ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் முக்கியமானவராக அறியப்படுகிறார். பெரும்பாலும் இவர் இசையமைக்கும் பாடல்கள் எல்லாம் டாப் ஹிட் கொடுத்து வந்தன. சில இசையமைப்பாளர்களுக்கு சில இயக்குனர்களுடன் மட்டும் நன்றாக செட் ஆகும் என கூறலாம்.
அந்த வகையில் இயக்குனர் கௌதம் மேனனுக்கு அவரது முதல் படத்தில் இருந்தே இசையமைத்து வந்த இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் இருந்தார். பெரும்பாலும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை பெரும் வெற்றியை கொடுத்து வந்தது.
ஆனால் சில காலங்களுக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் கௌதம் மேனன் படங்களுக்கு இசையமைக்கவில்லை. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுவிட்டது என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தது.
இதுக்குறித்து கௌதம் மேனன் ஒரு பேட்டியில் கூறும்போது ஹாரிஸ் ஜெயராஜ் எதனால் சென்றார் என எனக்கும் தெரியாது. ஆனால் ஒரு நாள் அவரே ஒரு மெயில் அனுப்பினார். அதில் அவர் நான் படத்தில் இருந்து விலகி கொள்கிறேன் என கூறியிருந்தார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் ஏன் அந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை. என அந்த நிகழ்வை குறித்து விளக்கியுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.