Bigg Boss Tamil
தடியனுக்கு சோறு பத்தாது… ரவீந்தரை விமர்சித்த பெண்கள்.. பிக்பாஸில் போடாத விஷயம்.!
பிக் பாஸ் நிகழ்ச்சிகள் முதல் வாரம் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்ட நபராக ரவீந்தர் இருந்து வந்தார். கடந்த எட்டு சீசன்களிலுமே தொடர்ந்து பிக் பாஸ் குறித்து விமர்சனம் அளித்து வந்தவர் ரவிந்தர்.
அதனால் ரவீந்திரால் நிறைய விஷயங்களை பிக் பாஸில் புரிந்து கொள்ள முடித்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அதில் நடக்கும் அனைத்து விஷயங்களும் நம் முன் காட்டப்படுவது கிடையாது.
அதில் நாம் எதை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை மட்டும் தான் நமக்கு காட்டுவார்கள். அது இல்லாமல் நடக்கும் விஷயங்கள் பெரும்பாலும் பிக் பாஸில் வராது.
உண்மையை கூறிய ரவீந்தர்:
இதனால் பிக் பாஸில் கலந்து கொண்ட நிறைய போட்டியாளர்கள் இதை இதற்கு முன்பே கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் ரவிந்தரும் அப்படியான ஒரு செய்தியை கூறியிருக்கிறார். அதாவது பிக் பாஸ் வீட்டில் ஸ்மோக் சோன் என்கிற ஒரு இடம் இருக்கும்.
அந்த இடத்தில்தான் புகை பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சிகரெட் பிடிப்பவர்கள் அங்கு சென்று பிடிக்கலாம். இப்படி இருக்கும் பொழுது அங்கு நடக்கும் விஷயங்கள் எதுவுமே கேமராவில் பதிவாகாது அதனால் அது பிக் பாஸிலும் வராது.
அங்கு செல்லும் பெண்கள் என்னை குறித்து எப்போதும் தவறாக பேசுவார்கள். குண்டனுக்கு சாப்பாடு பத்தாது என்றெல்லாம் என்னை பற்றி பெண்கள் அணியினர் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன் என்று திடுக்கிடும் தகவல்களை கொடுத்திருக்கிறார் ரவீந்தர். இது பெண்கள் அணியினருக்கு ஓட்டில் பின்னடைவு ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
