நடக்க கூடாதுனு நினைச்ச அந்த ரெண்டு விஷயமும் நடந்துச்சு.. கமல் குறித்து கூறிய ஏ.ஆர் முருகதாஸ்..!

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சமூகம் சார்ந்த நிறைய கதை அமைப்புகளை தேர்ந்தெடுத்து படமாக்கி வருகிறார். அவர் ஏற்கனவே இயக்கிய ரமணா. கத்தி. சர்கார் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே அரசியல் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் நிறைய விஷயங்களை பேசக்கூடியதாக இருந்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் போலவே ஏ.ஆர் முருகதாஸும் அந்த விஷயத்தில் பிரபலமான ஒரு நபர் என்று கூறலாம். இந்த நிலையில் கமல் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு தனக்கு வந்தது குறித்து அவர் பேட்டியில் கூறி இருக்கிறார்.

Director AR Murugadoss Stills

அதில் அவர் கூறும்பொழுது முனாபாய் எம்பிபிஎஸ் என்கிற திரைப்படத்தை தான் தமிழில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்று எடுத்தனர். அந்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு முதலில் எனக்கு தான் வந்தது படத்தின் கதையை கேட்ட பிறகு நான் இரண்டு விஷயங்களை முடிவு செய்தேன்.

ஒன்று இந்த படத்தில் கமல் மெட்ராஸ் தமிழில் பேசக்கூடாது ரவுடி என்றாலே மெட்ராஸ் தமிழில் பேசுவது என்பதுதான் வழக்கமாக இருக்கும் ஆனால் அதை கமல் எக்கச்சக்கமான தடவை செய்துவிட்டார்.

எனவே அதை இந்த படத்தில் வைக்கக்கூடாது மேலும் கிரேசி மோகன் இந்த படத்திற்கு வசனங்கள் எழுத கூடாது. ஏனெனில் படத்தில் உணர்வுபூர்வமான காட்சிகள் நிறைய இருக்கின்றன. கிரேசி மோகன் எழுதும் காமெடி காட்சிகளால் அந்த உணர்வுபூர்வமான காட்சிகள் அடிபட்டு போக வாய்ப்புகள் இருக்கிறது என்று நினைத்தேன்.

அடுத்த ஒரு வாரத்தில் அந்த படம் கை மாறி போய்விட்டது ஆனால் நான் எந்த இரண்டு விஷயங்கள் அந்த படத்தில் இருக்கக் கூடாது என்று நினைத்தானோ அவை இரண்டுமே அந்த படத்தில் இருந்தது என்று கூறியிருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ்.