ஒரு மனுசனா நான் தோத்துட்டேன்.. இந்த பிறப்பே வேஸ்ட்.. ஓப்பன் டாக் கொடுத்த இளையராஜா.!
தமிழக மக்களால் கொண்டாடப்படும் திரை பிரபலங்களில் மிக முக்கியமானவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட எக்கச்சக்கமான பாடல்களுக்கு இசையமைத்து பல காலங்களாக முன்னிலையில் இருக்கும் ஒரு இசையமைப்பாளராக இளையராஜா இருந்து வருகிறார்.
ஆனால் இளையராஜா முன்பு ஒரு பேட்டியில் கௌதம் மேனனிடம் பேசிய விஷயங்கள் அதிக ஆச்சரியத்தை கொடுப்பதாக உள்ளன. அதில் இளையராஜா கூறும் பொழுது இளையராஜாவாக நான் பிரபலமாக இருந்தாலும் கூட ஒரு மனிதனாக நான் தோற்றுவிட்டேன் என்று தான் கூற வேண்டும்.

இந்த வாழ்க்கையே வேஸ்ட்:
எந்த ஒரு மனிதனாவது தன்னுடைய தவறுக்காக பெருமைப்படுவானா? அப்படி இருக்கும் பொழுது எப்படி என்னை நல்ல மனிதன் என்று கூற முடியும் என்று கூறிய இளையராஜா, மேலும் கூறும்பொழுது நான் தவறு என குறிப்பிடுவது என்னுடைய பிறப்பைதான் குறிப்பிடுகிறேன்.
எனது பிறப்பே ஒரு தவறுதான் ஒரு அர்த்தமற்ற வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். எப்பொழுதும் மக்கள் முன்பு பாடிக்கொண்டு அவர்களது கைதட்டலை வாங்கிக்கொண்டு இருப்பது என்ன ஒரு அர்த்தமான வாழ்க்கையாக இருக்கும் அதில் எந்த அர்த்தமும் கிடையாது என்று பேசி இருக்கிறார் இளையராஜா.