Tag Archives: actor vikram

ராசியில்லாத நடிகர்.. அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்ரம்..!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே நல்ல வசூல் கொடுக்கும் படங்களாகதான் இருந்து வருகின்றன. அதனாலேயே தொடர்ந்து நடிகர் அஜித் அதிக சம்பளம் வாங்கி வருகிறார்.

அஜித் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த அதே காலகட்டத்தில்தான் நடிகர் விக்ரம், விஜய் மாதிரியான நிறைய நடிகர்கள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

ஆனால் அஜித் ஓரளவு வரவேற்பு பெற்ற பிறகும் கூட நடிகர் விக்ரமிற்கு அவ்வளவாக தமிழ் சினிமாவில் வரவேற்பு என்பது கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் அஜித் நடித்த காதல் கோட்டை திரைப்படம் அப்பொழுது உருவாகிக்கொண்டிருந்தது.

அந்த சமயங்களில் நடிகர் விக்ரம் சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் கூட போதும் என்கிற நிலையில்தான் இருந்து வந்தார். எனவே அவர் காதல் கோட்டை திரைப்படத்தில் வரும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டார்.

ஆனால் அப்பொழுது விக்ரம் நடித்த திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்தது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் விக்ரமிற்கு வாய்ப்புகள் கொடுக்க முடியாது அவர் ஒரு ராசியில்லாத நடிகர் என்று கூறிவிட்டார்.

அதனால் மனமுடைந்த விக்ரம் ஒரு சின்ன கதாபாத்திரத்திற்கு கூடவா ராசி பார்ப்பார்கள் என இருந்திருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட விக்ரம் இப்பொழுது மிக முக்கியமான ஒரு நடிகராக மாறி இருக்கிறார்.

என்னை நானே வாழ்த்திக்கிட்டாதான் உண்டு!.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்… காமெடி செய்த விக்ரம்!..

Actor Chiyaan Vikram : தமிழ் சினிமா நடிகர்களில் கொஞ்சம் நகைச்சுவையான ஜாலியான நடிகர் விக்ரம். பொன்னியின் செல்வன் படத்தின் பிரமோசனுக்காக பல ஊர்களுக்கு சுற்றியப் பொழுதே அதில் அதிக சேட்டை செய்த ஒரு நபராக விக்ரம்தான் இருந்தார்.

பல இடங்களில் ஜெயம் ரவியை கூட விக்ரம் கலாய்த்துருப்பதை பார்க்க முடியும். தமிழ் சினிமாவை பொறுத்தவரை சாதாரண படங்களில் நடிப்போம் என்று நடிக்காமல் தொடர்ந்து நடிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் விக்ரம்.

சொல்ல போனால் முடிந்த அளவு தன்னுடைய முழுமையான நடிப்பையும் வெளிப்படுத்தி பல படங்களில் நடித்து வருகிறார். ஏனெனில் அப்படியான படங்கள்தான் விக்ரமிற்கு ஒரு அடையாளமாக அமைகிறது. தற்சமயம் அவர் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்திற்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

படம் வெளியாகும் நிலையில் கண்டிப்பாக பெரும் வெற்றியை அடையும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் விக்ரம் வெகு நாட்களாக சினிமாவில் இருந்தாலும் அவருக்கு ஒரு பெரும் அடையாளத்தை கொடுத்த படம் சேது.

சேது திரைப்படம் வெளியான இரண்டு நாட்கள் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் அடுத்த சில நாட்களில் பெரும் வெற்றியை கொடுத்தது. அதற்குப் பிறகுதான் விக்ரமிற்கு சீயான் விக்ரம் என்ற பட்டப்பெயரும் வந்தது 10 பத்து டிசம்பர் 1999 அன்றுதான் சேது திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் நேற்று சேது திரைப்படத்தின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் விக்ரம் ஹாப்பி பர்த்டே சீயான் என்கிற என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் யாரும் பெரிதாக அதை கண்டு கொள்ளாமல் மறந்து விட்ட நிலையில் விக்ரமே தன்னுடைய முக்கியமான படத்தின் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.

சிம்புவை வச்சி படம் பண்ணுறேன்!.. காசு வாங்கிவிட்டு தயாரிப்பாளரை ஏமாற்றிய கௌதம் மேனன்!.

Simbu and Goutham Menon : மணிரத்தினம் போலவே தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று கனவுகளோடு சினிமாவிற்கு வந்தவர் இயக்குனர் கௌதம் மேனன். அவருக்கு மணிரத்தினத்திடம் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட தொடர்ந்து முயற்சி செய்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார்.

ஆனால் தொடர்ந்து கௌதம் மேனன் திரைப்படங்களை இயக்குவது என்பது தற்சமயம் பிரச்சனையாகி வருகிறது. அவர் நடிக்கும் திரைப்படங்களை கூட எளிதாக வெளியிட முடிகிறது ஆனால் அவர் இயக்கும் திரைப்படங்கள் வெளியாவதில் எக்கச்சக்கமான சிக்கல்கள் உருவாகி வருகின்றன. தற்சமயம் நடிகர் விக்ரமை வைத்து அவரை இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட முயற்சி செய்தார்.

இந்த திரைப்படம் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே எடுக்கப்பட்டு இன்னமும் வெளியாகாமல் இருக்கும் திரைப்படம். பல காட்சிகளை கூட பழையதாக தெரிவதால் நீக்கிவிட்டதாக கௌதம் மேனன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் இன்று படம் வெளியாகாது. இன்னும் இரண்டு நாட்கள் படத்தை வெளியிடுவதற்கு தேவைப்படும் என்று அறிவித்திருக்கிறார் கௌதம் மேனன்.

அப்படி என்னதான் இந்த படத்தில் பிரச்சனை என்று பார்க்கும் பொழுது கௌதம் மேனன் பலருக்கும் கொடுக்க வேண்டிய பணத்தொகையை நிலுவையில் வைத்திருப்பது தான் பெரும் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு தயாரிப்பாளரிடம் சூப்பர் ஸ்டார் என்னும் பெயரில் சிம்புவை வைத்து படம் இயக்கப் போவதாக கூறி அந்த படத்திற்காக அட்வான்ஸ் தொகையையும் பெற்றிருக்கிறார் கௌதம் மேனன்.

ஆனால் பிறகுதான் தெரிந்துள்ளது சூப்பர் ஸ்டார் என்னும் பெயரே வேறு ஒரு இயக்குனரிடம் ஏற்கனவே இருக்கிறது என்று, எனவே கௌதம் மேனன் தன்னை ஏமாற்றியதாக அந்த அட்வான்ஸ் தொகையை கேட்டு புகார் அளித்திருக்கிறார் அந்த தயாரிப்பாளர். இதற்கு நடுவே நடிகர் சிம்புவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் அவருக்கு வர வேண்டிய சம்பள பாக்கியை கேட்டு புகார் அளித்துள்ளார் இப்படி பல்வேறு புகார்கள் வந்த காரணத்தினால் கௌதம் மேனனின் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஒரே படத்தில் சம்பளத்தை கூட்டிய விக்ரம்.. விஜய் அஜித்துக்கு போட்டியா வருவார் போல!..

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்க கூடியவர் நடிகர் விக்ரம். ஒரு திரைப்படத்திற்காக உடல் எடையை கூட்ட வேண்டும் என்றாலும் குறைக்க வேண்டும் என்றாலும் அதற்கு எந்த ஒரு தயக்கமும் கூறாமல் செய்யக்கூடியவர் விக்ரம்.

ஆனால் சில காலங்களாக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் பெரிதாக வரவேற்பை பெறாத காரணத்தினால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வீழ்ச்சியை கண்டு வந்தார் விக்ரம். ஆனாலும் அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் முழு முயற்சியுடன்தான் நடித்து வருகிறார் என்பதை அவரது திரைப்படங்களில் பார்க்கும் போதே தெரிகிறது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் விக்ரமிற்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருந்தது. பொன்னியின் செல்வனின் அவர் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது.

அதைத் தொடர்ந்து தற்சமயம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். தங்கலான் திரைப்படம் தனது மார்க்கெட்டை பெரிதாக உயர்த்தும் என நம்புகிறார் விக்ரம்

இதனால் சில நாட்களாக வேறு எந்த திரைப்படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார். ஏனெனில் தங்கலான் திரைப்படம் தரும் வரவேற்பு அவருக்கு சம்பளத்தை உயர்த்தும் என்று நம்பினார். தங்கலான் திரைப்படத்திற்கு 22 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார் விக்ரம்.

ஆனால் தற்சமயம் அடுத்து கமிட்டாகும் திரைப்படத்திற்கு அவருக்கு 50 கோடி சம்பளமாக தருவதாக பேசப்பட்டுள்ளது. இப்படியே கதைகளை தேர்ந்தெடுத்துச் சென்றால் கண்டிப்பாக விஜய் அஜித்திற்கு ஒரு போட்டியான நடிகராக விக்ரம் வந்து நிற்பார் என்று சீயான் ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர்.

வங்கி ஊழியர்கள் எல்லாம் சேர்ந்து எடுத்த படம்!.. ஹீரோ நம்ம விக்ரமாம்.. என்னப்பா சொல்றீங்க!..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடிய நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். இதனால் எப்போதுமே விக்ரம் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

அதற்கு முக்கிய காரணமாக அமைந்த திரைப்படம் சேது. சேது திரைப்படம் வெளியானபோது அது சோகமாக க்ளைமேக்ஸாக முடிந்திருந்தாலும் கூட மன நலம் பாதிக்கப்பட்டவராக விக்ரம் நடித்திருந்தது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் இந்த திரைப்படத்தில் விக்ரம் நடித்ததற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு.

இந்த படத்திற்கு முன்னால் விக்ரம் விளம்பரங்களில்தான் நடித்து வந்தார். அந்த சமயத்தில் செல்வராஜ் என்னும் வங்கி ஊழியர் திரைப்படம் தயாரிப்பதில் ஆர்வமாக இருந்தார். ஆனால் படம் தயாரிக்கும் அளவிற்கு அவரிடம் பணம் இல்லை. எனவே அவருடன் பணிப்புரியும் வங்கி ஊழியர்களை ஒன்றிணைத்து ஒரு திரைப்படத்தை தயாரித்தார்.

அந்த திரைப்படத்தில் விக்ரமை கதாநாயகனாக நடிக்க வைத்தார். அதுதான் என் காதல் கண்மணி திரைப்படமாகும். இந்த திரைப்படம் அப்போது பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் வங்கி ஊழியர்களே தமிழ் சினிமாவிற்கு விக்ரமை அறிமுகப்படுத்தினர் என்பது சுவாரஸ்யமான தகவலாகும்.