Special Articles
30 வருடங்களாக விலையை ஏற்றாத பார்லே ஜி பிஸ்கட்.. வியக்க வைக்கும் பின்கதை..!
கடந்த 30 வருடங்களில் உலகம் முழுக்க தொழில்நுட்ப வளர்ச்சியில் துவங்கி எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. 30 வருடங்களுக்கு முன்பு ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்ட பொருட்கள் எல்லாம் இப்பொழுது பத்து ரூபாய்க்கு விற்பதை பார்க்கிறோம்.
அந்த அளவிற்கு விலை ஏற்றத்தின் அளவும் அதிகரித்து இருக்கிறது அதேபோல மக்களின் பொருளாதாரமும் மாறுபட்டு இருக்கிறது. ஆனால் இந்த நிலையிலும் 30 வருடமாக ஒரு நிறுவனம் தனது பொருளின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்து வருகிறது என்றால் அது எவ்வளவு ஆச்சரியமான விஷயம்.
அப்படியான ஒரு நிறுவனம்தான் பார்லே ஜி சிறு வயதுகளில் 90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் கண்டிப்பாக பார்லே ஜி பிஸ்கட்ஸ் முக்கியமான ஒரு அங்கமாக இருக்கும். சக்திமான் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலப்படுத்தப்பட்ட ஒரு பிஸ்கெட்டாக பார்லேஜி இருந்து வந்தது.
பார்லே ஜி பிஸ்கட்டின் கதை:
இந்த நிலையில் பார்லர் ஜி நிறுவனம் முதன் முதலாக 1994 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அப்பொழுது ஒரு பாக்கெட் பார்லேஜி பிஸ்கட்டின் விலை நான்கு ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. அப்பொழுது பெட்ரோல் விலை 16 ரூபாய். டீசல் ஒரு லிட்டர் எட்டு ரூபாய்.
ஆனால் இப்பொழுது 30 வருடங்கள் கடந்துவிட்டன இப்பொழுது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ₹100 க்கும் அதிகமாக இருக்கிறது. கிட்டத்தட்ட எட்டு மடங்குக்கும் அதிகமாக விலைவாசி உயர்ந்து இருக்கிறது. ஆனால் இப்பொழுதும் பார்லே ஜி பிஸ்கட்டின் விலை ஐந்து ரூபாய் மட்டுமே.
கடந்த 30 வருடங்களில் தனது பிஸ்கட் பாக்கெட்டின் விலையை ஒரு ரூபாய் மட்டும் தான் அதிகரித்து இருக்கிறது பார்லே ஜி நிறுவனம். அந்த நிறுவனம் நஷ்டத்தில் செல்கிறது அதனால் தான் அதன் விலை பெரிதாக உயர்த்தப்படவில்லை என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.
ஆனால் அதில் உண்மை இல்லை 2013 ஆம் ஆண்டு மட்டும் பார்லே ஜி பிஸ்கட் 5000 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியிருந்தது. அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்து 2022 ஆம் ஆண்டு 16,000 கோடி ரூபாய்க்கு பார்லேஜி பிஸ்கட் விற்பனையாகி இருக்கிறது. எப்பொழுதும் டீக்கடைகளில் பார்லே ஜி பிஸ்கட்டுகளை பார்க்க முடியும்.
ஆனால் மக்களின் நலன் கருதி விலை ஏற்றத்தை செய்யாத ஒரு நிறுவனமாக பார்லேஜி இருந்து வருகிறது. எவ்வளவோ புதுப்புது பிஸ்கட்டுகள் பார்லேஜிக்கு போட்டியாக வந்துவிட்டாலும் கூட இன்னும் ஏழை எளிய மக்கள் வாங்கும் ஒரு தயாரிப்பாக பார்லே ஜி பிஸ்கட் இருந்து வருகிறது.
