இனிமேல் இப்படி நடக்க கூடாது… பஹல்காம் தாக்குதல் குறித்து சூர்யாவின் கருத்து..!

நிறைய நடிகர்கள் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் சில நடிகர்கள்தான் தொடர்ந்து அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ் மாதிரியான அந்த நடிகர்கள் லிஸ்ட்டில் முக்கியமானவர் நடிகர் சூர்யா. ஏற்கனவே அகரம் என்கிற அறக்கட்டளை மூலமாக நிறைய குழந்தைகளுக்கு கல்வியை வழங்கி வருகிறார் நடிகர் சூர்யா.

இந்த நிலையில் ஏற்கனவே புதிய கல்வி கொள்கையில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து சூர்யா குரல் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்தும் அவர் பேசியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என கூறி அந்த நாட்டின் மீது இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனால் இந்த தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. ஆதாரம் இருந்தால் இந்தியாவை காட்ட சொல்லுங்கள் என பாகிஸ்தான் தரப்பில் இருந்து பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்கு நடுவே போர் ஏற்படுவதற்கான சூழல் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் முடிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. எனவே சூர்யாவின் கருத்துக்கள் எப்படி இருக்கும் என பார்க்கும்போது அவர் மிக நடுநிலையாக பேசியுள்ளார்.

சூர்யா இதுப்பற்றி கூறும்போது ”எந்த ஒரு பயங்கரவாதமும் இழப்பைதான் கொண்டு வரும், இனிமேல் இதுப்போல் எப்போதும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்காக நான் பிராத்தனை செய்து கொள்கிறேன்”. என கூறியுள்ளார் சூர்யா.