Tag Archives: Surya

சூர்யா செஞ்ச மிகப்பெரிய சாதனை..! எத்தனை பேருக்கு உதவியிருக்கார் பாருங்க..!

நடிகர்களை பொருத்தவரை எப்பொழுதுமே அவர்கள் செய்யும் உதவிகளை பலரும் வெளியே சொல்லிக் கொள்வது கிடையாது.

இப்படி கிட்டத்தட்ட 15 வருடங்களாக பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சூர்யா துவங்கிய தொண்டு நிறுவனம்தான் அகரம். அகரம் மூலமாக நிறைய மாணவர்கள் பயனடைந்து இருக்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் பெரிய படிப்பை படிக்க நினைக்கும் வறுமையில் இருக்கும் மாணவர்களுக்கு அகரம் உதவி செய்கிறது. அதன் மூலமாக வெற்றி அடைந்தவர்கள் பலர் என்று கூறலாம்.

surya

சமீபத்தில் அகரம் நிறுவனத்தின் 15 வது ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் சூர்யாவால் பயனடைந்த மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு பேசியிருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் முக்கிய தகவலை சூர்யா பகிர்ந்தார்.

அதில் அவர் கூறும்போது 160 மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தான் அகரம் நிறுவனம் உருவானது ஆரம்பத்தில் 160 மாணவர்களை கொண்டுதான் செயல்பட்டு வந்தது. ஆனால் இந்த 15 வருடங்களில் 6800க்கும் அதிகமான மாணவர்களுக்கு உதவி இருக்கிறது அகரம் என்று கூறியிருக்கிறார் சூர்யா.

15 வருடத்தில் இவ்வளவு மாணவர்களுக்கு தனி ஒரு மனிதராக சூர்யா உதவி இருப்பது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.

கருப்பு படத்தை விஜய் நிராகரிக்க இதுதான் காரணம்..!

நடிகர் சூர்யா நடிப்பில் தற்சமயம் வெளியாகவிருக்கும் திரைப்படம்  கருப்பு. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருகிறார். ஆர்.ஜே பாலாஜி இயக்கும் முதல் ஆக்‌ஷன் திரைப்படமாக அமைந்துள்ளது கருப்பு திரைப்படம்.

ஆரம்பத்தில் ஆர்.ஜே பாலாஜி திரைப்படம் இயக்கும்போது காமெடி கதைகளைதான் தேர்ந்தெடுத்து இயக்கி வந்தார். இந்த நிலையில் ஆர் ஜே பாலாஜி சூர்யாவை வைத்து இயக்கும் படத்திற்கு கதைகளத்தை மாற்றி அமைத்தார்.

அந்த வகையில் அடுத்து ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் கதையை ஆரம்பத்தில் இவர் விஜய்யிடம் கூறியதாக ஒரு கருத்து இருந்து வருகிறது.

ஆனால் விஜய் அடுத்து ஜனநாயகன் திரைப்படத்தில் கமிட்டான காரணத்தினால் இந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதற்கு பிறகு தான் இந்த கதை சூர்யாவிடம் வந்ததாக கூறப்படுகிறது. சூர்யாவும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஏற்கனவே ஆர் ஜே பாலாஜி இயக்கிய படங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்திருப்பதால் இந்த திரைப்படமும் வெற்றியை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனையில் பிரச்சனை.. வெளியாகுமா கருப்பு திரைப்படம்..!

இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகி வரும் திரைப்படம் கருப்பு. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. இதுவரை காமெடி கதைக்களங்களில் மட்டுமே திரைப்படங்களை இயக்கி வந்த ஆர்.ஜே பாலாஜி இயக்கும் முதல் ஆக்‌ஷன் திரைப்படமாக கறுப்பு திரைப்படம் இருக்கிறது.

நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. படத்தில் பாடல்கள் கூட நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த படத்தின் மூலமாக சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்த படத்திலும் கூட சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ட்ரைலர் வெளியானப்போது படத்தின் வெளியீடு குறித்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. இதுக்குறித்து பார்க்கும்போது கறுப்பு திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமம் இன்னமுமே விற்பனையாகவில்லையாம்.

ஓ.டி.டிக்கு படம் விற்பனையான பிறகுதான் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. ஒருவேளை ஓ.டி.டிக்கு விற்பனையாவதில் பிரச்சனை ஏற்பட்டால் படம் அடுத்த வருடம்தான் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

அந்த படம் மாதிரியே இருக்கு? சாய் அபயங்கரின் பின்னணி இசை குறித்து பேச்சு..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் அனிரூத். தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களுக்கு அனிரூத் தான் இசையமைக்க வேண்டும் என நடிகர்களும் தயாரிப்பாளர்களுமே கேட்க துவங்கிவிட்டனர்.

அந்த அளவிற்கு அனிரூத் பிரபலமடைந்துவிட்டார். ஆனால் அதே சமயம் இளையராஜா மாதிரி நிறைய படங்களுக்கு அனிரூத்தால் இசையமைக்க முடியவில்லை. எனவே அவரே முக்கியமான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர்கள் பலருக்குமே அனிரூத் மாதிரி இசையமைக்கும் ஒரு ஆள் தேவைப்பட்டது. இந்த நிலையில்தான் சாய் அபயங்கர் அதை பூர்த்தி செய்யும் வகையில் எண்ட்ரி கொடுத்துள்ளார். சாய் அபயங்கர் இசையில் வந்த 2 ஆல்பம் பாடல்கள் ஏற்கனவே நல்ல வெற்றியை கொடுத்துள்ளன.

இந்த நிலையில் இவர் அனிரூத்திடம் உதவியாளராக பணிப்புரிந்து வந்தார். இவருக்கு இப்போது பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியுள்ளன. ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் கறுப்பு படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார். நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் இவரது இசைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் கிட்டத்தட்ட இந்த இசையானது அனிரூத் இசையை போலவே இருப்பதாக கூறுகின்றனர் ரசிகர்கள். ஆனால் ஜெயிலர் மாதிரியான அனிரூத் இசையமைத்த படங்களில் சாய் அபயங்கர் இசையமைத்து இருப்பதால் அவரது இசையும் அனிரூத் இசையை போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிரட்டலான தோணியில்.. வெளியான சூர்யாவின் கருப்பு ட்ரைலர்…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது அதிக வரவேற்பை பெற்ற நடிகராக மாறியிருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ரேடியோவில் பணிப்புரிந்து வந்த ஆர்.ஜே பாலாஜி தனது பேச்சு திறனால் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அப்படியே காமெடி நடிகராக நடித்து கொண்டு இல்லாமல் கதாநாயகனாக தனது பயணத்தை துவங்கினார் ஆர்.ஜே பாலாஜி. இதன் மூலம் இவர் அதிக வெற்றியை கொடுத்தார். தொடர்ந்து படங்களை இயக்கவும் துவங்கினார். இவரது இயக்கத்தில் உருவான வீட்ல விஷேசம், மூக்குத்தி அம்மன்  திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் தற்சமயம் சூர்யா நடிக்கும் கருப்பு படத்தை இயக்கியுள்ளார் ஆர்.ஜே பாலாஜி. இந்த படத்தின் டீசர் தற்சமயம் வெளியாகியுள்ளது. படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து இருக்கிறார். இவரது இசைக்கு எந்த அளவில் வரவேற்பு கிடைக்கும் என தெரியவில்லை. ஏனெனில் டீசரிலேயே படத்தில் வரும் இசையும் பாடல் வரிகளும் புரியாத வண்ணத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் படத்தின் டீசர் வரவேற்பை பெற்று வருகிறது.

 

 

சூர்யா தனுஷ் ரசிகர்களிடம் சிக்கிய இயக்குனர்.. வாயை விட்டதால் வந்த வினை..!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி அதிக வரவேற்பு பெற்ற படமாக லவ் மேரேஜ் என்கிற திரைப்படம் இருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருந்தார்.

திருமணம் செய்யும் பொழுது அதில் நடக்கும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் அமைந்து இருந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சண்முகப்பிரியன் இயக்கியிருந்தார்.

சமீபத்தில் அவர் பேசிய விஷயங்கள்தான் அதிக வைரலாகி வருகிறது சமீபத்தில் ஒரு பேட்டியில் சண்முகப்பிரியன் பேசும்பொழுது சிவகார்த்திகேயன் குறித்த ஒரு விஷயத்தை பேசி இருந்தார்.

அதாவது சிவகார்த்திகேயன் சமீப காலங்களாக வெற்றி படங்களை கொடுத்து வரும் புதிய இயக்குனர்களை அழைத்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இது குறித்து பேசிய சண்முக பிரியன் கூறும்பொழுது சிவகார்த்திகேயன் இப்படி செய்யும் பொழுது அதை பலரும் விமர்சனம் செய்கின்றனர்.

அதுவே தனுஷ் அல்லது சூர்யா செய்யும் பொழுது அவர்களை வாழ்த்தி பேசுகின்றனர். விமர்சிக்க வேண்டும் என்றால் அவர்களையும் விமர்சிக்க வேண்டும்தானே என்று கேட்டிருந்தார். இதனால் கோபமடைந்த தனுஷ் மற்றும் சூர்யா ரசிகர்கள் இப்பொழுது சண்முகப்பிரியனை தொடர்ந்து விமர்சிக்க துவங்கியிருக்கின்றனர்.

சூர்யாவின் ஆசையில் மண்ணை போட்ட ரஜினிகாந்த்.. இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சா..!

நடிகர் விஜய் இப்பொழுது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் கூட ஆரம்ப காலகட்டங்களில் அவர் நிறைய கஷ்டங்களை அனுபவித்தார்.

ஆரம்பத்தில் நடிகர் விஜய்க்கு அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. அந்த சமயத்தில் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகரும் நடிகர் விஜயகாந்தும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.

இதனை தொடர்ந்து விஜயகாந்த் படத்தில் நடித்ததால் அது விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் என்று செந்தூரபாண்டி திரைப்படத்தில் விஜய்யை நடிக்க வைத்தார் எஸ்.ஏ சந்திரசேகர்.

அந்த படமும் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் அதே முறையை பின்பற்றினார். நடிகர் சூர்யாவிற்கு அப்பொழுது குறைந்த அளவிலான வரவேற்புகள் தான் இருந்தது.

எனவே அவர் நடிகர் விஜயகாந்த் நடித்த பெரியண்ணா திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக நடித்தார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற படம் தான் என்றாலும் கூட அந்த படம் வெளியாவதற்கு முன்பு ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் வெளியானது.

இதனால் பெரியண்ணா திரைப்படத்திற்கு அப்பொழுது திரையரங்குகள் அதிகமாக கிடைக்காமல் போனது. இதனால் வசூலிலும் பெரியண்ணா படம் வசூல் செய்யவில்லை ஒருவேளை தனித்து வெளியாகி இருந்தால் பெரிய வரவேற்பு பெற்றிருக்கும்.

ஆனால் ரஜினி படத்துடன் போட்டி போட்டதால் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்காமல் போனது அதனால் சூர்யாவிற்கும் அந்த படத்தால் வரவேற்பு கிடைக்காமல் போனது.

அந்த படத்துல எல்லாம் என்னால நடிக்க முடியாது.. பாலா அப்பவே சொல்லிட்டாரு.. ஓப்பனாக கூறிய கார்த்தி..!

விஜய், அஜித் இருவரும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த அதே காலக்கட்டத்தில் அவர்களுக்கு போட்டி நடிகர்களாக இருந்தவர் நடிகர் சூர்யா. ஆனால் அஜித் விஜய் இருவரும் ஆக்‌ஷன் ப்ளாக் நடிகர்களாக மாறியபோது அவர்களுக்கு கிடைத்த அதே அளவிற்கான வரவேற்பு சூர்யாவிற்கு கிடைக்கவில்லை.

விஜய் அஜித்தின் இடத்தை பிடிக்கவில்லை என்றாலும் கூட இப்போதும் கூட நடிகர் சூர்யாவிற்கு என்று தனிப்பட்ட இடம் சினிமாவில் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட அவரது நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது.

actor-karthi

இந்த நிலையில் தனது நடிப்பு குறித்து நடிகர் சூர்யாவே ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் பேசிய சூர்யா கூறும்போது நடிப்பை பொறுத்தவரை எதார்த்தமான நடிப்பு நடிப்பது என்பது எனக்கு கஷ்டமான விஷயமாகும்.

பாலா சாரின் படத்தில் நடிக்கும்போது எப்போதுமே என்னை அவர் ஓவர் ஆக்ட் பண்ணாதே இயல்பாக நடி என்று கூறி கொண்டே இருப்பார். மெய்யழகன் மாதிரியான ஒரு திரைப்படத்தில் கார்த்தியால் நடிக்க முடியும். ஆனால் என்னால் நடிக்க முடியாது என கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

ரெட்ரோ ப்ளாப் படம்னு யாரு சொன்னது.. ஜோதிகா வெளியிட்ட அப்டேட்..!

ஜெய் பீம், சூரரை போற்று மாதிரியான திரைப்படங்களுக்கு பிறகு பெரிதாக நடிகர் சூர்யாவுக்கு வெற்றி படங்கள் என்பதே அமையவில்லை. வெளிவரும் திரைப்படங்களும் மாஸ் வெற்றி எல்லாம் கொடுக்காது. இந்த நிலையில் சமீபத்தில் வித்தியாசமான கதை அம்சத்தில் சுர்யா நடித்த திரைப்படம்தான் ரெட்ரோ.

இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்தே ஓரளவு வரவேற்பு படத்திற்கு இருந்து வந்தது. படம் தொடர்பான விமர்சனத்தை பொறுத்தவரை கலவையான விமர்சனங்கள்தான் படத்திற்கு வந்தது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தோல்வியடைந்தது என்றெல்லாம் தகவல்கள் ஒரு பக்கம் பரவி இருந்தது. இந்த நிலையில் ரெட்ரோ திரைப்படம் தோல்வியடையவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரில் ரெட்ரோ திரைப்படம் உலக அளவில் 104 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரெட்ரோ திரைப்படம் ஒரு வெற்றி படமாக கருதப்படுகிறது.

சிறுநீரை குடித்த சூர்யா பட வில்லன்.. இது ஒரு வைத்தியமாம்.!

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர் பரேஷ் ரவால். இவர் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, பரேஷ் ரவால் சில ஆண்டுகளுக்கு முன்பு காலில் ஏற்பட்ட தீவிரமான வலியால் அவதிப்பட்ட போது, அதற்கு சிகிச்சை என்ற நிலையில் தனது சிறுநீரை குடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூரரைப் போற்று ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம். இருப்பினும், படம் திரையரங்குகளில் வெளியாகாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தது. அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, கிருஷ்ணகுமார், பரேஷ் ரவால் மற்றும் ராதிகா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இது குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் விளக்கம் அளித்துள்ளார். பரேஷ் ரவாலுக்கு காலில் ஏற்பட்ட வீக்கத்தினால் நடக்கவே முடியாமல் தவித்த நேரத்தில், அஜய் தேவ்கன் ஒரு ஆச்சரியமான ஆலோசனை கொடுத்தாராம். அதாவது, பீர் குடிப்பது போல காலையில் எழுந்தவுடன் சிறுநீரை குடிக்க வேண்டும்; அதே நேரத்தில் புகை, மது, மாமிசம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, 15 நாட்கள் இந்த முறையை பின்பற்றியதில் பரேஷ் ரவாலின் கால் வலி மற்றும் வீக்கம் சரியாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விஞ்ஞான அடிப்படையில் பார்க்கும்போது, சிறுநீரில் உள்ள உப்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட பொருட்கள் காரணமாக இது பயனளித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயும் இதே போல் தனது சிறுநீரை குடித்து வந்ததாகவும், அதுவே தனது நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கு காரணம் என அவர் கூறியதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைநகரம் படம் மாதிரியே இருக்கு… ரெட்ரோ திரைப்பட விமர்சனம்.!

நடிகர் சூர்யா நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்தே கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் கிட்டத்தட்ட தலைநகரம் திரைப்படத்தின் கதை அமைப்பை கொண்டுள்ளது. படத்தின் கதைப்படி ஜோஜு ஜார்ஜ் ஒரு ரவுடியாக இருக்கிறார். அவரது வீட்டின் செக்யூரிட்டியின் மகனாக சூர்யா இருக்கிறார். செக்யூரிட்டி ஒரு நாள் இறந்துவிட சூர்யா ஜோஜு ஜார்ஜ் வீட்டிலேயே வளர்கிறார்.

ஆனால் அவருக்கு சூர்யாவை பிடிக்காமலே இருக்கிறது. இந்த நிலையில் ஒருநாள் ஜோஜு ஜார்ஜ் உயிருக்கு ஆபத்து வருகிறது. அதிலிருந்து சூர்யாதான் அவரை காப்பாற்றுகிறார். இந்த நிலையில் ஜோஜு ஜார்ஜ்க்கு பிடித்த நபராக சூர்யா மாறுகிறார்.

இதனை தொடர்ந்து பூஜா ஹெக்தே மீது சூர்யாவிற்கு காதல் ஏற்படுகிறது. ஆனால் இந்த ரவுடிசத்தை விட்டு வந்தால் திருமணம் செய்து கொள்வேன் என கூறுகிறார் பூஜா ஹெக்தே. எனவே ரவுடி தொழிலை விட நினைக்கிறார் சூர்யா.

அதற்கு பிறகு அவருக்கு வரும் இடையூறுகள்தான் கதையாக இருக்கிறது. கிட்டத்தட்ட சுந்தர் சி நடித்த தலைநகரம் திரைப்படத்திலும் கூட இதே மாதிரியான கதை அம்சம் இருப்பதை பார்க்க முடியும்.

இனிமேல் இப்படி நடக்க கூடாது… பஹல்காம் தாக்குதல் குறித்து சூர்யாவின் கருத்து..!

நிறைய நடிகர்கள் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் சில நடிகர்கள்தான் தொடர்ந்து அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ் மாதிரியான அந்த நடிகர்கள் லிஸ்ட்டில் முக்கியமானவர் நடிகர் சூர்யா. ஏற்கனவே அகரம் என்கிற அறக்கட்டளை மூலமாக நிறைய குழந்தைகளுக்கு கல்வியை வழங்கி வருகிறார் நடிகர் சூர்யா.

இந்த நிலையில் ஏற்கனவே புதிய கல்வி கொள்கையில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து சூர்யா குரல் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்தும் அவர் பேசியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என கூறி அந்த நாட்டின் மீது இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனால் இந்த தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. ஆதாரம் இருந்தால் இந்தியாவை காட்ட சொல்லுங்கள் என பாகிஸ்தான் தரப்பில் இருந்து பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்கு நடுவே போர் ஏற்படுவதற்கான சூழல் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் முடிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. எனவே சூர்யாவின் கருத்துக்கள் எப்படி இருக்கும் என பார்க்கும்போது அவர் மிக நடுநிலையாக பேசியுள்ளார்.

சூர்யா இதுப்பற்றி கூறும்போது ”எந்த ஒரு பயங்கரவாதமும் இழப்பைதான் கொண்டு வரும், இனிமேல் இதுப்போல் எப்போதும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்காக நான் பிராத்தனை செய்து கொள்கிறேன்”. என கூறியுள்ளார் சூர்யா.