அஜித் படத்தில் கை வைத்த இளையராஜா… இங்கேயும் பிரச்சனையா?
தமிழில் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் இளையராஜா மிக மிக முக்கியமானவர் என்று கூறலாம். இப்பொழுது இருக்கும் இசையமைப்பாளர்கள் எல்லாம் 10 படங்களுக்கு இசையமைக்கவே அதிக சிரமப்பட்டு வரும் நிலையில் ஒரே நாளில் ஐந்து முதல் ஆறு படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா.
அந்த அளவிற்கு அவருக்கு ஒரு காலகட்டத்தில் மார்க்கெட் என்பது இருந்து வந்தது. தமிழ் சினிமாவிலேயே அதிக பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா தான் என்று கூறலாம். ஆனால் இளையராஜாவின் காப்புரிமை பிரச்சனை என்பது தொடர்ந்து இன்னமும் இருந்து கொண்டே இருக்கிறது.
இளையராஜாவை பொருத்தவரை அவரது அனுமதி இல்லாமல் அவரது பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்தக் கூடாது என்பது அவருடைய எண்ணமாக இருக்கிறது.
ஆனால் தமிழ் திரையுலகில் இருக்கும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் இளையராஜாவின் அனுமதி இல்லாமல் அவரது பாடல்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இதற்காக இளையராஜா தற்போது காப்புரிமை தொகை கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பத்திரிகையாளர் அந்தணன் கூறும் பொழுது இளையராஜா விஷயத்தில் சீக்கிரமாக ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஏனெனில் அவரது பாடல்களுக்கான காப்புரிமை என்பது அவரிடமும் இருக்கிறது.
அந்த படத்தின் தயாரிப்பாளர் இடமும் இருக்கிறது படக்குழு யாரிடம் காப்பிடுமே பெற்று பாடலை பயன்படுத்துவார்கள் என்பதை சிக்கலான விஷயமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார் அந்தணன்.