முதல் பார்வையிலேயே அவரை பார்த்து காதல் வந்துட்டு.. ஓப்பன் டாக் கொடுத்த நிவேதா பெத்துராஜ்.!

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் கூட மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். நிவேதா பெத்துராஜை பொருத்தவரை தமிழில் மிகப் பெரிய கதாநாயகியாக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது.

அவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களும் கூட வித்தியாசமான கதைக்களங்களை கொண்டதாக தான் இருந்தது. அதிகபட்சம் காதல் கதைகளை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்தார் நிவேதா பெத்துராஜ்.

nivetha-pethuraj

ஏனெனில் காதல் கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களில் கண்டிப்பாக கதாநாயகிக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கும். ஆனாலும் கூட நிவேதா பெத்துராஜ்க்கு ஒரு பெரிய நடிகைக்கு கிடைக்கும் அளவிற்கான மார்க்கெட் என்பது கிடைக்கவில்லை.

இப்பொழுது அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் தமிழ் சினிமாவில் இல்லை என்று தான் கூற வேண்டும். சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும்பொழுது அவருடைய காதல் கதை குறித்து கேட்கப்பட்டது. ஏதாவது ஒரு நபரை பார்த்தவுடனேயே நீங்கள் காதல் கொண்டு உள்ளீர்களா என்று நிவேதா பெத்துராஜிடம் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த நிவேதா ஆமாம் வெளிநாட்டில் ஒருமுறை ஒரு நபரை பார்த்த உடனேயே நான் அவர் மீது காதல் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.