Tag Archives: இளையராஜா

இளையராஜாவுக்கு பிறகு அதே பெருமையை பெற்ற அனிரூத்..!

தற்சமயம் தென்னிந்திய சினிமாவில் அதிக மதிப்பு பெற்ற ஒரு இசையமைப்பாளராக இருந்து இருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். அனிருத் இசையமைக்கும் படங்களில் பெரும்பாலும் ஒரு சில பாடல்களாவது வெற்றி பாடல்களாக அமைந்திருந்தன.

இந்த நிலையில் நிறைய மற்ற மொழி நடிகர்கள் அனைவரும் தங்களது திரைப்படங்களுக்கு அனிரூத் இசையமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அனிரூத் மீது அதிகம் மரியாதை வைத்த ஒரு நடிகராக விஜய் தேவரகொண்டா இருந்து வருகிறார். முன்பே அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது தமிழில் உள்ள பெரும் இயக்குனர்களை ஒரு பக்கம் வைத்து மறுபக்கம் அனிருத்தை வைத்தால் நான் அனிரூத்தைதான் தேர்ந்தெடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த அளவிற்கு அனிரூத்திற்கு விஜய் தேவரகொண்டா ரசிகராக  இருந்து வந்தார். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

தற்சமயம் அந்த படத்தின் பேனர்கள் வைக்கும் பொழுது அனிருத்க்கும் மிக உயரமான பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதற்கு முன்பு இசையமைப்பாளருக்கு பெரிய பேனர் வைத்த நிகழ்வு இளையராஜாவிற்கு மட்டும்தான் நடந்திருந்தது. இப்பொழுது அதே கௌரவத்தை பெற்ற இசையமைப்பாளராக அனிருத் மாறி இருக்கிறார்.

 

 

நீங்க எல்லாம் சாந்தமான ஆளு.. நான் தான் கோபக்காரன்.. கடுப்பான இளையராஜா..!

இசைஞானி இளையராஜா தொடர்ந்து இசை கச்சேரிகளை அதிகமாக நடத்தி வருகிறார். சினிமாவில் பாடல்களுக்கு இசையமைப்பதை விடவும் இசை கச்சேரிகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இளையராஜாவின் இசை கச்சேரிகளுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருக்கும் காரணத்தினால் தமிழ்நாடு முழுவதுமே வெவ்வேறு பகுதிகளில் இசை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

சமீபத்தில் ஜூன் 14ஆம் தேதி புதுச்சேரியிலும் அதே மாதிரி கச்சேரி நடந்தது புதுச்சேரியில் நடந்த கச்சேரியில் ஜனனி ஜனனி, தென்றல் வந்து தீண்டும் போது போன்ற பல பாடல்களை பாடி இருந்தார் இளையராஜா.

இந்த நிலையில் ரசிகர்கள் எப்பொழுதுமே இளையராஜா மிகவும் கோபக்காரர் என்ற விமர்சனத்தை வைத்து வருகின்றனர். அதற்கு தகுந்தார் போல புதுச்சேரியில் நடந்த கச்சேரியில் கங்கை அமரன் சொர்க்கமே என்றாலும் பாடலை பாடும் பொழுது டிரம்ஸ் இசை சரியாக வரவில்லை.

அதற்காக இளையராஜா கோபித்துக் கொண்டார் மேலும் அவர் கோபப்படுவது குறித்து அந்த மேடையில் பேசியிருந்தார் அதில் இளையராஜா கூறும் பொழுது நான் ஏதாவது சொன்னா உடனே இளையராஜா ரொம்ப கோபப்படுகிறார் என்று சொல்றீங்க நீங்க எல்லாம் ரொம்ப சாந்தமான ஆட்கள் கோபப்படவே மாட்டீங்க என்று இளையராஜா கிண்டலாக பதில் அளித்து இருந்தார்.

என் பாட்டுக்கே காசு கொடுக்கிறேன்.. இளையராஜா விஷயத்தால் மனம் வருந்திய கே.எஸ் ரவிக்குமார்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக இயக்குனராக நிலைத்து நின்ற பிரபலமான இயக்குனர்களில் கே.எஸ் ரவிக்குமாரும் முக்கியமானவர். தமிழில் டாப் நடிகர்களான பலருடன் வேலை பார்த்து இருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார்.

பல நடிகர்களை வைத்து ஹிட் திரைப்படங்களையும் கொடுத்திருக்கிறார் முக்கியமாக நடிகர் கமல்ஹாசனை வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார். இந்த நிலையில் கே.எஸ் ரவிக்குமார் சமீபத்தில் இளையராஜாவின் காப்பிரைட் பிரச்சனைகள் குறித்து பேசி இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது ஒரு பாடலுக்கான காப்புரிமையை ஒரே ஒரு இசையமைப்பாளர் மட்டும் எப்படி பெற முடியும். ஒரு பாடல் மக்கள் மத்தியில் சென்று பிரபலம் அடைவதற்கு அப்படியான ஒரு சூழ்நிலையை உருவாக்கிய இயக்குனர் தான் காரணம்.

ks-ravikumar

அந்த சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தான் படத்தில் இசையமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள். அதேபோல அதற்கு செலவு செய்த தயாரிப்பாளரும் காரணம் தான். அப்படி இருக்கும் பொழுது பாட்டிற்கான காப்புரிமை தயாரிப்பாளரைதான் சென்றடைய வேண்டும்.

நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எனது பாடலை போடுவதற்கு நான் பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது. நான் இயக்கிய படங்களுக்கு தேவா இளையராஜா, ஏ ஆர் ரகுமான் என்று பலரும் இசையமைத்து இருக்கின்றனர்.

அந்த பாடல்களை எல்லாம் நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் போட வேண்டுமென்றால் அதற்கு ஒரு தொகையை கொடுத்து நானே காப்புரிமை வாங்க வேண்டி இருக்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார்.

இத்தனை நாள் தெரியவே இல்லை..! ஏ.ஆர் ரகுமானின் ரகசியத்தை உடைத்த இளையராஜா.!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு பிறகு அதிக பிரபலமடைந்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். முதல் திரைப்படத்திலேயே பெரும்பாலான ரசிகர்களை பிடித்தார் ஏ.ஆர் ரகுமான்.

இதனால் ஏ.ஆர் ரகுமானுக்கு எடுத்த உடனேயே அதிக பிரபலம் கிடைத்தது. அதுவரை இளையராஜாதான் தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் அதற்கு பிறகு இளைஞர்களுக்கு பிடித்த இசையமைப்பாளராக மாறினார் ஏ.ஆர் ரகுமான்.

ஆனாலும் இளையராஜாவின் இசைக்கு இப்போதும் ரசிகர்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் ரோஜா திரைப்படம் வந்த காலக்கட்டத்தில் இருந்தே இளையராஜாவுக்கு போட்டி இசையமைப்பாளராக ஏ.ஆர் ரகுமான் தான் பார்க்கப்படுகிறார்.

ar rahman

ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பாளராக மாறுவதற்கு முன்பு இளையராஜாவிடம்தான் உதவியாளராக பணிப்புரிந்து வந்தார். இந்த நிலையில் ஒருமுறை இளையராஜா ஏ.ஆர் ரகுமான் இருவருமே ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.

அந்த சமயத்தில் பேசிய இளையராஜா கூறும்போது ஏ.ஆர் ரகுமான் என்னுடன் இணைந்து 500க்கும் அதிகமான படங்களில் வேலை பார்த்திருக்கிறார். என கூறினார். மேலும் ஏ.ஆர் ரகுமானிடம் திரும்பி இதையெல்லாம் நீ சொல்லணும் மக்கள்கிட்ட என கூறியிருந்தார்.

ஏ.ஆர் ரகுமான் இளையராஜாவிடம் உதவியாளராக இருந்தார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் இளையராஜாவின் திரைப்படங்களில் 500க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் பணிப்புரிந்து இருப்பார் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும்.

இந்திய சினிமாவில் பெரும் சாதனை.. ஏழு முறை ரீமேக் செய்யப்பட்ட இளையராஜாவின் பாடல்.. எந்தெந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மாபெரும் இசை அரசனாக அறியப்படுபவர் இசைஞானி இளையராஜா. இளையராஜா பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் அவர் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் பெரும் வெற்றியை கொடுத்தன. இந்த நிலையில் ஒரே பாடலை ஆறு முறை வேறு வேறு படங்களில் வேறு வேறு சூழ்நிலைக்கு தகுந்தவாறு இசையமைத்துள்ளார் இளையராஜா.

இப்படி ஒரு விஷயத்தை இந்திய அளவில் எந்த இசையமைப்பாளரும் செய்தது இல்லை. அதை பற்றி இப்போது பார்க்கலாம். 1981 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஓலங்கள் என்கிற திரைப்படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்தான் தும்பிவா தும்பகுடத்தில், இந்த பாடலை ஜானகி பாடியிருந்தார்.

மலையாளத்தில் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அதே வருடம் தமிழில் வந்த ஆட்டோ ராஜா என்கிற திரைப்படத்தில் சங்கத்தில் பாடாத கவிதை என்னும் பாடலாக அமைத்தார் இளையராஜா. இந்த பாடலையும் ஜானகிதான் பாடினார்.

இந்த நிலையில் 1986 ஆம் ஆண்டு நீர்ஷனா என்கிற தெலுங்கு படத்தை இயக்கினார் பாலுமகேந்திரா. அந்த படத்தில் தும்பிவா பாடலை மூன்றாவது முறையாக ஆகாஷம் யேனாடிதோ என்கிற பாடலாக பாடினார்கள். பிறகு நான்காவது முறையாக நீர்ஷனா திரைப்படம் 1988 இல் தமிழில் கண்ணே கலைமானே என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது.

அதில் நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே என்று பாடல் வரிகளை மாற்றி அதே பாடல் இசையமைக்கப்பட்டது. இந்த பாடலையும் ஜானகிதான் பாடினார். இதற்கு அடுத்து எட்டு வருடங்கள் கழித்து 1996 இல் ஹிந்தியில் ஆர் எக் பிரேம் கஹானி என்கிற திரைப்படம் ஒன்று வெளியானது.

அதில் மண்டே தொ உட்கர் என்கிற பாடலாக மீண்டும் அதே பாடல் ஐந்தாவது முறையாக வெளியானது. இதற்கு பிறகு 2004 ஆம் ஆண்டு இளையராஜா இத்தலிக்கு இசை சுற்றுலா சென்றார். அப்போது இந்த பாடலை சர்வதேச தரத்துக்கு மாற்றி Mood kaapi என ஒரு பாடலாக ஆறாவது முறையாக வெளியிட்டார்.

இதெல்லாம் முடிந்த பிறகும் 2004 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்த பா திரைப்படத்தில் கும் சும் கும் என்று மீண்டும் ஒலித்தது ராஜாவின் அந்த பாடல்.

இப்படி இந்திய சினிமாவிலேயே அந்த ஒரு பாடல் மட்டும் 7 முறை மீண்டும் மீண்டும் பாடலாக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமானமே இல்லாமல் பாடகியை அவமானப்படுத்தினார்.. இளையராஜா குறித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன்.!

தொடர்ந்து இளையராஜா குறித்து சர்ச்சைக்குரிய விஷயத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசி வருகிறார். ஒரு பக்கம் அந்த கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் இருந்து வந்தாலும் ஒரு பக்கம் ஆதரவுகளும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இளையராஜா முன்பு ஒரு முறை மேடையில் வைத்து பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷலை அவமானப்படுத்திய விஷயம் குறித்த ஜேம்ஸ் வசந்தன் பேசியிருக்கிறார்.

பாடகி ஸ்ரேயா கோஷல் இந்திய அளவில் மிக பிரபலமானவர் ஆவார். ஹிந்தியில் நிறைய பாடல்களை பாடி இருக்கும் ஸ்ரேயா கோஷல் ஒரு பெங்காலி ஆவார். மற்ற மொழிகள் தெரியாது என்றாலும் கூட பாடல் வரிகளை பார்த்து பாடும் பொழுது மிகச் சிறப்பாக அந்த பாடலை பாடி விடுவதால் அவருக்கு எல்லா மொழிகளிலுமே வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

தமிழில் கூட பாடல்கள் பாடியிருக்கிறார். இந்த நிலையில் இளையராஜாவுடன் மேடையில் பாடும் பொழுது இளையராஜா இசையமைத்த ஒரு பாடலை தமிழில் பாடுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது ஸ்ரேயா கோஷல் அதை தவறாக பாடிவிட்டார்.

அதற்கு இளையராஜா தமிழிலேயே ஒரு கமெண்ட் கொடுத்து ஸ்ரேயா கோஷலை அவமானப்படுத்தி இருந்தார். இது எவ்வளவு மோசமான ஒரு விஷயம் அவருக்கு தெரியாத மொழியில் அவரை அவமானப்படுத்துவது சரியா என்று இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

இளையராஜாகிட்ட எனக்கு மரியாதை கிடைக்காது. அவர் வர வேண்டாம்.. நேரடியாக சொன்ன பாக்கியராஜ்..!

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு சினிமாவில் வாய்ப்பை பெற்று இயக்குனரானவர் பாக்கியராஜ். பாக்கியராஜை பொறுத்தவரை பெரும்பாலும் குடும்ப ஆடியன்ஸை ஈர்க்கும் வகையிலான கதை அமைப்பில்தான் திரைப்படங்களை இயக்குவார்.

இதனாலேயே அந்த சமயங்களில் பாக்கியராஜின் படங்களுக்கு தனி மவுசு இருந்து வந்தது. இப்போது இருக்கும் புகழ்பெற்ற இயக்குனர்களை விடவும் புகழ்பெற்றவராக பாக்கியராஜ் இருந்து வந்தார். ஆரம்பத்தில் பாக்கியராஜ் இயக்கிய திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் தான் இசையமைத்து வந்தார்.

bhagyaraj

ஆனால் ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் அவர் முந்தானை முடிச்சி திரைபபடத்தை இயக்க துவங்கிய பிறகு பாக்கியராஜின் படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்து வந்தார். அதற்கு பிறகு பாக்கியராஜ் அவராகவே இசையமைக்க கற்றுக்கொண்டார்.

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் இவர்கள் இருவரையும் குறித்து ஏ.வி.எம் ராஜன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது முந்தானை முடிச்சி படங்களுக்கு இசையமைக்கும் நாளில் நானும் அங்கு செல்வதாக இருந்தது.

ஆனால் அன்று இரவு போன் செய்த பாக்கியராஜ் ஏ.வி.எம் ராஜன் வந்தால் என்னை இளையராஜா மதிக்க மாட்டார். ஏனெனில் நான் ஒரு உதவி இயக்குனராக இருந்தவன். எனவே அவரை தயவு செய்து வர வேண்டாம் என கூறிவிடுங்கள் என கூறியுள்ளார்.

என்னை கேள்வி கேட்குறவனுக்கு எவ்வளவு கர்வம் இருக்கணும்..? விமர்சகர்களை வைத்து செய்த இளையராஜா.!

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் அதிக மதிப்பு வாய்ந்த இசையமைப்பாளராக பார்க்கப்படுபவர் இளையராஜா. ஒரு காலக்கட்டத்தில் இளையராஜாவின் பாடல்களுக்கு அதிக மதிப்பு என்பது இருந்தது. நிறைய படங்களில் படக்கதைகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் கூட இளையராஜாவின் பாடல்கள் அதில் சிறப்பாக இருக்கும்.

அந்த பாடல்களுக்காகவே திரைப்படங்கள் ஓடிய காலக்கட்டம் ஒன்று இருந்தது. இந்த நிலையில் இயக்குனர்கள் மலை போல இளையராஜாவின் பாடலை நம்ப துவங்கினர். தொடர்ந்து இளையராஜாவுக்கும் அதிக வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருந்தன.

ஆனால் இப்போது எவ்வளவோ புது இசையமைப்பாளர்கள் வந்துவிட்டனர். அவர்கள்தான் இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளராக இருக்கின்றனர். இளையராஜாவுக்கு இப்போது அந்த அளவிற்கு வாய்ப்புகள் என்பது இல்லை.

ilayaraja

இந்த நிலையில் எப்போதுமே இளையராஜாவை கர்வம் பிடித்தவர் என கூறும் ஒரு கூட்டமுண்டு. அந்த கூட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இளையராஜா சமீபத்தில் பேசியிருந்தார். அதில் இளையராஜா பேசும்போது எனது பாட்டுக்காக திரைப்படங்கள் ஓடிய காலக்கட்டம் உண்டு.

அந்த அளவிற்கு மதிப்பு வாய்ந்தவான இருந்த நான் கர்வமாக இருப்பதில் என்ன தவறு என கேட்டிருந்தார். மேலும் அவர் கூறும்போது என்னை கர்வம் பிடித்தவன் என கூறுகின்றனர். நான் கர்வம் பிடித்தவன் என்றால் என்னை அப்படி சொல்பவன் எவ்வளவு கர்வம் பிடித்தவனாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார் இளையராஜா.

ஒரு நாள் முழுக்க உங்க கூட இருக்கவா?. இளையராஜாவிடம் கோரிக்கை வைத்த நடிகை..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் நடிகர் ஸ்ரீ காந்த். நடிகர் பிரசாந்த் போலவே இவரும் சினிமாவிற்கு வந்தப்போது ஒரு சாக்லெட் பாயாக வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

ஏனெனில் இப்போது வரை ஸ்ரீ காந்துக்கு ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு மாதிரியான திரைப்படங்கள்தான் ஒரு அடையாளமாக இருந்து வருகின்றன. அவை இரண்டுமே காதல் கதையமைப்பை கொண்ட படங்களாக இருந்தன.

ஆனால் ஆக்‌ஷன் திரைப்படம் என வரும்போது பம்பர கண்ணாலே மாதிரியான படங்கள் அவருக்கு தோல்வியை ஏற்படுத்தின. இருந்தாலும் போஸ் மாதிரியான சில படங்கள் அப்போதும் அவருக்கு வரவேற்பை பெற்று கொடுக்கவே செய்தன.

இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் என்பது குறைய துவங்கியது. பிறகு துணை கதாபாத்திரம் கிடைத்தாலும் பரவாயில்லை என வாய்ப்புகளுக்காக காத்திருந்தார். அந்த சமயத்தில்தான அவருக்கு நண்பன் திரைப்படத்திலும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனாலும் அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வெகு வருடங்கள் கழித்து தற்சமயம் தினசரி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிந்தியா லோர்டே என்பவர் தயாரிக்கிறார்.

இவர்தான் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தார். இந்த நிலையில் அந்த அனுபவம் குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்துள்ளார். அதுக்குறித்து சிந்தியா கூறும்போது இளையராஜா சாரை முதன் முதலாக பார்த்தப்போது சந்தோஷமாக இருந்தது.

அவர் எங்களிடம் ரொம்ப நேரம் பேசி கொண்டிருந்தார். அப்போது இயக்குனர் லேட் ஆகுது போகலாமா என்றார். உடனே இளையராஜா அப்படி சீக்கிரமா போய் என்ன பண்ண போறீங்க என கேட்டார். உடனே நான் சார் உங்களோடு ஒரு நாள் இல்லை ஒரு வாரம் இருப்பதாக இருந்தாலும் எனக்கு ஓ.கே என்று கூறினேன். உடனே இளையராஜா சிரித்தார் என அந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

உனக்கு நாள் முடிஞ்சுட்டு கிளம்பு கிளம்பு.. சின்ன குயில் சித்ராவை வம்பு செய்த இளையராஜா..!

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்கள் எப்பொழுதுமே கொஞ்சம் கிண்டல் தனமான விஷயங்களை செய்யக்கூடியவர்கள். நிறைய விஷயங்களை பாடல் வரிகளின் மூலம் எளிதாக மக்களுக்கு வெளிப்படுத்தி விடுவார்கள்.

சில இடங்களில் ஒரு பாடல் வரியின் மூலமாகவே பெரிய அரசியல் விஷயங்களை கூட பாடல் ஆசிரியர்கள் பேசி விடுவார்கள். ஆனால் இசையமைப்பாளர்கள் கூட அந்த மாதிரியாக செய்த சம்பவம் ஒன்று தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது.

அப்படியான ஒரு விஷயத்தைதான் இசையமைப்பாளர் இளையராஜா செய்து இருக்கிறார். இளையராஜா ஆரம்பத்தில் ராஜ்கிரனின் எல்லா படங்களுக்கும் இசையமைத்து வந்தார். ராஜ்கிரனை பொறுத்தவரை இளையராஜா இசையமைத்தால் அந்த பாடல் நல்ல வெற்றியை கொடுக்கும் என்று கருதினார்.

இளையராஜா செய்த வேலை:

அந்த சமயத்தில்தான் பாடகி சொர்ணலதா தொடர்ந்து வரவேற்பை பெற்று வந்தார். இதனால் இளையராஜாவும் தனது பாடல்களில் ஸ்வர்ணலதாவை பாட வைக்க நினைத்தார்.

ilayaraja

ராஜ்கிரண் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம்  என் ராசாவின் மனசிலே. இந்த திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே நல்ல வெற்றியை கொடுத்தன. இந்த படத்தில் குயில் பாட்டு என்கிற ஒரு பாடலை சொர்ணலதாவை வைத்து பாட வைத்தார் இளையராஜா.

அப்பொழுது அந்த பாட்டுக்கான பாடல் வரிகளையும் இளையராஜாவே எழுதினார். அவ்வாறு எழுதும் பொழுது அப்போதைய சமகாலத்தில் இருந்த ஒரு விஷயத்தை அதில் பதிவு செய்திருந்தார்.

அதாவது சொர்ணலதா வளர்ச்சி பெற துவங்கிய பொழுது சின்ன குயில் சித்ராவிற்கு சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும் என்று பேச்சுக்கள் இருந்தன. அதை குறிப்பிடும் வகையில் குயிலே நீ போ, இனிமேல் நான் தானே என்று பாடல் வரிகளை வைத்து அதை ஸ்வர்ணலதாவை வைத்து பாட வைத்தார் இளையராஜா.

இப்படி ஒரு பாட்ட நான் கேட்டதே இல்ல.. இளையராஜாவின் அந்த பாட்டை கேட்டு ஆடிப்போன அமெரிக்கர்..!

தமிழ் மக்களால் எப்போதுமே அதிகமாக போற்றப்படும் ஒரு இசையமைப்பாளராக இருந்து வருபவர் இளையராஜா. ஒரு இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி ஒரு பெரிய சாதனையாளராக தான் அனைவராலும் இளையராஜா பார்க்கப்படுகிறார்.

அதற்கு முக்கிய காரணம் இளையராஜா பெரிதாக இசையை பற்றியே ஒன்றும் தெரியாமல் கிராமத்திலிருந்து வாய்ப்பு தேடி சினிமாவிற்கு வந்தவராவார்.

அப்படி வந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் ஒரு உச்சத்தை தொட்டிருக்கிறார் மேலும் உலக அளவிலேயே அவருக்கு அதிக அங்கீகாரம் இருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் தொடர்ந்து இளையராஜாவின் பாடல்களை கேட்டு கொண்டாடி வருவது அனைவரும் அறிந்த விஷயம்.

இளையராஜா பாடல்:

ilayaraja

ஆனால் வேறு நாட்டை சேர்ந்தவர்கள் இளையராஜாவை கொண்டாடும் பொழுது அது அதிக வியப்பையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. ஏனெனில் மற்ற நாட்டவர் நமது இளையராஜாவிற்கு ஒரு மரியாதை கொடுக்கிறாரே என்பது காரணம் தான் அது.

இந்த நிலையில் வெளிநாட்டவர் ஒருவர் ராஜராஜ சோழன் நான் பாடலை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறார் அதை தனது youtube சேனலிலும் பதிவேற்றியுள்ளார். மேலும் அவர் கூறும் பொழுது ஒரு ராகத்தில் இருந்து இன்னொரு ராகத்திற்கு இளையராஜா மிக எளிதாக மாறினார் அது அதிசயமாக இருந்தது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இளையராஜா படத்தை எடுத்தே ஆகணும்.. டெல்லி வரை சென்ற தனுஷ்..!

வெகு காலங்களாகவே நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முன்பெல்லாம் வெறும் ஆக்‌ஷன் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த தனுஷ் தற்சமயம் தேர்ந்தெடுக்கும் கதை களங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெறுகின்றன.

அதே மாதிரி வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் மாதிரியான இயக்குனர்கள் படங்களுக்கு இவர் முன்னுரிமை அளித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் இவரே இயக்கி வரும் திரைப்படம் இட்லி கடை. அதே மாதிரி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற திரைப்படத்தையும் இவர் இயக்கி வருகிறார்.

இதற்கு முன்பே அவர் கமிட்டான திரைப்படங்களில் நடிக்கவில்லை என்பது பெரிய பிரச்சனையானது. இதனை அடுத்து அட்வான்ஸ் வாங்கிய தயாரிப்பாளர்களுக்கு அவர் படம் நடித்து கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது. அப்படியே தனுஷும் நடித்து கொடுப்பதாக ஒப்பு கொண்டார்.

படத்தில் வந்த பிரச்சனை:

ilayaraja movie

இந்த நிலையில் தனுஷ் இதற்கு முன்பே கமிட்டான திரைப்படம் இளையராஜா. இந்த திரைப்படம் குறித்து இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. இளையராஜா திரைப்படம் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று கதை என்பதால் அதில் நடிப்பதற்கு தனுஷும் விருப்பம் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்சமயம் தனுஷிற்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்த தயாரிப்பாளர் இளையராஜா திரைப்படத்தை நிறுத்தி வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த படத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என தனுஷ் முடிவு எடுத்துள்ளார்.

எனவே பாலிவுட் பக்கம் போய் இந்த படத்திற்கு தயாரிப்பாளரை தேடி வருகிறாராம் தனுஷ். எனவே அடுத்த வருடம் கண்டிப்பாக இளையராஜா படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.