இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகி வரும் திரைப்படம் கருப்பு. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. இதுவரை காமெடி கதைக்களங்களில் மட்டுமே திரைப்படங்களை இயக்கி வந்த ஆர்.ஜே பாலாஜி இயக்கும் முதல் ஆக்ஷன் திரைப்படமாக கறுப்பு திரைப்படம் இருக்கிறது.
நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. படத்தில் பாடல்கள் கூட நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த படத்தின் மூலமாக சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்த படத்திலும் கூட சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ட்ரைலர் வெளியானப்போது படத்தின் வெளியீடு குறித்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. இதுக்குறித்து பார்க்கும்போது கறுப்பு திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமம் இன்னமுமே விற்பனையாகவில்லையாம்.
ஓ.டி.டிக்கு படம் விற்பனையான பிறகுதான் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. ஒருவேளை ஓ.டி.டிக்கு விற்பனையாவதில் பிரச்சனை ஏற்பட்டால் படம் அடுத்த வருடம்தான் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.