விஜய், அஜித் இருவரும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த அதே காலக்கட்டத்தில் அவர்களுக்கு போட்டி நடிகர்களாக இருந்தவர் நடிகர் சூர்யா. ஆனால் அஜித் விஜய் இருவரும் ஆக்ஷன் ப்ளாக் நடிகர்களாக மாறியபோது அவர்களுக்கு கிடைத்த அதே அளவிற்கான வரவேற்பு சூர்யாவிற்கு கிடைக்கவில்லை.
விஜய் அஜித்தின் இடத்தை பிடிக்கவில்லை என்றாலும் கூட இப்போதும் கூட நடிகர் சூர்யாவிற்கு என்று தனிப்பட்ட இடம் சினிமாவில் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட அவரது நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தனது நடிப்பு குறித்து நடிகர் சூர்யாவே ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் பேசிய சூர்யா கூறும்போது நடிப்பை பொறுத்தவரை எதார்த்தமான நடிப்பு நடிப்பது என்பது எனக்கு கஷ்டமான விஷயமாகும்.
பாலா சாரின் படத்தில் நடிக்கும்போது எப்போதுமே என்னை அவர் ஓவர் ஆக்ட் பண்ணாதே இயல்பாக நடி என்று கூறி கொண்டே இருப்பார். மெய்யழகன் மாதிரியான ஒரு திரைப்படத்தில் கார்த்தியால் நடிக்க முடியும். ஆனால் என்னால் நடிக்க முடியாது என கூறியுள்ளார் நடிகர் சூர்யா.