெள்ளையர்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் நடக்கும் கதையாக இருந்து வருகிறது.

இந்த சமயத்தில் பண்ணை அடிமை முறையில் பணி புரிந்து வரும் பழங்குடியின மக்களுக்கு தங்கத்தை தேடும் வாய்ப்பு கிடைக்கிறது. அதனை தொடர்ந்து அந்த மக்கள் தங்களுக்கான தங்கத்தை எப்படி தேடி எடுக்கப் போகிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று இந்த திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது பலருக்கும் எதிர்பார்ப்பை தூண்டும் விஷயமாக இருந்து வருகிறது.

பட வசூல்:

தங்கலான் திரைப்படத்திற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரைப்படங்கள் மீது வெளிநாட்டினர் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றனர்.

அதனை தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும் இந்த மாதிரியான திரைப்படங்களை வாங்க துவங்கியிருக்கின்றன. தற்சமயம் தங்கலான் திரைப்படத்தையும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்தான் வாங்கி இருக்கிறது 35 கோடிக்கு இந்த திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கி இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் இந்திய அளவில் இந்த திரைப்படம் 12 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் அமெரிக்காவிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது தங்கலான்.  நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 75 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்துள்ளது தங்கலான் என்று கூறப்படுகிறது எந்த ஒரு தமிழ் திரைப்படமும் இதற்கு முன்பு அமெரிக்காவில் இவ்வளவு வசூல் செய்தது கிடையாது என்றும் கூறப்படுகிறது 

தங்கலான் படம் எப்படி இருக்கு!.. வெளிவந்த முதல் விமர்சனம்!..

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் என்றால் தங்கலான். நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிய இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரும்.

நடிகர் விக்ரமுடன் மாளவிகா மோகன், பார்வதி திருவோத்து, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பூர்வ குடி தமிழர்களின் வரலாற்று பேசும் வகையில் உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்தின் கதை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எழுந்திருக்கிறது. தற்போது இந்த படத்தின் முதல் விமர்சனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விக்ரமின் நடிப்பில் தங்கலான் திரைப்படம்

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் தங்கலான் இந்த திரைப்படம் தமிழ், மலையாள, ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா, ரஞ்சித்தின் படம் எப்பொழுதும் ரசிகர்களின் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு பெரும் அந்த வகையில் நடிகர் விக்ரம் நடித்து வரும் இந்தத் திரைப்படம் அனைவரின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்திற்காக நடிகர் விக்ரம் 30 கிலோ எடை வரை குறைத்து மிகவும் கடுமையாக உழைத்து உள்ளார் என்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்திற்காக நடிகர் விக்ரமிற்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன்ஸ் மற்றும் நீலம் பட தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படம் தமிழ்நாடு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் 2000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

படத்தைக் குறித்து நடிகர் விக்ரம் கூறியது

தற்பொழுது படம் வெளியாக குறைந்த நாட்கள் உள்ளதால் படத்திற்கான ப்ரமோஷன் பணியில் படக்குழு இறங்கி இருக்கிறது. மேலும் உண்மை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நான்கு பாகங்களாக எடுக்கக்கூட வாய்ப்பிருக்கிறது என நடிகர் விக்ரம் தெரிவித்து இருக்கிறார். இது மேலும் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அவர் கூறும் பொழுது இந்த படத்தில் கதைக்களம் நான்கு பாகங்கள் எடுக்கக்கூடிய அளவிற்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தப்பு பண்ணுனார்!.. அநியாயமாக பலி போட்ட இளையராஜா!.. கமல் கடுப்பாக வாய்ப்பிருக்கு!..

இளையராஜா பாடல்களுக்கு காப்புரிமை குறித்த பிரச்சனை தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே சென்றுக்கொண்டுள்ளது. இளையராஜா அவர் இசையமைத்த பாடல்களுக்கான காப்புரிமையை அவருக்கு வழங்க வேண்டும்.

அதன்படி இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவதற்கு அவருக்கு ஒரு உரிமை தொகையை பயன்படுத்துபவர்கள் கொடுக்க வேண்டும் என்பது இளையராஜாவின் வாதமாக இருக்கிறது. ஆனால் ஒரு பாடலுக்கான காப்புரிமை என்பது பொதுவாக தயாரிப்பாளரை சார்ந்தது. அதை எந்த நிறுவனத்திற்கு வேண்டுமானாலும் அவர்கள் விற்று கொள்ளலாம்.

ilayaraja

இந்த நிலையில் இளையராஜா இப்படி கேட்பது புது விஷயமாக இருப்பதால் நீதிமன்றமே இதற்கு என்ன தீர்ப்பளிப்பது என்று தெரியாமல் இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் அனிரூத் இசையில் கூலி திரைப்படத்தில் வெளிவந்த பாடலில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்த பாடலுக்கு காப்புரிமை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் இளையராஜா. மேலும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் மற்றும் ஃபைட் க்ளப் போன்ற படங்களில் தனது பாடலை பயன்படுத்தியிருப்பதையும் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

ஆனால் விக்ரம் திரைப்படத்தின் பாடலானது கமலுக்கு உரிதானதாகும். ஏனெனில் பழைய விக்ரம் திரைப்படத்தை தயாரித்ததே கமல்தான். இப்படியிருக்கும்போது அதையும் தனது லிஸ்ட்டில் சேர்த்திருப்பது கமலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இப்படி பண்ணுனா அந்த விக்ரம் படம் ஓடாது!.. தயாரிப்பாளர் வார்னிங்கை கண்டு கொள்ளாததால் அடி வாங்கிய இயக்குனர்!.. தேவையா இது?

தமிழ் திரையுலகில் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் சிலர் ஒரு திரைப்படத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை உடனே கண்டுப்பிடித்துவிடுவார்கள். அந்த வகையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவும் சினிமாவில் மிக முக்கியமானவர்.

இயக்குன சுசி கணேசன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு இயக்கத்தில் அந்த சமயத்தில் உருவான திரைப்படம் கந்தசாமி. அந்த திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். அதற்கு முன்பு சுசி கணேசன் இயக்கியிருந்த திருட்டு பயலே திரைப்படம் கொஞ்சம் வரவேற்பை பெற்றிருந்தது.

ஏன் கந்தசாமி திரைப்படம் தோல்வியை தழுவியது என்பது குறித்து கலைப்புலி எஸ்.தாணுவிடம் கேட்கும்போது “அந்த படம் வெற்றியை கொடுத்திருக்க வேண்டிய திரைப்படம்தான். ஏனெனில் வித்தியாசமான கதையை அது கொண்டிருந்தது.

ஆனால் மொத்தமாக மூன்று மணி நேரம் 10 நிமிடங்கள் இருந்தது அந்த படம். எனவே நான் இயக்குனரிடம் அதை குறைக்கும்படி கூறினேன். ஒருவன் வீட்டில் இருந்து கிளம்புவது முதல் படம் பார்த்து செல்வது வரை சேர்த்து பார்த்தால் மொத்தமாக அவனுக்கு 5 மணி நேரம் செலவாகிவிடும்.

படம் அதிக நேரம் இருப்பதாக பேச்சுக்கள் இருந்தாலே அது படத்தை பாதித்துவிடும் எனவே அரை மணி நேரத்தை குறைத்துவிடுங்கள் என கூறினேன். ஆனால் இயக்குனர் கேட்கவில்லை. அதே போலவே இறுதியில் படம் அதிக நேரம் இருப்பதுதான் அதன் தோல்விக்கு காரணமானது என்கிறார் கலைப்புலி எஸ் தாணு.

தங்கலானுக்கு பிறகு பா.ரஞ்சித்தின் புது முயற்சி!.. லோகேஷ் கனகராஜ் கூட பண்ணுனது கிடையாதே!..

தமிழில் சமூகநீதி திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். பெரும்பாலும் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படங்களில் படத்தின் கதையில் அரசியல் ரீதியாக ஏதாவது ஒரு விஷயத்தை பேசியிருப்பார்.

மேலும் அந்த படங்கள் நல்ல வெற்றியையும் கொடுத்துவிடும். ஆனால் நட்சத்திரம் நகர்கிறது மாதிரியான சில திரைப்படங்கள் அவருக்கு அவ்வளவாக வெற்றியை பெற்று தரவில்லை. இந்த நிலையில் தற்சமயம் நடிகர் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை இயக்கி வருகிறார் பா.ரஞ்சித்.

Pa-Ranjith-

பழங்குடி இன மக்களுக்கு தங்கம் எடுக்க வரும் கும்பலுக்கும் இடையே நடக்கும் கதை இது என பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த படத்தை பா.ரஞ்சித் மற்றும் விக்ரம் இருவருமே மலை போல நம்பியிருக்கின்றனர். ஏனெனில் விக்ரமிற்கும் இதற்கு முன்பு பெரிதாக வெற்றி படங்கள் அமையவில்லை.

பா.ரஞ்சித்தின் அடுத்த திட்டம்:

இந்த நிலையில் தங்கலான் திரைப்படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் இயக்க போவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அட்டக்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறாராம். மேலும் ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் நடித்த நடிகர்களைதான் இந்த படத்திற்கும் அவர் தேர்ந்தெடுத்துள்ளாராம்.

thangalaan1

பொதுவாக பெரிய பட்ஜெட்டில் ஹிட் கொடுத்துவிட்டால் அந்த இயக்குனர்கள் அடுத்த படத்தை இன்னும் பெரிய பட்ஜெட்டில்தான் இயக்குவார்கள். லோகேஷ் கனகராஜ் மாதிரியான பெரும் இயக்குனர்களே அப்படிதான் படம் இயக்கி வருகின்றனர்.

ஆனால் அதற்கு மாறாக பா.ரஞ்சித் அடுத்து குறைந்த பட்ஜெட்டில் படம் இயக்குவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகப்பட்சம் இந்த படத்தை பா.ரஞ்சித்தே தயாரிப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தங்கலானை தொடர்ந்து வரிசையாக ஸ்கோர் செய்யும் விக்ரம்!.. லிஸ்ட்டுல மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனரும் இருக்காராம்!.

தமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி தேடி நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். பொதுவாக அவர் நடிக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் காரணமாக அவருக்கு பெரிய ரசிகர்கள் உண்டு.

ஆனால் சமீபத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் எதுவுமே எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. சொல்லப்போனால் அவை மக்கள்  மத்தியில் அதிருப்தியைதான் ஏற்படுத்தின. கோப்ரா மாதிரியான திரைப்படங்களில் விக்ரம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் கதைரீதியாக மிகவும் சுமாரான கதையாக இருந்ததால் அந்த கதை ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.

vikram

இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தங்கலான் திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, பொதுவாகவே பா.ரஞ்சித் திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல வெற்றியை கொடுக்க கூடியவை என்பதால் தங்கலான் நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்து சித்தா திரைப்படத்தின் இயக்குனரான அருண் குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம். சித்தா திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம் விக்ரம்.

manjummel-boys-malayalam

மஞ்சுமல் பாய்ஸ் தென்னிந்திய அளவில் சிறப்பான வெற்றியை கொடுத்தது. அதற்கு இயக்குனர் படத்தை சிறப்பாக உருவாக்கி இருந்ததே காரணமாக இருந்தது. எனவே இந்த படம் கண்டிப்பாக விக்ரமிற்கு ஒரு சிறப்பான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தங்கலானை தொடர்ந்து வரிசையாக இன்னும் இரண்டு வெற்றி படங்களை விக்ரம் கொடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக பேச்சுக்கள் உள்ளன.