Tag Archives: நடிகர் சூர்யா

அந்த படத்துல எல்லாம் என்னால நடிக்க முடியாது.. பாலா அப்பவே சொல்லிட்டாரு.. ஓப்பனாக கூறிய கார்த்தி..!

விஜய், அஜித் இருவரும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த அதே காலக்கட்டத்தில் அவர்களுக்கு போட்டி நடிகர்களாக இருந்தவர் நடிகர் சூர்யா. ஆனால் அஜித் விஜய் இருவரும் ஆக்‌ஷன் ப்ளாக் நடிகர்களாக மாறியபோது அவர்களுக்கு கிடைத்த அதே அளவிற்கான வரவேற்பு சூர்யாவிற்கு கிடைக்கவில்லை.

விஜய் அஜித்தின் இடத்தை பிடிக்கவில்லை என்றாலும் கூட இப்போதும் கூட நடிகர் சூர்யாவிற்கு என்று தனிப்பட்ட இடம் சினிமாவில் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட அவரது நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது.

actor-karthi

இந்த நிலையில் தனது நடிப்பு குறித்து நடிகர் சூர்யாவே ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் பேசிய சூர்யா கூறும்போது நடிப்பை பொறுத்தவரை எதார்த்தமான நடிப்பு நடிப்பது என்பது எனக்கு கஷ்டமான விஷயமாகும்.

பாலா சாரின் படத்தில் நடிக்கும்போது எப்போதுமே என்னை அவர் ஓவர் ஆக்ட் பண்ணாதே இயல்பாக நடி என்று கூறி கொண்டே இருப்பார். மெய்யழகன் மாதிரியான ஒரு திரைப்படத்தில் கார்த்தியால் நடிக்க முடியும். ஆனால் என்னால் நடிக்க முடியாது என கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

சூர்யாவுக்கு போட்டியாக களம் இறங்கிய நானி.. இப்படி சம்பவமாகும்னு நினைக்கல..!

சூர்யா தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே பெரிய இடத்தை பிடிப்பதற்காக தொடர்ந்து உழைத்து வருகிறார். அவருக்கு பிறகு வந்த சிவகார்த்திகேயன், தனுஷ் மாதிரியான நடிகர்கள் கூட இப்போது சூர்யாவை விட அதிக சம்பளம் வாங்கி வருகின்றனர்.

விஜய், அஜித் காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் அவர்களுக்கு போட்டியாக இருந்து வந்தவர் நடிகர் சூர்யா. இருந்தாலும் அவருக்கு விஜய், அஜித் மாதிரியான மார்க்கெட் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சூர்யா தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அப்படியாக தற்சமயம் அவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ரெட்ரோ. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் முதல் நாளே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இதற்கு நடுவே நடிகர் நானி நடித்த ஹிட் மூன்றாம் பாகமும் வெளியானது. நானி தெலுங்கு நடிகர் என்பதால் அந்த படத்திற்கு ஆரம்பத்தில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் கடந்த இரண்டு நாட்களில் அந்த படம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் வர துவங்கியிருக்கின்றன.

இந்த நிலையில் அந்த படத்திற்கு திரையரங்குகள் அதிகரிக்க துவங்கியுள்ளன. சில திரையரங்குகளில் ரெட்ரோ திரைப்படத்தின் காட்சிகளை குறைத்து ஹிட் படத்தின் காட்சிகளை அதிகரித்து வருகின்றனர். எனவே ஹிட் 3 திரைப்படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற வாய்ப்புண்டு என கூறப்படுகிறது.

அம்மாவை மிஞ்சிய மகள்.. வெளியான சூர்யாவின் மகள் புகைப்படங்கள்.. அடுத்த கதாநாயகி ரெடி போல..!

தமிழ் சினிமாவில் விஜய் அஜித்தை தொடர்ந்து அவரது சம காலத்திலேயே அதிக வரவேற்பை பெற்றவர் நடிகர் சூர்யா. இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

வெகு காலங்களாக காதலித்து வந்த இவர்களுக்கு சூர்யாவின் வீட்டில் இருந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருந்தது. ஆனாலும் இந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் திருமணம் செய்துக்கொண்டனர்.

ஆனாலும் நடிகர் சிவக்குமாருக்கு இதில் விருப்பம் இல்லை என கூறப்பட்டது. 2006 ஆம் ஆண்டு சூர்யா ஜோதிகாவுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சூர்யாவுடன் மட்டும் சேர்ந்து நடித்து வந்தார் ஜோதிகா.

இப்போது சமீப காலமாக மற்ற நடிகர்களுடனும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜோதிகாவுக்கு ஒரு பொண்ணும் மற்றும் ஒரு பையன் இருக்கிறார்கள். மகளுக்கு தியா எனவும், மகனுக்கு தேவ் எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வெகு காலங்களாகவே தனது குடும்பத்தை பார்த்து கொள்வதில் நேரத்தை செலவழித்தார் ஜோதிகா. இந்த நிலையில் குழந்தைகளின் பள்ளி வாழ்க்கைக்காக மும்பைக்கு சென்றுவிட்டார் ஜோதிகா. மேலும் அங்கு அவர் பாலிவுட் சினிமாவில் முயற்சி செய்து வருகிறார்.

ஏற்கனவே இரண்டு பாலிவுட் திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார் ஜோதிகா. இந்த நிலையில் சூர்யா ஜோதிகாவின் மகளான தியா வளர்ந்து பெரிய பெண்ணாக மாறிவிட்டார். தற்சமயம் அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

600 கோடி பட்ஜெட்டில் களம் இறங்கும் சூர்யா.. அடுத்த பேன் இந்தியா படம்.!

தமிழ் சினிமா நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சூர்யா. சூர்யா நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு எப்போதும் இருந்து வருகிறது.

ஆனால் சமீபத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் அவருக்கு பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை கங்குவா திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படமாக இருந்தது. இருந்தாலும் கூட அந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவிலான வரவேற்பு என்பது கிடைக்கவில்லை.

சூர்யாவின் அடுத்த படம்:

surya

இருந்தாலும் கூட சூர்யா தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படியாக மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரமான கர்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் கருணா என்கிற ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா.

மும்பைக்கு சென்றது முதலே சூர்யா தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு இந்த திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது இதன் பட்ஜெட் 600 கோடி என்று கூறப்படுகிறது. இந்த படம் மட்டும் பெரிய வசூல் கொடுக்கும் பட்சத்தில் இதனால் சூர்யாவின் மார்க்கெட் தமிழ் சினிமாவிலும் உயர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.

நான் எடுத்த தவறான முடிவு… ரஜினி படத்தை பார்த்த பிறகு மனம் திருந்தினேன்.. நடிகர் சூர்யா

Actor Suriya regrets his wrong decision after seeing a fan

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அதனாலேயே எப்போதும் சூர்யாவிற்கு வரவேற்பு என்பது இருந்து வருகிறது.

கொரோனா காலகட்டத்தில் சூர்யா நடித்த இரண்டு முக்கியமான திரைப்படங்கள் அதிக வரவேற்பு பெற்றன. அதில் ஒன்று சூர்ரை போற்று இன்னொன்று ஜெய் பீம் திரைப்படம்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே திரையரங்கில் வெளியாகவில்லை மாறாக ஓடிடியில்தான் வெளியானது. இதனால் திரையரங்க முதலாளிகளே சூர்யாவின் மீது மிகுந்த வருத்ததில் இருந்து வந்தனர். இதற்கு இடையே இது குறித்து ஒரு பேட்டியில் சூர்யாவே பேசியிருக்கிறார்.

சூர்யா எடுத்த முடிவு:

surya jaibhim

அதாவது அண்ணாத்த திரைப்படம் வெளியான பிறகு அதை பார்ப்பதற்காக நான் திரையரங்கிற்கு சென்று இருந்தேன். பொதுவாகவே ரஜினி சார் திரைப்படத்தை திரையரங்கில் தான் பார்ப்பேன். அப்படி பார்த்துவிட்டு வெளியில் வரும் பொழுது ஒருவர் நான் நடித்த ஜெய் பீம் திரைப்படத்தை பார்ப்பதற்காக டிக்கெட் வாங்குவதற்கு நின்று கொண்டு இருந்தார்.

அவர் ஒரு வயதான நபர் அவரிடம் நான் சென்று ஜெய் பீம் திரைப்படம் திரையரங்கில் வெளியாகவில்லை. ஓடிடியில்தான் வெளியாகி இருக்கிறது என்று கூறினேன். ஆனால் அவருக்கு ஓடிடி என்றால் என்ன என்று தெரியவில்லை.

அப்போதுதான் எனக்கு தெரிந்தது எவ்வளவு பெரிய தவறான முடிவை எடுத்துள்ளோம் என்று, ஓடிடி யில் வெளியாவதன் மூலம் அனைத்து மக்களிடமும் படம் சென்றடையும் என்று நினைத்தேன். ஆனால் ஓடிடியின் மூலமாக கூட அனைத்து மக்களையும் படம் சென்றடையாது என அப்போதுதான் தெரிந்தது என்று கூறி இருக்கிறார் சூர்யா.

படத்துல காம்ப்ரமைஸே கிடையாது!.. முதல்ல இருந்து எடுங்க!.. தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த சூர்யா!..

Actor Surya : தமிழ் சினிமாவில் எப்போதுமே பெரும் பட்ஜெட் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. திரைப்படம் எடுக்கப்படும் பொழுது அது சாதாரண பட்ஜெட் திரைப்படமாக இருந்தால் மக்கள் மத்தியில் அது குறித்து பெரிய எதிர்பார்ப்பு இருக்காது.

ஆனால் அந்த திரைப்படம் பெரும் பட்ஜெட் திரைப்படமாக இருக்கும் பட்சத்தில் அதற்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருக்கும். பாகுபலி எந்திரன் மாதிரியான திரைப்படங்கள் அப்படி பட்ஜெட் காரணமாக வரவேற்பை பெற்ற திரைப்படங்கள்தான்.

அப்படியாக தற்சமயம் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம் அதன் பட்ஜெட் காரணமாகவே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் அரச காலத்தில் நடக்கும் கதை என்று கூறப்படுகிறது. இந்த படம் தொடர்பாக வெளியாகும் போஸ்டர்கள், டீசர்கள் என அனைத்துமே அதிக வரவேற்பை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.

சொல்லப்போனால் இயக்குனர் சிறுத்தை சிவாவிற்கு அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக கங்குவா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை தயாரிக்கும் ஞானவேல் ராஜாவிற்கும் இந்த திரைப்படம் முக்கியமான திரைப்படம் ஆக இருக்கும்.

அதிருப்தியில் சூர்யா:

பெரும் பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டன. பாதிக்கு மேல் படத்திற்கு கிராபிக்ஸ் வேலைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இதுவரை முடிக்கப்பட்டுள்ள வேலைகளை பார்த்த சூர்யா மிகவும் மிரண்டு போய் உள்ளதாக கூறப்படுகிறது.

அவருக்கு இந்த படம் மிகவும் பிடித்து விட்டதாக பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் அந்த படத்தில் ஒரே ஒரு குறை மட்டும் சூர்யாவிற்கு நெருடலாக இருந்துள்ளது. அது என்னவென்றால் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளைப் பொறுத்தவரை தமிழ்நாடு இன்னமும் ஹாலிவுட் அளவிற்கு முன்னேறவில்லை.

kanguva

இந்த நிலையில் இந்த படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் அவ்வளவு நேர்த்தியாக இல்லை என்று சூர்யாவிற்கு தோன்றியதால் மீண்டும் முதலில் இருந்து கிராபிக்ஸ் வேலைகளை தொடங்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கூறிவிட்டார்.

இதற்கு அதிக செலவாகும் என்பதால் கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர். ஆனால் படம் வெளியானால் இந்த கிராபிக்ஸ் காட்சிகளால் படம் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்று சூர்யா கூறியதால் திரும்பவும் கிராபிக்ஸ் வேலைகளை மேம்படுத்த துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.