Tag Archives: Biggboss tamil

ஆசிட் அடிப்பேன்.. அர்ச்சனாவுக்கு வந்த மிரட்டல்.. காவல் நிலையத்தில் புகார்.. வினையாக மாறிய பிக்பாஸ் சீசன் 8

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அதில் விஜய் டிவி பிரபலங்களின் ஊடுருவல் தற்சமயம் அதிகமாகி இருக்கிறது. பொதுவாகவே விஜய் டிவியில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் விஜய் டிவி பிரபலங்கள் தான் அதிகமாக இருப்பார்கள்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டும்தான் விஜய் டிவி இல்லாத வேறு பிரபலங்களும் கலந்து கொள்வதை பார்க்க முடியும். ஆனால் இந்த முறை பிக்பாஸிலும் அதிகமாக விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்படியாக கலந்து கொண்ட பிரபலங்களில் நடிகர் அருண் பிரசாத் முக்கியமானவர். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் அருண் பிரசாத். பிக் பாஸ் சீசன் 7ல் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட நடிகை அர்ச்சனாவை காதலித்து வருகிறார் அருண் பிரசாத்.

பிக்பாஸ் சீசன் 8:

biggboss

இது அனைவருமே அறிந்த விஷயம்தான் இந்த நிலையில் அருண் பிரசாத்துக்கும் முத்துக்குமரனுக்கும் இடையே தொடர்ந்து பிக்பாஸில் சண்டைகள் ஏற்பட்டு வருகிறது. வாரா வாரம் இருவருக்கும் இடையே ஏதாவது ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

இந்த வாக்குவாதத்தின் காரணமாக அவர்களது ரசிகர்களும் சண்டை போட்டுக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அதோடு நிறுத்திக் கொள்ளாமல் ரசிகர்கள் சிலர் அர்ச்சனாவை மிரட்டத் துவங்கியிருக்கின்றனர்.

ஆசிட் அடித்து விடுவேன் என்றெல்லாம் ரசிகர்கள் மிரட்டுவதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டிருக்கும் அர்ச்சனா இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்து இருக்கிறார். மேலும் அவர் தனது பதிவில் கூறும்போது இவ்வளவு மோசமான வார்த்தைகளை வெளிப்படுத்த என்ன காரணம் என்று தெரியவில்லை.

பிக் பாஸ் ஒரு விளையாட்டுதானே தவிர அது நிஜம் கிடையாது முத்துக்குமரனின் பெயரைக் கொடுக்கும் விதமாகவும் இப்படி செயல்படாதீர்கள் என்று பேசி இருக்கிறார்.

சின்ன வயசுலையே எனக்கு நடந்த அந்த சம்பவம்.. உடைஞ்சு போன வாழ்க்கைதான் என்னோடது.. கதறி அழுத அன்ஷிதா..!

Bigg Boss Tamil Season 8 Anshita Explains Her Childhood Bullies To Bigg Boss Contestants

விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை அன்ஷிதா. அன்ஷிதாவை பொருத்தவரை நன்றாக காமெடி செய்யக்கூடியவர் என்பதால் அவருக்கு தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் வாய்ப்புகள் கிடைத்தது.

முக்கியமாக குக் வித் கோமாளியில் இவர் அதிக வரவேற்பு பெற்றார். குக் வித் கோமாளி சீசன் 5 வெளியான பொழுது அதில் கோமாளியாக அன்ஷிதாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் மக்கள் விரும்பும் வகையில் அவர் நடித்திருந்தார்.

தொடர்ந்து அவருக்கு வரவேற்பு கிடைக்க துவங்கியது. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஊ சொல்றியா மாமா மாதிரியான நிறைய நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கெடுத்த துவங்கினார். அதன் மூலம் அதிக பிரபலமானதை தொடர்ந்து தற்சமயம் பிக் பாஸ் சீசன் எட்டிலும் முக்கிய போட்டியாளராக இவர் இருந்து வருகிறார்.

anshita

கண்ணீர் விட்டு அழுத அன்ஷிதா:

விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் அதே சமயம் அன்ஷிதா குறித்த சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சீரியல் நடிகர் அர்னவ் மற்றும் அன்ஷிதா அவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருந்து வருவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இதற்கு நடுவே தற்சமயம் பிக்பாஸில் பேசிய அன்ஷிதா தனது கடந்த கால வாழ்க்கை குறித்து கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது சிறு வயதிலேயே எனது தாயும் தந்தையும் பிரிந்து விட்டனர்.

அதனால் என்னை ஆசிரமத்தில்தான் படிக்க வைத்தனர் அங்கு நான் தங்கி இருக்கும் பொழுது மற்ற பிள்ளைகளுக்கு தாய் தந்தையிடம் கிடைக்கும் அரவணைப்புகள் எதுவுமே எனக்கு கிடைத்தது கிடையாது எனது வாழ்க்கையே ஒரு உடைந்து போன கண்ணாடி போலதான் எனக் கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார் அன்ஷிதா. அந்த வீடியோ இப்பொழுது ட்ரெண்டாக துவங்கியிருக்கிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் ரகளைகள்… இதெல்லாம் தெரியாம போச்சே.. அதிர்ச்சி கொடுத்த பிரபலம்.!

There are some things that happen secretly in Bigg Boss show beyond what we see. An actress revealed them

பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போதுமே மக்கள் மத்தியில் அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் பிக் பாஸ் குறித்த மாற்று கருத்துக்கள் என்பதும் மக்கள் மத்தியில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

ஏனெனில் யோசித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட 18 பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கின்றனர். அவர்களுக்கு பொழுதுபோக்கிற்கு எந்த ஒரு விஷயமும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்காது.

டிவி மொபைல் மாதிரியான எந்த விஷயத்திற்குமே அனுமதி கிடையாது எப்படி அவர்கள் அங்கு 100 நாட்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் கேள்வியாகவே இருந்து வந்தது.

biggboss tamil

உண்மையை கூறிய நடிகை:

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற நமிதா மாரிமுத்து இது குறித்து சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது நாம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் பொழுது நமக்கு என்ன வகையான மாதிரி மது பிடிக்கும் சிகரெட் பிடிக்கும் என்றெல்லாம் கேட்டு விடுவார்கள்.

பிறகு நாம் கேட்கும் சிகரட்டை சிகரெட் ரூம் என்று ஒரு அறை இருக்கும். அந்த அறையில் வைத்து விடுவார்கள். அங்கு சென்று அதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு பாக்ஸ் சிகரெட் பிக் பாஸ் வீட்டில் இருந்து வழங்கப்படும்  என்று கூறியிருக்கிறார்.

இந்த விஷயம் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது ஏனெனில் இதெல்லாம் மறைக்கப்பட்டுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

தடியனுக்கு சோறு பத்தாது… ரவீந்தரை விமர்சித்த பெண்கள்.. பிக்பாஸில் போடாத விஷயம்.!

பிக் பாஸ் நிகழ்ச்சிகள் முதல் வாரம் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்ட நபராக ரவீந்தர் இருந்து வந்தார். கடந்த எட்டு சீசன்களிலுமே தொடர்ந்து பிக் பாஸ் குறித்து விமர்சனம் அளித்து வந்தவர் ரவிந்தர்.

அதனால் ரவீந்திரால் நிறைய விஷயங்களை பிக் பாஸில் புரிந்து கொள்ள முடித்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அதில் நடக்கும் அனைத்து விஷயங்களும் நம் முன் காட்டப்படுவது கிடையாது.

அதில் நாம் எதை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை மட்டும் தான் நமக்கு காட்டுவார்கள். அது இல்லாமல் நடக்கும் விஷயங்கள் பெரும்பாலும் பிக் பாஸில் வராது.

biggboss rj ananthi raveendar

உண்மையை கூறிய ரவீந்தர்:

இதனால் பிக் பாஸில் கலந்து கொண்ட நிறைய போட்டியாளர்கள் இதை இதற்கு முன்பே கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் ரவிந்தரும் அப்படியான ஒரு செய்தியை கூறியிருக்கிறார். அதாவது பிக் பாஸ் வீட்டில் ஸ்மோக் சோன் என்கிற ஒரு இடம் இருக்கும்.

அந்த இடத்தில்தான் புகை பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சிகரெட் பிடிப்பவர்கள் அங்கு சென்று பிடிக்கலாம். இப்படி இருக்கும் பொழுது அங்கு நடக்கும் விஷயங்கள் எதுவுமே கேமராவில் பதிவாகாது அதனால் அது பிக் பாஸிலும் வராது.

அங்கு செல்லும் பெண்கள் என்னை குறித்து எப்போதும் தவறாக பேசுவார்கள். குண்டனுக்கு சாப்பாடு பத்தாது என்றெல்லாம் என்னை பற்றி பெண்கள் அணியினர் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன் என்று திடுக்கிடும் தகவல்களை கொடுத்திருக்கிறார் ரவீந்தர். இது பெண்கள் அணியினருக்கு ஓட்டில் பின்னடைவு ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெஃப்ரிக்கு வலை வீசிய பெண்கள் அணி… ஆபத்தில் இருக்கும் ஆண்கள் அணி.. இந்த வாரம் பிக்பாஸ் வேற ரகம்!..

பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கிய இரண்டு வாரங்களில் நல்ல வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது. முதல் ஒரு வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நன்றாக இல்லை.

ஆனால் கடந்த வாரம் நன்றாக சென்றதாக பிக்பாஸ் ரசிகர்கள் கூறுகின்றனர். அதேபோல சனி ஞாயிறு கிழமைகளில் விஜய் சேதுபதி பேசிய விதமும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான போட்டிகள் மற்றும் நாமினேஷன் குறித்த விவரங்கள் எல்லாம் இனிமேல்தான் தெரிய வரும். வாரா வாரம் ஆண்கள் மற்றும் பெண் அணியில் இருந்து ஒரு நபர் இன்னொரு அணிக்கு செல்வது வழக்கமாகும்.

jeffery

ஜெஃப்ரி அணி மாற்றம்:

அந்த வகையில் இந்த வாரம் யார் ஆண்கள் அணியிலிருந்து பெண்கள் அணிக்கு செல்ல போகிறார்கள் என்கிற கேள்வி இருந்து வந்தது தற்சமயம் ஜெஃப்ரி தான் ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணிக்கு செல்ல போகிறார்.

அதே போல பெண்கள் அணியில் இருந்து சாச்சனா ஆண்கள் அணிக்கு வர இருக்கிறார்.  ஜெஃப்ரியை பொறுத்தவரை ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி இரண்டிலுமே நல்ல நம்பிக்கை கொண்ட போட்டியாளராக இருந்து வருகிறார். இதனால் பெண்கள் அணிக்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக ஒரு வேளை அவர் விளையாட துவங்கி விட்டார் அது ஆண்கள் அணிக்கு பெரிய பிரச்சனையாக மாறிவிடும் நிலை உள்ளது. இந்த வாரத்தில் என்ன நடக்கும் என தெரியும்.

அந்த மாதிரி வேலைக்கு போகாதன்னு சொன்னேன்ல.. காதலனால் அவதிக்குள்ளான சௌந்தர்யா நஞ்சுண்டன்.. யாருமே அறியாத பக்கங்கள்..!

தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவராக நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன் இருந்து வருகிறார். இதற்கு முன்பாக வேற மாதிரி ஆபீஸ் என்கிற ஒரு வெப் தொடரில் நடித்து வந்தார்.

அந்த தொடரின் வெற்றிக்கு பிறகு இவர் அதிக பிரபலமடைந்தார். அதன் மூலமாகதான் இவர் பிக் பாஸில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

தற்சமயம் பிக் பாஸில் கலந்து கொண்ட சௌந்தர்யா நஞ்சுண்டன் தனது பழைய காதல் குறித்து கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது பள்ளி பருவத்தில் இருந்தே ஒருவன் என்னை காதலித்து வந்தான். நானும் அவனை காதலித்தேன்.

soundarya

உண்மையை கூறிய சௌந்தர்யா:

கல்லூரி வரை எங்களது காதல் சென்றது. ஆனால் அவன் எப்பொழுதும் உடனே கோபப்பட்டு விடுவான். நான் ஏதாவது தவறு செய்ததாக நினைத்தால் உடனே என்னை அடித்து விடுவான். இப்படி அவனிடம் நிறைய முறை அடி வாங்கி இருக்கிறேன்.

ஒருமுறை கண்ணாடி பாட்டிலை கொண்டு கூட என்னை அடித்தான். ஆனால் நெடுநாள் காதல் என்பதால் எனக்கு அவனை விடுவதற்கு மனமில்லாமல் இருந்தது. அவனுக்கு நான் நடிக்க செல்வதில் விருப்பம் இல்லாமல் இருந்தது. ஒரு முறை போட்டோ ஷூட் சென்று அங்கு நான் எடுத்து வைத்திருந்த போட்டோக்களை பார்த்து அவன் என்னை அங்கேயே அடித்து விட்டான்.

அதன் பிறகு நான் அவனை விட்டு பிரிந்து விட்டேன் என்று கூறி இருக்கிறார் சௌந்தர்யா நஞ்சுண்டன். இவரை மாதிரி ஒரு பெண் கிடைப்பது கடினம் என்று ரசிகர்கள் பார்த்து வந்த நிலையில் இவரையும் ஒருவன் அடித்திருக்கிறானே என்று ரசிகர்கள் இது குறித்து அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

இதை வச்சிதானடா அடுத்து புரோகிராமு… செட் பொருளை உடைத்த போட்டியாளர்கள்.. பிக்பாஸ்க்கே ஷாக் கொடுக்குறாங்க..!

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்சமயம் இரண்டாவது வாரமாக நல்ல வரவேற்பை பெற்று சென்று கொண்டு இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில்  முக்கிய போட்டியாளரான ரவீந்தர் எலிமினேஷன் ஆனார். அதற்குப் பிறகு இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் சண்டைகள் கொஞ்சம் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன.

இனி போட்டியாளர்களுக்கு இடையே அதிகமான சண்டைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்ற மாதிரிதான் அவர்களுக்கு டாஸ்க்குகளும் வழங்கப்படுகிறது. முன்பை விட இப்பொழுது டாஸ்க்குகளில் மிகவும் உக்

biggboss
biggboss
biggboss
biggboss

கிரமாக போட்டியாளர்கள் விளையாடுவதை பார்க்க முடிகிறது.

பிக்பாஸில் உடைந்த பொருள்:

 

இந்த நிலையில் இன்று பஸர் அடிக்கும் டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டிருந்தது அந்த டாஸ்க்குகாக ஒரு பட்டனும் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. இந்த பட்டனை அழுத்தும் பொழுது சிகப்பு கலர் லைட் எரியும் படி அந்த பட்டன் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விளையாட வந்த போட்டியாளர்கள் அவர்களுக்குள் சண்டை போட்டு அந்த பட்டனையை உடைத்து விட்டனர். இப்படி இவர்களுக்குள் சண்டை போட்டு பிக் பாஸ் பொருட்களை போட்டு உடைத்தால் நிகழ்ச்சி எப்படி தொடர்ந்து நடக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.

ஆனால் கோடிகளில் புரளும் பிக் பாஸில் இதெல்லாம் ஒரு செலவா என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன எப்படி இருந்தாலும் போட்டியாளர்களுக்கு சண்டையிட தொடங்கி இருக்கிறார்கள் என்பது மக்கள் மத்தியில் ஆர்வத்தை எழுப்ப துவங்கி இருக்கிறது.

இதைதான் யூனிட்டி மண்ணாங்கட்டின்னு சொன்னீங்களா.. விஜய் சேதுபதியை எதிர்த்து பேசிய சுனிதா..!

தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரத்திலேயே இந்த நிகழ்ச்சிக்கு நல்ல அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ஆனால் முன்பு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த முறை சண்டைகள் அதிகமாக இல்லை என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. முன்பெல்லாம் அதிகமாக சண்டைகள் நடக்கும் அதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியை அதிக சுவாரசியமாக கொண்டு செல்லும்.

சண்டை இல்லாத போட்டி:

ஆனால் இந்த முறை அதிகபட்சம் இருக்கும் போட்டியாளர்கள் எல்லாம் சமரசமாக போய்விடுகிறார்கள். அதனால் பெரிதாக சண்டை என்பதே இல்லாமல் இருந்து வருகிறது போக போக இவர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகள் இவர்களுக்குள் அதிக சண்டையை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

soundarya

இந்த நிலையில் வார இறுதியில் விஜய் சேதுபதி பல விஷயங்கள் குறித்து பேசி வந்தார். அப்பொழுது சாச்சனாவை அழைத்து வெளியில் இருந்து நீ பார்த்த பொழுது பெண்களில் மூன்று போட்டியாளர்கள் உனக்கு வீக்காக தெரிவதாக கூறினாயே? அது குறித்து அவர்களிடம் பேசினாயா? என்று கேட்டார்.

ரவீந்தர் கூறிய உண்மை:

இல்லை பேசவில்லை என்று சாச்சனா கூறினார். இந்த நிலையில் ரவீந்தரிடம் கேட்கும் பொழுது ஆமாம் என்னிடம் சௌந்தர்யா ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சுனிதா ஆகியோர் வீக்கான போட்டியாளர்கள் என்று கூறினார் என்று கூறினார் ரவீந்தர்.

இதனால் தடுப்பான சுனிதா நீங்கள் தான் சார் எங்களுக்குள் யூனிட்டி மண்ணாங்கட்டி எல்லாம் இருக்கு என்று கூறுகிறீர்கள். உண்மையில் அவள் எங்களிடம் தானே கூறியிருக்க வேண்டும் என்று கோபப்பட்டுள்ளார் சுனிதா.

 

இந்த சதிக்காரன் கிட்ட சிக்க கூடாது.. உஷாரான பெண்கள் அணி.. ரவீந்தர் அப்படி என்ன பண்ணுனார்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து அதில் ஒரு மாஸ்டர் மைண்டாக செயல்பட்டு வருபவர் ரவீந்தர். ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன் குறித்தும் ரிவ்யூ கொடுத்து வந்தவர் ஆவார்.

அதனால் அவர் பிக் பாஸ் சென்ற பிறகு பிக் பாஸின் களம் என்பதே மாறி இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்தையும் பொறுமையாக நிதானித்து பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் ஆடி வருகிறார் ரவீந்தர்.

அந்த வகையில் நேற்று அனைவரையும் ஏமாற்றும் வகையில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருந்தார். அவருக்கும் ரஞ்சித்துக்கும் இடையே சண்டை வருவது போன்ற ஒரு நடிப்பை ஏற்கனவே செட் செய்து விட்டு அப்படி நடித்து அனைவரையும் ஏமாற்றி இருந்தனர்.

ரவீந்தர் செய்த வேலை:

இந்த நிலையில் இதுக்குறித்து ரவீந்தர் தர்ஷா குப்தாவிடம் பேசும் பொழுது ரஞ்சித் இந்த வாரம் எலிமினேட் ஆகி போவதற்கான வாய்ப்புகள் இருந்தது அவரை காப்பாற்றி விடலாம் இதை செய்தேன் என்று கூறினார். இதனால் பெண்கள் அணியினர் மிகவும் கோபப்பட துவங்கியிருக்கின்றனர்.

எங்களை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு நீங்கள் ரஞ்சித்தை பிரமோட் செய்திருக்கிறீர்கள் என்று ரவீந்தரின் மீது குற்றம் சுமத்த துவங்கி இருக்கின்றனர். மேலும் இது குறித்து தர்ஷா குப்தா மற்றவர்களிடம் சென்று கூறும் பொழுது ரவீந்தரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தினமும் காலையில் எழுந்தவுடன் எப்படி இந்த கேமை விளையாடலாம் என்று இவர் பிக்ஸ் செய்து கொண்டு விளையாடுகிறார் என்று அவர் கூறியிருக்கிறார்.

டாஸ்க்குன்னு டாஸ்க்குன்னு காலை உடைச்சி அனுப்பிட்டாங்க.. ரெண்டாம் நாளே ரவீந்தருக்கு நடந்த சம்பவம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் துவங்கிய முதல் நாளில் இருந்து டாஸ்க்குகளும் கொடுக்கப்பட துவங்கி இருக்கின்றன. ஏனெனில் ஒவ்வொரு நாளும் புதுப்புது டாஸ்க்குகளை செய்யும் பொழுதுதான் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக செல்லும் என்பதால் இந்த மாதிரியான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகின்றன.

ஆனால் இந்த முறை தொடர்ந்து இரண்டு நாட்களாக அதிக டாஸ்க் பிக்பாஸில் வழங்கப்பட்டு வருகின்றன. 18 பேரும் நிகழ்ச்சிக்குள் வந்திருப்பதால் மக்கள் மத்தியில் அது குறித்து நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும்.

அதை பூர்த்தி செய்யும் விதத்தில் போட்டிகள் நடத்தப்பட வேண்டி இருப்பதால் இவ்வாறு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஓடிப் போய் நாற்காலிகளில் அமரும் விளையாட்டு ஒன்று டாஸ்க்காக கொடுக்கப்பட்டது.

ரவீந்தருக்கு நடந்த சம்பவம்:

இந்த விளையாட்டில் கலந்து கொள்வதில் ரவீந்திரக்கு அதிக பிரச்சனைகள் இருந்தது. அவருக்கு உடல் எடை அதிகம் என்பதால் ஓடுவது மாதிரியான விஷயங்களை செய்ய முடியாது. இந்த நிலையில் ஆரம்பத்திலேயே அவர் களப்படைந்து போனார்.

இருந்தாலும் கூட விதிமுறைகள் படி அவர் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது அவர் வேறு வழியின்றி கலந்து கொண்டார். இதனால் அவரால் நிற்கவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பிறகு மருத்துவ உதவி பெற்ற ரவீந்தர் இப்பொழுது கழிவறைக்கு கூட நண்பர்கள் உதவியுடன் போகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார்.

இந்த நிலையில் 100 நாளும் இவர் எப்படி தாக்குப்பிடிப்பார் என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி இருக்கின்றன. மேலும் ஒருத்தரின் உடல்நலம் கருதி பிக் பாஸ் அவர்களுக்கு டாஸ்க் வேலையை வழங்க வேண்டும் ஒரு வேலை ஒரு மாற்றுத்திறனாளி பிக் பாஸிற்குள் வந்தால் அவரையும் ஓடச் சொல்வார்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

விஜய் சேதுபதியாவே இருந்தாலும் இதான் நிலைமை… தூக்கி அடித்த பிக்பாஸ்.. இப்படி ஒன்னு நடந்துச்சா?

தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவியில் துவங்கி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது. மக்களிடம் வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காகவே அதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியாளர்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருக்கின்றனர் பிக் பாஸ் குழுமத்தினர்.

இந்த நிலையில் அளவுக்கதிகமாக இந்த முறை 18 போட்டியாளர்கள் முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதை பார்க்க முடிந்தது. ஏனெனில் இதற்கு பிறகு வைல்ட் கார்ட் என்கிற ஒரு ரவுண்டு வரும். அதிலும் சிலர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள்.

vijay sethupathi bigboss

போன முறை வி.ஜே அர்ச்சனா மாதிரியான சிலர் அப்படித்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்கள். அப்படி இருக்கும் பொழுது முதல் நாளே 18 பேர் செல்ல காரணம் என்ன என்று ஒரு கேள்வி இருந்து வந்தது.

விஜய் சேதுபதி சப்போர்ட்:

இது குறித்து தற்சமயம் மக்கள் மத்தியில் ஒரு பேச்சுக்கள் இருந்து வந்தன. அதாவது மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனாவும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

உண்மையிலேயே சாச்சனா கலந்து கொண்டதற்கு காரணம் விஜய் சேதுபதி தான் என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதிதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரிந்துரை செய்து இவருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

ஆனால் அவரை நிகழ்ச்சியிலிருந்து தூக்க வேண்டும் என்பதற்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளே எவிக்‌ஷன் என்கிற விஷயத்தை வைத்து அவரை தூக்கி இருக்கின்றனர் என்று மக்கள் கூறுகின்றனர். எனவே விஜய் சேதுபதியாகவே இருந்தாலும் பரிந்துரை செய்தெல்லாம் பிக் பாஸிற்கும் கொண்டு வந்து விட முடியாது என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த அடிப்படை விஷயங்கள் கூட எங்களுக்கு கொடுக்கல.. வந்த உடனேயே கடுப்பான அர்னவ்.. ஏன் பிக்பாஸ் இப்படி பண்ணுனீங்க?.

நேற்று பிக் பாஸில் 18 போட்டியாளர்கள் உள் நுழைந்த நிலையில் தற்சமயம் இன்றிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்து முதல் நாள் நிகழ்வு சென்று கொண்டுள்ளது.

இன்றிலிருந்து ஹாட்ஸ்டார் சேனலிலும் லைவாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஓட துவங்கியிருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பங்கு கொண்ட முதல் நாளே அவர்களுக்கு டாஸ்க் வழங்கப்பட்டது.

தாவது ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் ஒரு பக்கமுமாகதான் இந்த ஒட்டுமொத்த பிக் பாஸில் விளையாட போகிறார்கள். போன முறை பெண்கள் பாதுகாப்பிற்கு பிரச்சினை வந்த காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

arnav

வசதி குறைவு:

ஆனால் ஒரு தரப்பில் மட்டுமே அதிக வசதிகளும் மற்றொரு பக்கம் வசதிகள் குறைவாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எப்படி இந்த விளையாட்டில் செல்ல போகிறது என்பது ஒரு பக்கம் கேள்வியாக இருந்து வருகிறது.

மேலும் போன பிக் பாஸில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட வசதிகள் பலவும் இப்பொழுது இல்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது. தற்சமயம் உள்ளே சென்று இருக்கும் போட்டியாளர் ஆர்னவ் இந்த விஷயங்களை கவனித்து பேசி வருகிறார்.

போன முறை பிக் பாஸில் இருந்தவர்களுக்கு நிறைய வசதிகள் இருந்தது. இந்த முறை உடற்பயிற்சி செய்வதற்கான சாதனங்கள் கூட இல்லை. மேலும் குளிப்பதற்கு முன்பு நீச்சல் குளம் எல்லாம் வைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அதுவும் இல்லை.

டாஸ்க் கொடுக்கும் பொழுது அதில் தவறு செய்பவர்களை அடைப்பதற்கு சிறை ஒன்று வைக்கப்பட்டிருக்கும் அதுவும் இந்த முறை இல்லை ஏன் இப்படி செய்திருக்கிறார்கள் என தெரியவில்லை என்று கூறி வருகிறார் அர்னவ்.