அந்த படம் மாதிரியே இருக்கு? சாய் அபயங்கரின் பின்னணி இசை குறித்து பேச்சு..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் அனிரூத். தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களுக்கு அனிரூத் தான் இசையமைக்க வேண்டும் என நடிகர்களும் தயாரிப்பாளர்களுமே கேட்க துவங்கிவிட்டனர்.

அந்த அளவிற்கு அனிரூத் பிரபலமடைந்துவிட்டார். ஆனால் அதே சமயம் இளையராஜா மாதிரி நிறைய படங்களுக்கு அனிரூத்தால் இசையமைக்க முடியவில்லை. எனவே அவரே முக்கியமான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர்கள் பலருக்குமே அனிரூத் மாதிரி இசையமைக்கும் ஒரு ஆள் தேவைப்பட்டது. இந்த நிலையில்தான் சாய் அபயங்கர் அதை பூர்த்தி செய்யும் வகையில் எண்ட்ரி கொடுத்துள்ளார். சாய் அபயங்கர் இசையில் வந்த 2 ஆல்பம் பாடல்கள் ஏற்கனவே நல்ல வெற்றியை கொடுத்துள்ளன.

இந்த நிலையில் இவர் அனிரூத்திடம் உதவியாளராக பணிப்புரிந்து வந்தார். இவருக்கு இப்போது பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியுள்ளன. ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் கறுப்பு படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார். நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் இவரது இசைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் கிட்டத்தட்ட இந்த இசையானது அனிரூத் இசையை போலவே இருப்பதாக கூறுகின்றனர் ரசிகர்கள். ஆனால் ஜெயிலர் மாதிரியான அனிரூத் இசையமைத்த படங்களில் சாய் அபயங்கர் இசையமைத்து இருப்பதால் அவரது இசையும் அனிரூத் இசையை போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version