Tag Archives: துருவ நட்சத்திரம்

நிறைய பாகங்கள் எடுக்க ப்ளான் பண்ணுனோம்.. ஆனால் மூனு நாளைக்கு முன்னாடி சூர்யா படத்தில் இருந்து விலகிட்டார்!.. கௌதம் மேனன் டாக்!..

Surya and Gautham menon: தமிழில் காதல் திரைப்படங்கள் சுவாரசியமாக எடுப்பதில் இயக்குனர் மணிரத்தினத்திற்கு பிறகு அதிகமாக புகழப்படுபவர் இயக்குனர் கௌதம் மேனன். அவர் இயக்கிய வாரணம் ஆயிரம், நீதானே என் பொன்வசந்தம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல திரைப்படங்கள் சிறப்பான காதல் கதைகளை கொண்டு வெற்றி கொடுத்த திரைப்படங்கள் ஆகும்.

அதற்குப் பிறகு ஆக்ஷன் ப்ளாக் திரைப்படங்களையும் இயக்க துவங்கினார் கௌதம் மேனன். அப்படி அவர் இயக்கிய திரைப்படங்களில் காக்க காக்க வேட்டையாடு விளையாடு போன்ற போலீஸ் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று இருந்தன.

gautham-menon

எனவே தற்சமயம் அதிகபட்சம் கௌதம் மேனன் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் ஆக்ஷன் திரைப்படங்களாகதான் இருக்கின்றன. இந்த நிலையில் தற்சமயம் அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் இந்த வருட துவக்கத்தில் இருந்து வெளியாவதில் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

கமிட்டான சூர்யா:

இந்த படம் முழுவதுமாக முடிந்த நிலையில் கடன் தொடர்பான சில பிரச்சினைகள் காரணமாக அந்த திரைப்படம் திரையரங்கிற்கு வராமல் இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து கௌதம் மேனன் சில தகவல்களை பேசி இருந்தார்.

அதாவது துருவ நட்சத்திரம் படம் முதன் முதலில் சூர்யாவை வைத்துதான் படமாக்கப்பட இருந்தது. சூர்யாவிடம் இந்த படத்தின் கதையை கூறும் பொழுதே இதுவரை நான் இப்படியான கதையை கேட்டதில்லையே இதற்கு ஏதாவது ரெஃபரன்ஸ் திரைப்படங்கள் இருக்கிறதா என்று சூர்யா கேட்டிருக்கிறார்.

dhuruva natchatram

அதற்கு பதில் அளித்த கௌதம் மேனன் இதுவரை சினிமாவில் இந்த மாதிரியான கான்செப்டில் திரைப்படங்கள் வந்தது கிடையாது. இந்த திரைப்படம் ஒரு முன்னோட்டம் மட்டுமே. இந்த படம் நல்ல வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ந்து அதன் அடுத்த அடுத்த பாகங்கள் வரும்.

அதில்தான் படத்தின் கதை இன்னும் விவரமாக பேசப்படும் என்று கூறியிருக்கிறார் கௌதம் மேனன். பிறகு பல நாட்கள் இந்த படம் குறித்து பேச்சுவார்த்தை சென்றிருக்கிறது. ஆனாலும் படப்பிடிப்பு துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு சூர்யா இந்த திரைப்படம் ஒத்துவரும் என்று எனக்கு தோன்றவில்லை.

 எனவே அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று அந்த படத்தை விட்டு விலகிவிட்டார் என்று கூறியிருக்கிறார் கௌதம் மேனன்.

படத்தை வெளியிட்டு இப்படி சிக்கிட்டோமே!.. கௌதம் மேனனை சிக்கிலில் மாட்டிவிட்ட ஜோஸ்வா!..

Gautham Menon : தமிழ் சினிமாவில் ஆக்ஷன் லவ் என்கிற இரண்டையும் ஒன்றிணைத்து திரைப்படங்களை எடுத்து வெற்றி கொடுத்து வந்தவர் இயக்குனர் கௌதம் மேனன். அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற திரைப்படங்களில் காதல்தான் படத்தின் முக்கிய கருவாக இருக்கும்.

ஆனால் அந்த காதலுக்கு பின்னால் இருக்கும் குற்றங்கள் கதாநாயகனை தொடர்ந்து பயணிக்க வைக்கும். இதனாலேயே படத்தில் சண்டை காட்சிகளுக்கு சமமான காதல் காட்சிகளும் இருப்பதை பார்க்க முடியும். அதனால்தான் கௌதம் மேனனும் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு இயக்குனராக மாறினார்.

gautham-menon

ஏனெனில் அவருக்கு முன்பு மற்ற இயக்குனர்கள் இந்த மாதிரியான திரைப்படங்களை முயற்சிக்கவில்லை. அதே வகையில் தற்சமயம் கௌதம் மேனன் இயக்கிய திரைப்படம்தான் ஜோஸ்வா காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை கொண்ட திரைப்படம் ஆகும்.

சிக்கலில் சிக்கிய கௌதம் மேனன்:

திரைப்படத்தில் ஹாலிவுட் திரைப்படமான ஜான்விக் மாதிரியான திரைப்படங்களில் இருக்கும் சண்டை காட்சிகளை பார்த்து அதே போலவே முயற்சி செய்திருந்தார் கௌதம் மேனன். இருந்தும் கூட அப்போதைய சமயம் அந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெறவில்லை.

அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை சரியான விளம்பரம் படத்திற்கு இல்லை என்பதே பெரிய காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜோஸ்வா திரைப்படம் பெரிய தோல்வியை கண்டதால் அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் சிக்கலில் சிக்கி இருக்கிறது.

இந்த படமே சரியாக போகவில்லையே துருவ நட்சத்திரம் படத்தை நாம் வாங்கி வெளியிட வேண்டுமா என்று விநியோகஸ்தர்கள் யோசிக்க துவங்கியிருக்கின்றனர். ஆனால் துருவ நட்சத்திரம் கண்டிப்பாக தனது சினிமா வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்று எதிர்பார்த்தார் கௌதம் மேனன்.

அப்படி இருக்கும் பொழுது அந்த திரைப்படத்திற்கு இப்படி ஒரு சிக்கல் வரும் என தெரிந்திருந்தால் ஜோஸ்வா திரைப்படத்தை தாமதமாக வெளியிட்டிருக்கலாமே என்று யோசித்து வருகிறாராம் கௌதம் மேனன்.

சிம்புவை வச்சி படம் பண்ணுறேன்!.. காசு வாங்கிவிட்டு தயாரிப்பாளரை ஏமாற்றிய கௌதம் மேனன்!.

Simbu and Goutham Menon : மணிரத்தினம் போலவே தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று கனவுகளோடு சினிமாவிற்கு வந்தவர் இயக்குனர் கௌதம் மேனன். அவருக்கு மணிரத்தினத்திடம் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட தொடர்ந்து முயற்சி செய்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார்.

ஆனால் தொடர்ந்து கௌதம் மேனன் திரைப்படங்களை இயக்குவது என்பது தற்சமயம் பிரச்சனையாகி வருகிறது. அவர் நடிக்கும் திரைப்படங்களை கூட எளிதாக வெளியிட முடிகிறது ஆனால் அவர் இயக்கும் திரைப்படங்கள் வெளியாவதில் எக்கச்சக்கமான சிக்கல்கள் உருவாகி வருகின்றன. தற்சமயம் நடிகர் விக்ரமை வைத்து அவரை இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட முயற்சி செய்தார்.

இந்த திரைப்படம் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே எடுக்கப்பட்டு இன்னமும் வெளியாகாமல் இருக்கும் திரைப்படம். பல காட்சிகளை கூட பழையதாக தெரிவதால் நீக்கிவிட்டதாக கௌதம் மேனன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் இன்று படம் வெளியாகாது. இன்னும் இரண்டு நாட்கள் படத்தை வெளியிடுவதற்கு தேவைப்படும் என்று அறிவித்திருக்கிறார் கௌதம் மேனன்.

அப்படி என்னதான் இந்த படத்தில் பிரச்சனை என்று பார்க்கும் பொழுது கௌதம் மேனன் பலருக்கும் கொடுக்க வேண்டிய பணத்தொகையை நிலுவையில் வைத்திருப்பது தான் பெரும் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு தயாரிப்பாளரிடம் சூப்பர் ஸ்டார் என்னும் பெயரில் சிம்புவை வைத்து படம் இயக்கப் போவதாக கூறி அந்த படத்திற்காக அட்வான்ஸ் தொகையையும் பெற்றிருக்கிறார் கௌதம் மேனன்.

ஆனால் பிறகுதான் தெரிந்துள்ளது சூப்பர் ஸ்டார் என்னும் பெயரே வேறு ஒரு இயக்குனரிடம் ஏற்கனவே இருக்கிறது என்று, எனவே கௌதம் மேனன் தன்னை ஏமாற்றியதாக அந்த அட்வான்ஸ் தொகையை கேட்டு புகார் அளித்திருக்கிறார் அந்த தயாரிப்பாளர். இதற்கு நடுவே நடிகர் சிம்புவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் அவருக்கு வர வேண்டிய சம்பள பாக்கியை கேட்டு புகார் அளித்துள்ளார் இப்படி பல்வேறு புகார்கள் வந்த காரணத்தினால் கௌதம் மேனனின் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகாது!.. மன்னிச்சுக்கோங்க.. கையை விரித்த கௌதம் மேனன்.. கவலையில் ரசிகர்கள்!.

Vikram Dhuruva natchathiram : சியான் விக்ரம் நடித்து, கௌதம் வாசு தேவமேனன் இயக்கத்தில் இன்று வெளிவர இருந்த “துருவ நட்சத்திரம்” திரைப்படம் இன்று திரைக்கு வராது என்று இயக்குனர் அறிவித்துள்ளார். துருவ நட்சத்திரம் திரைப்படம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டே இருக்கிறது.

படம் ஆரம்பித்ததில் இருந்து பொருளாதார நிலையில் ஏற்பட்ட சிக்கலால் படபிடிப்பு அவ்வபோது தடைபட்டுவந்தது. இந்த பொருளாதார நிலையை சரிசெய்யத்தான் நான் படங்களில் நடிக்கவும் செய்தேன் என்று பேட்டி ஒன்றில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்திருந்தார்.

நடிகர் விக்ரம் நடித்து வெளிவந்த பெரும்பாலான படங்கள் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பிற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி இன்று படம் வெற்றிகரமாக வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் மீண்டும் படத்தை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதற்கான காரணம் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும் பணப்பிரச்சனை காரணமாகத்தான் இன்று படவெளியீடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பரவி வருகிறது.

மேலும் படம் இன்னும் ஓரிரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் தனது “X” தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இந்த படவெளியீடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை விக்ரம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அடுத்து படவெளியீடு தேதி அறிவித்தாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு குறையும் என்று கூறப்படுகிறது.

பதான், விக்ரம் படத்துல எல்லாம் என் பட சீன் வந்துடுச்சு.. வேறு வழியில்லாமல் படத்தை மாற்றிய கௌதம் மேனன்!..

தமிழில் வெற்றி படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் கௌதம் மேனன். மின்னலே திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். மணிரத்தினத்தை பார்த்துதான் கௌதம் மேனனுக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்கிற ஆசையே வந்தது.

எனவே மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக சேர்வதற்கு வாய்ப்பு கேட்டப்போது அவர் அதை மறுத்துவிட்டார். அதனை தொடர்ந்து சினிமாவில் தொடர்ந்து போராடி இயக்குனரான கௌதம் மேனன் நிறைய வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

பொதுவாக அவரது திரைப்படங்களில் மணிரத்தினம் படத்தின் சாயலை பார்க்க முடியும். கௌதம் மேனன் வெகு நாட்களாக இயக்கி வரும் திரைப்படம்தான் துருவ நட்சத்திரம். இந்த படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.

வெகுநாட்களாக எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை வெகுநாட்கள் எடுத்த காரணத்தினால் படத்தில் இருந்த நிறைய காட்சிகள் வேறு படங்களில் வந்துவிட்டன என கூறுகிறார் கௌதம் மேனன்.

முக்கியமாக விக்ரம் படத்தில் சந்தான பாரதி, ஏஜெண்ட் டீனா மாதிரியான கதாபாத்திரங்கள் காட்டப்படுவது, பதான் படத்தில் வரும் காட்சிகள் ஆகியவை ஏற்கனவே தனது படத்தில் இருந்தன என்று கூறுகிறார் கௌதம் மேனன். இதனால் தற்சமயம் தனது படங்களில் அந்த காட்சிகளை அவர் நீக்கியுள்ளாராம்.

துருவ நட்சத்திரம் படம் முழுக்க கெட்ட வார்த்தை.. அதிர்ந்து போன சென்சார் போர்டு..தடை செய்யப்பட்ட வார்த்தைகள் லிஸ்ட்..

தமிழ் சினிமாவில் வெகு நாட்களாக நிலுவையில் உள்ள திரைப்படங்களில் நடிகர் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படமும் ஒன்றாகும். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் வெகு காலங்களாக படமாக்கப்பட்டு வருகின்றது.

இந்த படத்தை மொத்தம் இரண்டு படங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளார் கௌதம் மேனன் முதல் பாகத்தின் பெயர் யுத்த காண்டம் என்று வைக்கப்பட்டுள்ளது. ஒரு வழியாக இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்புகளு முடிந்த நிலையில் தற்சமயம் தணிக்கை குழுவிற்கு தணிக்கை சான்றிதழ் வாங்குவதற்காக அனுப்பப்பட்டிருக்கிறது துருவ நட்சத்திரம்.

இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் இருக்கும் எக்கச்சக்கமான வார்த்தைகளை கண்டு அதிர்ச்சியாகியுள்ளனர். மேலும் அவற்றை நீக்குமாறு கூறியுள்ளனர். கிட்டத்தட்ட ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் படத்தில் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து சென்சார் போர்டு வெளியிட்ட லிஸ்டில் பார்க்கும் பொழுது எக்கச்சக்கமான கெட்ட வார்த்தைகள் இந்த படத்தில் இருப்பதை காண முடிகிறது. அவை அனைத்தையும் நீக்கி அதற்கு பதிலாக அந்த இடத்தில் வேறு வார்த்தையை போட்டு மாற்றினால்தான் அவர்களுக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என கூறப்படுகிறது.