Bigg Boss Tamil
இரண்டு பேர் சேர்ந்தாலே அதான் பண்ணுவாங்களா? ரசிகர்களின் கேள்வியால் மனம் வருந்திய ஜாக்குலின்.!
பிக்பாஸ் நிகழ்ச்சியானது பல மொழிகளிலும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. வழக்கமாக செல்வதை விடவும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி அவ்வளவு சுவாரஸ்யமாக செல்லவில்லை. இந்த முறை பார்வையாளர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குறைந்து விட்டனர்.
இந்த எட்டாவது சீசனில் சௌந்தர்யா, முத்துக்குமரன் மாதிரியான சில போட்டியாளர்கள் முக்கியமானவர்களாக இருந்தனர். அதில் முக்கியமானவராக ஜாக்குலினும் இருந்தார்.
ஜாக்குலின் வி.ஜேவாக இருந்து இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக இருந்து இப்போது பிரபலமாகியுள்ளார். ஆரம்பத்தில் ஜாக்குலினின் ஆட்டம் என்பது கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது.
தொடர்ந்து சௌந்தர்யாவின் நல்ல தோழியாக இவர் இருந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் கலந்துக்கொண்டார். இந்த நிலையில் ஒரு பதிவில் தன்னிடம் ஒருவர் தவறாக பேசியது குறித்து கூறியுள்ளார்.
ஒரு பதிவில் தோழியுடன் புகைப்படம் போட்டப்போது நீங்கள் என்ன லெஸ்பியனா என கேட்டார் ஒருவர். இரண்டு தோழிகள் வேறு எப்படி போட்டோ எடுக்க முடியும். ரெண்டு பெண்கள் சேர்ந்து இருந்தாலே பொதுவாகவே இந்த மாதிரிதான் நினைக்கிறார்கள் என கூறியிருந்தார் ஜாக்குலின்.
