Tag Archives: Vikram

இயக்குனர் ஷங்கரே அமைதியாக இருக்கார் உங்களுக்கென்ன?.. தேர்தல் பிரச்சனையில் சிக்கிய தங்கலான் திரைப்படம்!..

Director Shankar: சமீபத்தில் விக்ரம் நடித்த திரைப்படங்கள் எதுவுமே அவருக்கு அவ்வளவாக பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது என்றாலும் அதில் விக்ரம் மட்டுமே கதாநாயகனாக நடிக்கவில்லை.

அது இல்லாமல் தனியாக விக்ரம் நடித்த திரைப்படங்கள் எதுவும் நல்ல வெற்றியை கொடுக்கவில்லை. இருந்தாலும் நடிப்பு ரீதியாக அவர் தன்னுடைய முழுமையான நடிப்பை அதில் வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அடுத்து விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படமாக இருக்கிறது.

vikram thangalaan

இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான பொழுதே மக்களுக்கு வரவேற்பு அதிகரித்துவிட்டது. அந்த அளவிற்கு படமும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்த நிலையிலும் இன்னும் படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படாதது குறித்து நிறைய சர்ச்சைகள் எழுந்து வந்தன.

உண்மையை கூறிய பா.ரஞ்சித்:

பா.ரஞ்சித்திற்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை என்றெல்லாம் பேச்சுக்கள் வர துவங்கின. இந்த நிலையில் இது குறித்து பேசிய பா.ரஞ்சித் தற்சமயம் தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கலாம் என்று காத்திருக்கிறோம்.

படத்தின் முழு படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து விட்டன தேர்தலுக்குப் பிறகு தணிக்கை குழுவிற்கு அனுப்பி சான்றிதழ் பெற்று படத்தை வெளியிட்டு விடுவோம் எனவே தேவையில்லாத சர்ச்சைகளை நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார் பா.ரஞ்சித்.

தேர்தல் சமயத்தில் படத்தை வெளியிடுவது என்பது கடினமான விஷயமாகும். இதனால்தான் இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டையே தேர்தலுக்கு பிறகு வைத்துள்ளனர். இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் பா.ரஞ்சித் படத்தை வெளியிடுவது அவருக்கு ரிஸ்க் என்பதை மிகத் தாமதமாகதான் அறிந்திருக்கிறார். அதனால்தான் அதற்குள்ளாகவே இப்படியான சர்ச்சைகள் மக்கள் மத்தியில் எழ துவங்கி இருக்கின்றன.

மாயாவை நம்பாத!.. உனக்கு ஆப்புதான்!.. விக்ரமிற்கு சிஸ்டர் கொடுத்த அட்வைஸ்!..

பிக்பாஸ் துவங்கி சில வாரங்கள் முதலே பிக்பாஸ் வீட்டில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் போட்டியாளராக மாயா இருந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற ஆரம்பக்கட்டத்தில் மாயா கொஞ்சம் அமைதியாகதான் இருந்தார்.

ஆனால் ஒரு சில வாரங்களிலேயே தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு வீட்டில் இருப்பவர்களை கேலிவதை செய்ய துவங்கிவிட்டார். இதனால் அர்ச்சனாவும் விச்சித்திராவும் அதிகமாக பாதிக்கப்பட்டனர் என கூறலாம்.

இன்னும் சிலரிடம் முகத்திற்கு முன்பு நன்றாக பழகினாலும் கூட முகத்திற்கு பின்னால் அவர்களை குறித்து வேறு விதமாக பேசுகிறார். விக்ரம் விஷயத்தில் இப்படியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டனர். அந்த வகையில் விக்ரமின் சகோதரி விக்ரமிற்காக வந்திருந்தார். அப்போது விக்ரமிடம் பல விஷயங்களை அவர் பேசிக்கொண்டிருந்தார்.

பிக்பாஸில் யாரையெல்லாம் நம்பலாம் என அவர் கூறும்போது பூர்ணிமாவை கூட நீ நம்பலாம். ஆனால் மாயாவை நம்பாதே. ஏனெனில் அவள் முன்னால் ஒன்றை பேசிவிட்டு பின்னால் ஒன்றை பேசுகிறார். முக்கியமாக உனக்கு 5 ஸ்டார் கொடுத்ததற்காக அவள் மிகவும் கோபப்பட்டாள்.

எனவே மாயாவை நம்பாதே என அறிவுரை வழங்கியுள்ளார் விக்ரமின் சகோதரி.

ரவீனா விக்ரம் மீது குவியும் வன்மங்கள்!.. அடுத்த எலிமினேஷன் யார்!..

பிக்பாஸ் நிகழ்வு துவங்கி கிட்டத்தட்ட 80 நாட்களை தொட போகிறது. 100 ஆவது நாள் மொத்தமே வீட்டில் 3 பேர்தான் இருக்க வேண்டும். ஆனால் அநியாயத்திற்கு இந்த முறை 10 பேருக்கும் அதிகமாக உள்ளனர். எனவே வாரம் இருவரை எலிமினேஷன் செய்யலாம் என திட்டமிடப்பட்டது.

ஆனால் அப்படியும் கூட இருக்கும் நபர்களை வெளியேற்ற முடியாது. எனவே வாரம் 4 நபர்களை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்து எலிமினேஷன் ஆகும்  2 நபர்களை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களே தேர்வு செய்யலாம்.

raveena-daha

ஓட்டுகளில் உள்ள பெரும்பான்மையை அடிப்படையாக கொண்டு அதிக ஓட்டு வாங்கிய இருவர் பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆவார்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதற்கான ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் ரவீனா மற்றும் விக்ரமிற்குதான் பெரும்பாலான ஓட்டுக்கள் போடப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. அதிலும் முதல் இடத்தில் ரவீனதான் இருக்கிறார் என தெரிகிறது. எனவே ரவீனாவும் விக்ரமும் எலிமினேட் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகாது!.. மன்னிச்சுக்கோங்க.. கையை விரித்த கௌதம் மேனன்.. கவலையில் ரசிகர்கள்!.

Vikram Dhuruva natchathiram : சியான் விக்ரம் நடித்து, கௌதம் வாசு தேவமேனன் இயக்கத்தில் இன்று வெளிவர இருந்த “துருவ நட்சத்திரம்” திரைப்படம் இன்று திரைக்கு வராது என்று இயக்குனர் அறிவித்துள்ளார். துருவ நட்சத்திரம் திரைப்படம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டே இருக்கிறது.

படம் ஆரம்பித்ததில் இருந்து பொருளாதார நிலையில் ஏற்பட்ட சிக்கலால் படபிடிப்பு அவ்வபோது தடைபட்டுவந்தது. இந்த பொருளாதார நிலையை சரிசெய்யத்தான் நான் படங்களில் நடிக்கவும் செய்தேன் என்று பேட்டி ஒன்றில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்திருந்தார்.

நடிகர் விக்ரம் நடித்து வெளிவந்த பெரும்பாலான படங்கள் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பிற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி இன்று படம் வெற்றிகரமாக வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் மீண்டும் படத்தை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதற்கான காரணம் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும் பணப்பிரச்சனை காரணமாகத்தான் இன்று படவெளியீடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பரவி வருகிறது.

மேலும் படம் இன்னும் ஓரிரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் தனது “X” தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இந்த படவெளியீடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை விக்ரம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அடுத்து படவெளியீடு தேதி அறிவித்தாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு குறையும் என்று கூறப்படுகிறது.

அர்த்தமில்லாம பாடுனாதான் காசு கிடைக்கும்… பாட்டுலையே கலாய்த்து விட்ட இளையராஜா!..

அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இளையராஜா கடும் கஷ்டங்களை அனுபவித்துள்ளார். உதாரணமாக சாலை ஓரங்களிலும் மெரினா கடற்கரையிலும் அமர்ந்து அப்போது பாடல் பாடுவாராம் இளையராஜா.

ஏனெனில் தினசரி சாப்பிடுவதற்கே காசு இல்லாத நிலையில் அவர் இருப்பார். இந்த நிலையில் அவர் பட்ட கஷ்டங்களையும் அவரது வாழ்க்கையையும் குறிக்கும் விதமாக பல பாடங்களில் அவர் பாடல் வரிகளை எழுதுவது உண்டு.

கரகாட்டக்காரன் திரைப்படத்தில் பாட்டாலே புத்தி சொன்னான் என்கிற பாடலை பாடியிருப்பார் இளையராஜா. அந்த பாடல் முழுக்க முழுக்க அவரை பற்றி அவரே பாடிய பாடலாகும். இதே போல காசி திரைப்படத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அதுக்குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

காசுக்காக நான் பாடும் பாடல்கள் அனைத்துமே அர்த்தமற்ற பாட்டுக்கள்தான். அவற்றை பணம் ஈட்டவே நான் இசைக்கிறேன். அந்த பொருளற்ற பாடலையும் காசு கொடுத்து வாங்கி செல்கின்றார்கள் என்கிற  அர்த்தத்தில் என் மன வானில் என்கிற பாடலில் சில வரிகளை பாடியிருந்தார் இளையராஜா.

பொருளுக்காய் பாட்டை சொன்னால்

பொருளற்ற பாட்டே ஆகும்

பாடினேன் அதை நாளும் நாளும்

பொருளில்லா பாட்டானாலும்

பொருளையே போட்டு செல்வார்

போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம் என்கிற வரிகளே அவை..

டைட்டிலுக்காக சண்டை செய்யுங்க விசித்ரா!.. தூண்டிவிட்ட பிக்பாஸ்!.. டைட்டில் வின்னர் விக்ரமிற்கே போட்டியா!..

Bigg boss tamil vichitra : ஆரம்பத்தில் மெதுவாக துவங்கினாலும் போக போக சூடு பறக்க சென்று கொண்டுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. அதிலும் வைல்ட் கார்டு மூலமாக 5 புது போட்டியாளர்கள் வந்தப்பின் இன்னும் சண்டை சச்சரவுகள் அதிகமாகிவிட்டன.

தற்சமயம் வைல்ட் கார்டில் வந்த போட்டியாளர்களில் அர்ச்சனாவிற்கும், தினேஷிற்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். விசித்திரா முதலில் பிக்பாஸ் வீட்டில் ராசியாக இருந்தாலும் கூட மாயா கேப்டன் ஆன பிறகு விசித்திரா அர்ச்சனா பக்கம் சாய்ந்துவிட்டார்.

அர்ச்சனாவிற்கு பாதுக்காப்பு அளித்ததற்காக வெகுவாக பாராட்டப்பட்டார். இந்த நிலையில் விசித்திரா வந்தப்போது அனைவரையும் தனது மகன் மகள் போல பார்க்கிறேன் என கூறியிருந்தார். அது முழுவதும் பொய் என மாயாவின் புல்லி கேங் பேசியதில் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார் விசித்திரா.

இந்த நிலையில் பிக்பாஸிடம் சென்ற விசித்திரா, ஒரு தாயின் அன்பை பொய் என அவர்கள் அழைப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. நான் இந்த டைட்டில் ஜெயிப்பதற்காக எல்லாம் பிக்பாஸிற்கு வரவில்லை என கூறினார்.

அதற்கு பதிலளித்த பிக்பாஸ் “விசித்திரா நீங்கள் ஏற்கனவே பிக்பாஸில் பாதி கிணறை தாண்டி விட்டீர்கள். நல்ல விதமாக விளையாடி வருகிறீர்கள் எனவே உங்கள் பலம் என்னவென்று அறிந்து அவர்களுடன் போட்டியிடுங்கள். டைட்டிலுக்காக விளையாடுங்கள்” என அறிவுரை கூறினார்.

ஏற்கனவே நான்தான் டைட்டில் வின்னர் என விக்ரம் கூறியதில் இருந்து அவரை கலாய்த்து வரும் நெட்டிசன்கள், விக்ரம் டைட்டில் வின்னராக இருக்கும்போது பிக்பாஸ் எதற்கு விசித்திராவை தூண்டி விடுகிறார் என்று காமெடி செய்து வருகின்றனர்.

ஒருத்தருக்கு சுண்டு விரலே போய்டுச்சு.. தங்கலான் படத்தில் நடிகர்கள் பட்ட அவதிகள்!..

தமிழில் தரமான திரைப்படங்கள் எடுப்பவர்கள் என்று கூறப்படும் இயக்குனர்களில் இயக்குனர் பா ரஞ்சித்தும் ஒருவர். பா.ரஞ்சித் சமூகப் பிரச்சினைகளை பேசும் அதே நேரத்தில் வரலாற்றில் நடந்த பல விஷயங்களை தனது திரைப்படம் மூலமாக வெளிக் கொண்டு வருவார்.

சிங்கப்பூரில் தமிழ்நாட்டு மக்கள் பண்ணை அடிமை முறையில் பணிபுரிந்ததை தனது கபாலி திரைப்படத்தில் கூறி இருப்பார். அதேபோல காலா திரைப்படத்தில் தாராவியில் வாழும் தமிழ் மக்கள் பற்றி பேசியிருப்பார்.

இந்த நிலையில் தற்சமயம் மற்றொரு வரலாற்று திரைப்படமாக தங்கலான் திரைப்படத்தை எடுத்திருக்கிறார் பா.ரஞ்சித். இந்த திரைப்படத்தில் பணிபுரிந்த அனைவருமே படப்பிடிப்பில் மிகவும் கஷ்டப்பட்டதாக கூறுகின்றனர். அதில் ஒருவர் கூறும் பொழுது படத்தில் நடித்த அனைவருமே செருப்பை போடாமல்தான் படத்தில் நடித்தோம்.

ஏனெனில் அந்தப் பகுதியில் செருப்பு போட்டுக் கொண்டு நடக்க முடியாது அப்படியான ஒரு சூழல். அதில் விக்ரம் மாதிரியான நடிகர்கள் கோவணம் கட்டிக்கொண்டு நடிப்பது போன்ற காட்சி இருந்த பொழுது இயக்குனர் ரஞ்சித்தும் கூடவே கோவணம் கட்டிக்கொண்டு நின்றார்.

எதற்கு என்று கேட்கும் பொழுது அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரும் கட்டிக்கொண்டு நின்றார். ஆனால் பல இடங்களுக்கு செருப்பு இல்லாமல் பயணம் செய்த பொழுது பலருக்கும் காலில் அடிபட்டது அதில் ஒருவருக்கு சுண்டு விரலே இல்லாமல் போய்விட்டது.

எப்படியும் படபிடிப்பு முடிவதற்குள் ஒவ்வொரு நபருக்கும் 100க்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டிருக்கும் என்று அவர் கூறுகிறார். விக்ரமும் கூட தங்கலான் படம் குறித்து கூறும் பொழுது மற்ற எந்த படத்தையும் விட தங்கலான் படத்திற்கு அதிகமாக கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

பாலா ஷங்கரை விட ரஞ்சித் படத்துல ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்… ஓப்பனாக கூறிய விக்ரம்!..

Vikram in thangalaan : தமிழ் சினிமாவில் அதிகமாக மாறுவேடம் போட்டு திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். அவரது திரைப்படத்தில் அதிகம் மாறு வேடங்கள் இருக்கிறது என்றாலே உடனே அந்த படத்திற்கு நடிக்க சென்று விடுவார்.

அப்படி அவர் நடித்த இருமுகன், கோப்ரா, ஐ போன்ற திரைப்படங்களில் பல வேடங்களில் அவர் நடித்திருப்பதை பார்க்க முடியும். அப்படியாக தற்சமயம் ரஞ்சித் இயக்கும் தங்கலாம் திரைப்படத்திலும் புதிய கெட்டப்பில் அறிமுகமாகி இருக்கிறார் விக்ரம்.

இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்து படம் குறித்து அதிக வரவேற்பு நிலவி வருகிறது. தமிழில் ஒரு சிறப்பான திரைப்படம் வரவிருக்கிறது என்று மக்கள் மத்தியில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் பட விழாவில் விக்ரம் கலந்து கொண்ட பொழுது பாலா, சங்கர், ரஞ்சித் மாதிரியான மூன்று பெரியஇயக்குனர்கள் திரைப்படத்தில் பணிபுரிந்து இருக்கிறீர்கள்.

அந்த மூன்று படங்களிலுமே கடினமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள் இதில் எது உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்று விக்ரமிடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த விக்ரம் பாலா இயக்கிய சேது படமாக இருக்கட்டும். ஷங்கர் இயக்கிய ஐ படமாக இருக்கட்டும் இப்போது நடிக்கும் தங்கலானாக இருக்கட்டும் அனைத்து படங்களிலுமே மிகவும் கஷ்டப்பட்டு தான் நடித்திருக்கிறேன்.

ஆனால் தங்கலான் படத்துடன் ஒப்பிடும் பொழுது சேது திரைப்படம் அல்லது ஐ திரைப்படம் எனக்கு பெரிய கஷ்டமே கிடையாது, அந்த அளவிற்கு தங்கலான் திரைப்படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் உடலளவிலும் மனதளவிலும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் விக்ரம்.

லியோ இரண்டாம் பாகத்துக்கு பிறகுதான் விக்ரம் அடுத்த பார்ட் வரும்… இன்னும் பல வருஷம் ஆகும் போலயே!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் பெரும் அலையை ஏற்படுத்தியது. முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட 450 கோடிக்கு ஓடி தமிழில் முதல் வாரத்தில் அதிகமாக ஓடிய இரண்டாவது திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது.

முதல் இடத்தில் ரஜினி நடித்த 2.0 திரைப்படம் இருக்கிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விக்ரம் கமல் லியோவிற்கு ஃபோன் செய்து பேசுவது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து லோகேஷிடம் பேட்டியில் கேட்கும் பொழுது கைதி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட இருக்கிறது.

அதற்குப் பிறகு ரோலக்ஸ் திரைப்படம் எடுக்கப்பட வேண்டும். அதற்கு பிறகுதான் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் வரும் என்று கூறினார் அப்பொழுது நிருபர் லியோ படத்தின் இரண்டாவது பாகமும் வர இருப்பதாக கூறப்படுகிறது என கேட்கும் பொழுது அது சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் சார் என்று கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

பொதுவாக லோகேஷ் கனகராஜ் ஒரு விஷயம் சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று கூறினார் என்றால் அது நிச்சயமாக நடக்க இருக்கிறது என்றுதான் அர்த்தம். ஏனெனில் லியோ படம் எல்.சி.யு வில் வருகிறதா என்று கேட்டப்போதும், அது ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் படத்தின் தழுவலா என கேட்டப்போது அது சர்ப்ரைஸ் என்றே கூறினார் லோகேஷ்.

அதேபோலவே அவை இரண்டுமே உண்மையாகின. அந்த வகையில் லியோ படத்தின் இரண்டாம் பாகம் இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர் கைதி படத்தின் இரண்டாம் பாகம் ரோலக்ஸ், லியோ 2 என்று மூன்று படங்களை முடித்த பிறகுதான் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் வரும் என்பதால் அதற்கு இன்னும் காலங்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னோட நிஜ பேரு அது கிடையாது!.. இவ்வளவு பெரிய பேரா?.. சீக்ரெட்டை உடைத்த விஜய் சேதுபதி!..

தமிழில் ஹீரோ வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து அசத்தக்கூடியவர் நடிகர் விஜய் சேதுபதி. பொதுவாக ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள்.

ஏனெனில் அப்படி நடிப்பதன் மூலம் அவர்களது சினிமா வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படலாம் என்று நினைப்பார்கள். இருந்தாலும் விஜய் சேதுபதி எந்தவித தயக்கமும் இல்லாமல் வில்லனாக நடிக்கக் கூடியவர். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவர் எந்த படத்தில் வில்லனாக நடிக்கிறாரோ அந்த திரைப்படத்தில் ஹீரோவை விட வில்லனுக்கு அதிக வரவேற்பு வந்துவிடுகிறது.

உதாரணமாக விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் அதிகமாக பாராட்டப்பட்டது. விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் பேசும்பொழுது அவரை பற்றிய மிக பெரும் உண்மை ஒன்றை வெளியிட்டிருந்தார். அது விஜய் சேதுபதியின் முழு பெயர் விஜய் சேதுபதி கிடையாது. அவருடைய முழு பெயர் விஜய குருநாத சேதுபதி காளிமுத்து என்பதே ஆகும் என்று கூறியுள்ளார். அந்த பெயரை சினிமாவிற்கு வந்த பிறகு சுருக்கி வைத்துக் கொண்டுதான் விஜய் சேதுபதி என மாற்றியுள்ளார்.

சமையற்கட்டில் ஆட்டமோ ஆட்டம்.. பசியில் ஹவுஸ்மேட்ஸ் திண்டாட்டம்! – குழப்பத்தில் விக்ரம்!

பிக்பாஸ் ஏழாவது சீசனில் மெல்ல பரபரப்புடன் முதல் வாரம் முடிவடைந்த நிலையில் இரண்டாவது வாரம் சண்டை காட்சிகள் அரங்கேறி வருகிறது. முதல் வாரத்தில் வீட்டு தலைவராக இருந்த விஜய் வர்மா ஓரளவு அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களையும் சமாளித்தார். ஆனால் இந்த இரண்டாவது வாரத்தில் தலைவராக பொறுப்பேற்றுள்ள விக்ரம் சரவணன் இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்.

விக்ரமால் ஸ்மால் ஹவுஸ்க்கு அனுப்பப்பட்ட விஷ்ணு, விஜய், மாயா ஆகியோர் தலைவரான விக்ரமை மதிக்காமல் செயல்படுவதுடன் ஹவுஸ் மேட்ஸ் கேட்கும் உணவுகளையும் சரியாக செய்து தராமல் சும்மா சும்மா சண்டை போட்டு வருகின்றனர். ஆனால் எப்போதுமே சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பிரதீப் இந்த வாரம் மிகவும் பொறுப்பாக சமையல் வேலைகளை எடுத்து செய்து வருகிறார்.

உணவை சரியாக சமைத்து தராததுடன் ’உங்களால ஆனத பாத்துக்கோங்க’ என விஷ்ணு குரூப் பிரச்சனை செய்து வருவதால் மற்ற ஹவுஸ்மேட்ஸ் சரியாக சாப்பிட முடியாமல் பட்டினி கிடக்கின்றனர். இது குறித்து வீட்டு தலைவரான விக்ரம் சரவணனிடம் அவர்கள் முறையிட்டு வருகின்றனர். ஆனால் விக்ரம் சரவணன் யாரையும் எதிர்த்துப் பேச முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்திலேயே இருந்து வருகிறார்.

இதனால் விக்ரம் சரவணனை அழைத்து பேசிய பிரதீப் பிரச்சனை இல்லாமல் சமையல் வேலைகளை சமாளிப்பது குறித்து அவருக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஆனால் விக்ரம் சரவணன் பிரச்சினை செய்து வரும் விஷ்ணு குரூப்பை எதிர்த்துப் பேசி வேலையை வாங்கினால் மட்டுமே இந்த பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

தளபதியை அசிங்கப்படுத்த நினைத்த விழாக்குழு.. ஒன்று கூடிய நடிகர் குழு.. விஜய்னா சும்மாவா!.

தமிழ் சினிமா நடிகர்களை பொருத்தவரை அவர்களுக்குள் சினிமாவில் எவ்வளவு போட்டிகள் இருந்தாலும் வெளியிடங்களில் துறை சார்ந்து யாரும் யாரையும் விட்டுக் கொடுத்துக் கொள்வதில்லை.

அப்படி ஆனால் ஒரு சம்பவம் இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவில் நடந்தது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் சினிமா நடிகர்களை கௌரவிக்கும் விதமாக இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா நடந்தது.

அதில் இறுதி நாள் நடக்கும் பொழுது சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர்களில் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நடிகர் விஜய் அந்த விழாவிற்கு வந்த போது அவருக்கு எந்தவித நாற்காலியும் ஒதுக்கவில்லை.

இதனால் பொதுமக்கள் அமரும் இடத்தில் விஜய்யை அமர வைத்தனர். இது விஜய்க்கு மிகப்பெரிய அவமானமாக இருந்தது. அதனை பார்த்த விக்ரம், மனோபாலா, சௌந்தர்யா ரஜினிகாந்த் போன்றவர்கள் விஜய்யுடன் போய் சேர்ந்து உட்கார்ந்து கொண்டனர்.

அதனால் அவர்கள் அமர்ந்திருந்த முன் இருக்கைகள் காலியாக இருந்தன. விஜய் அவமானப்படுத்த நினைத்து கடைசியில் இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவில் முன் இருக்கைகள் காலியான சம்பவம் நடந்தது.