Tag Archives: தமிழ் நடிகை

உடல் எடை குறைத்து ரீ எண்ட்ரி கொடுத்த நிவேதா தாமஸ்.. ஆளே மாறிட்டாரே..!

இளம் வயதிலேயே மலையாளம் தமிழ் இரண்டு மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை நிவேதா தாமஸ். பாபநாசம் திரைப்படத்தில் கமலுக்கு மகளாக நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட தெலுங்கு சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனால் மலையாளம் தெலுங்கு தமிழ் என்று மூன்று மொழிகளிலும் ஒரு புகழ் பெற்ற நடிகராக இவர் இருந்து வருகிறார்.

முக்கியமாக தமிழில் கமல் ரஜினிகாந்த் என்ற இரண்டு பேரும் நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் நிவேதா தாமஸ். தர்பார் திரைப்படத்தின் போதே நிவேதா தாமஸின் உடல் எடை அதிகரித்து இருந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகளே அவருக்கு கிடைக்காமல் போனது. இந்த நிலையில் மீண்டும் உடல் எடையை குறைத்து இருக்கிறார்  நிவேதா தாமஸ்.

 

உடல் எடையை குறைத்து திவ்ய பாரதி வெளியிட்ட புது பிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளுக்காக போராடிவரும் நடிகைகளில் முக்கியமானவர்கள் நடிகை திவ்யபாரதி.

இவர் நடித்த முதல் திரைப்படம் பேச்சிலர் திரைப்படம். இந்த திரைப்படம் பெரிதான வெற்றியை பெற்று தரவில்லை என்றாலும் கூட இவருக்கு அதிகமான கவர்ச்சி காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன.

இதனால் திவ்யபாரதிக்கு அந்த திரைப்படம் ஒரு முக்கியமான படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு ஒரு சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு பிறகு ஒரு பேசப்படும் படமாக இவர் நடித்த திரைப்படம் மகாராஜா. மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.

குறைவான காட்சிகளில் வந்தாலும் கூட அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் திவ்யபாரதி சமீபத்தில் உடல் எடை குறைப்பதில் ஈடுபட்டிருந்தார்.

அதற்கு பிறகு இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

மாடர்ன் உடையில் ரசிகர்களை சூடேத்தும் யாஷிகா ஆனந்த்..!

தமிழில் அறிமுகமாகும் பொழுதே சர்ச்சையான நடிகராக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரின் கதை தேர்ந்தெடுப்புகள் காரணமாக தமிழ் சினிமாவில் சீக்கிரத்திலேயே அவருக்கு வாய்ப்புகள் என்பது குறைந்து போனது.

இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் நடிகர் சந்தானம் நடித்த டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் சந்தானத்திற்கு தங்கையாக நடித்திருந்தார் யாஷிகா ஆனந்த்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் அதிக பிரபலமாகி வருகின்றன.

கவரும் புகைப்படங்களை வெளியிட்ட அனிரூத்தின் ஜோடி.. வைரலாகும் பிக்ஸ்.!

மேடையில் எப்பொழுதுமே இசையமைப்பாளர் அனிருத்துடன் ஜோடியாக பாடல் பாடக்கூடியவர் பாடகி ஜொனிடா காந்தி.

 

ஜெனிடா காந்தி பாலிவுட்டில் மிக பிரபலமான ஒரு பாடகி ஆவார். தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை அனிருத் கொடுத்து வந்தார்.

 

டாக்டர் பீஸ்ட் மாதிரியான திரைப்படங்களில் ஜெனிடா காந்தி பாடல்களை பாடி இருக்கிறார். தமிழே அவருக்கு தெரியாது என்றாலும் கூட சிறப்பான முறையில் தமிழில் அவர் பாடல்களை பாடுவதை பார்க்க முடியும் இந்த நிலையில் அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிடும் ஜொனிடா காந்தி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக வைரலாகியப்படுகிறது.

 

 

நம்ம ஐஸ்வர்யா ராஜேஷா இது.. மொத்தமாக லுக்கை மாற்றிய நடிகை..!

தனிப்பட்ட நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை திரைப்படம் தான் அவரை அதிக பிரபலமாக்கியது. காக்கா முட்டை திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகளும் அதிகமாக வந்தன. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படியாவது தமிழில் டாப் நடிகையாகிவிட வேண்டும் என்கிற முயற்சியில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் மாடர்ன் லுக்கில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இப்பொழுது பிரபலம் ஆகி வருகின்றன.

 

நடிகையை ரூமுக்கு அழைத்த நகை கடை அதிபர்.. இரவு முழுக்க தூங்காத சீரியல் நடிகை…!

நகை கடை விளம்பரத்துக்கு அழைத்து சென்று நடிகையிடம் தவறாக நடக்க முயற்சி செய்த விஷயம் இப்போது சினிமா வட்டாரத்தில் அதிக பேச்சு பொருளாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெகு  காலங்களாகவே இந்த நடிகை டாப் நடிகையாக இருந்து வந்துள்ளார்.

ஆனாலும் கூட இப்போது இவருக்கு  இப்போது பட வாய்ப்புகள் குறைவாகதான் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் தொடர்ந்து கடை திறப்பு விழா மாதிரியான விஷயங்களை செய்து வருகிறார். அப்படியாக ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற நிகழ்வை சமீபத்தில் இவர் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறும்போது கடை திறப்பு விழாவிற்கு முதல் நாள் எனக்கு அறை போட்டிருப்பதாக அந்த ஹோட்டல் மேலாளர் கூறினார். மறுநாள் காலையிலேயே கடை திறப்பு விழா என்பதால் நானும் முதல் நாளே அங்கு சென்று தங்கினேன்.

அப்போது எனக்கு போன் செய்த மேனாஜர் உங்களுக்கு எல்லா வசதியும் சரியாக இருக்கிறதா? என கேட்டார். நான் அது ஒன்றும் பிரச்சனை இல்லை என கூறினேன். பிறகு அவர் என்னிடம் ஹோட்டல் உரிமையாளர் உங்களை பார்க்க வரவேண்டும் என கூறினார் என்றார்.

நாளை விழாவில் பார்த்துக்கொள்ளலாம் எதற்கு இப்போது பார்க்க வருகிறார் என நான் கேட்டேன். அவர் உங்களது ரசிகர் உங்களுக்காக பரிசு வாங்கி வருகிறார் என்று மேலாளர் கூறினார். பிறகு அந்த முதலாளி வந்த பிறகுதான் அவர்கள் நோக்கம் என்னவென்று புரிந்தது. பிறகு எனக்கு இதில் விருப்பமில்லை என அந்த நபரை அனுப்பிவிட்டேன்.

இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. மறுநாள் விடிந்ததுமே அந்த அறையை காலி செய்துவிட்டு சென்றுவிட்டேன் என கூறியுள்ளார் நடிகை.

சிகப்பு உடையில் இளைஞர்களை கவரும் ராய் லெட்சுமி.. வைரல் பிக்ஸ்..!

தமிழில் மங்காத்தா, காஞ்சனா மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக அதிக பிரபலம் அடைந்தவர் ராய் லட்சுமி.

ராய் லட்சுமி சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது. ஆனால் போக போக கதாநாயகியாக கூட அவருக்கு வாய்ப்புகள் கேட்கவில்லை.

தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்குதான் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இருந்தாலும் கிடைத்துவரும் கதாபாத்திரங்களில் அவர் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் வெளிநாட்டிற்கு சென்ற ராய்லெட்சுமி சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தான் இப்பொழுது அதிக வைரல் ஆகி வருகின்றன.

 

குடும்பஸ்தன் நடிகையா இது? மாடர்னுக்கு மாறிய சான்வி மெகானா..!

குடும்பஸ்தன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சான்வி மெகானா.

ஒரு குடும்ப பெண்ணாக அவரது கதாபாத்திரம் பலரையும் ஈர்க்கும் வகையில் இருந்தது. அந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது அதனை தொடர்ந்து சான்வி மெகானாவிற்கு நிறைய வாய்ப்புகளும் இருக்கிறது.

 

 

இந்த நிலையில் குடும்பஸ்தன் திரைப்படத்தில் முழுக்க முழுக்க குடும்ப பெண்ணாக நடித்திருந்த சாந்தி தற்சமயம் அதிகம் மாடன் உடையில் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் அவை சமூகவலைத்தளங்களில் அதிக ட்ரெண்டாகி வருகின்றன.

 

 

சட்டையை கழட்டி போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ். இதை எதிர்பார்க்கல..!

நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டிற்கு சென்றது முதலே அவருடைய கவர்ச்சி காட்டும் விதம் என்பது மாறி இருக்கிறது.

ஆரம்ப காலகட்டத்தில் ரஜினி முருகன் திரைப்படம் மூலமாகதான் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் பெரிய நடிகர்களுடன் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

நடிகர் விஜய் விக்ரம் மாதிரி பலருடன் சேர்ந்து நடித்திருக்கிறார் ஆனால் பெரிதாக கவர்ச்சி காட்டி அவர் நடித்ததே கிடையாது. இந்த நிலையில் தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிப்பதற்கான வாய்ப்பு கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்தது.

ஆனால் அந்த படத்தில் நடிக்கும் போது இதுவரை தமிழில் காட்டாத அளவு கவர்ச்சி காட்டி நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைதளங்களிலும் கூட அதிக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இப்பொழுது அவை பிரபலமாக துவங்கியிருக்கின்றன.

4 வருஷம் என் வாழ்க்கையில் நடந்த கொடுமை.. காதலையே வெறுத்துட்டேன்.. நடிகை சோனா ஓப்பன் டாக்.!

நடிகை சோனா தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக வாய்ப்புகள் தேடி வந்த நடிகைகளின் மிக முக்கியமானவர் ஆவார். ஆரம்பத்தில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவிற்கு வந்தார் நடிகை சோனா.

ஆனால் அவருக்கு அதற்கான வாய்ப்புகள் என்பதே கிடைக்கவில்லை. கடந்த 20 வருடங்களுக்கும் அதிகமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் சோனா.

ஆனால் கதாநாயகியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட துணை கதாபாத்திரங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்த நிலையில் அவர் நடித்த ஒரு திரைப்படம் அதிக சர்ச்சையானதை தொடர்ந்து அவருக்கான வாய்ப்புகள் என்பது மொத்தமாக இல்லாமல் போனது. இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள்.

அந்த படத்தின் கதை என்னவென்று தெரியாமலேயே நான் நடித்து விட்டேன் என்று பத்துக்கு பத்து என்கிற அந்த திரைப்படம் குறித்து அவர் பேசியிருந்தார். தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்த சோனா கூறும் பொழுது ஏழு வருடங்களாக ஒருவரை காதலித்து பிறகு திருமணம் செய்தேன்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். நான்கு வருடங்களாக அவரது கொடுமையை தாங்கிக்கொண்டு வாழ்ந்து வந்தேன். அதற்கு பிறகு காதல் மீது எனக்கு இருந்த ஆசையே போய்விட்டது பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டேன் என்று கூறியிருக்கிறார் சோனா.

நீச்சல் உடையில் அதை பண்ணுவேன்.. ஓப்பனாக போட்டுடைத்த நடிகை இலியானா.!

தமிழில் கேடி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இலியானா. நடிகை இலியானா கதாநாயகியாக நடித்த அந்த திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார்.

அந்த அளவிற்கு நடிகை தமன்னா கதாநாயகியாக பிரபலமடைவதற்கு முன்பே நடிகையாக பிரபலமடைந்தார் இலியானா. ஆனால் ஏனோ அதற்கு பிறகு அவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் அதே சமயம் ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அப்படியாக ஹிந்தி தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக மாறினார் இலியானா. பெரும்பாலும் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தன.

அதிலும் ஹிந்தியில் அவர் நடித்த பர்ஃபி என்கிற திரைப்படம் அதிக பாராட்டுக்களை பெற்றது. அதில் இலியானா நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் பல காலங்கள் கழித்து இயக்குனர் ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இலியானா தற்சமயம் ஒரு விஷயத்தையும் அதோடு பகிர்ந்துள்ளார். நீச்சல் உடையில் புகைப்படங்களை பகிர்ந்த இவர் எனக்கு நீச்சல் உடை போட்டு போஸ் கொடுக்கதான் தெரியும், நீச்சல் அடிக்க தெரியாது என பதிவிட்டுள்ளார்.

பல காலங்களாகவே இலியானா நீச்சல் உடையில் புகைப்படங்கள் வெளியிடுவதால் அவருக்கு நீச்சல் அடிக்க தெரியும் என நினைத்து வந்த ரசிகர்களுக்கு இது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ஆனால் இது அவர் நகைச்சுவைக்கு போட்ட பதிவு என சிலர் கூறுகின்றனர்.

செய் ஏதாவது செய்… ஓரம் போன தாவணி.. ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் லாஸ்லியா..!

இலங்கையில் பிறந்து தமிழ்நாட்டில் நடிகையாக பிரபலமடைந்தவர் நடிகை லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் அதன் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார்.

இலங்கையில் சக்தி தொலைக்காட்சி என்கிற டிவியில் இவர் பணிப்புரிந்து வந்தார். அதற்கு பிறகு இவருக்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3இல் வாய்ப்பு கிடைத்தது.

அதன் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் இவர் பிரபலமடைய துவங்கினார். தொடர்ந்து திரைப்படங்களில் வாய்ப்புகளை தேடி வருகிறார். ஏற்கனவே தமிழில் பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ரசிகர்களை கவரும் வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.