விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரும் பிரபலமான ஒரு திரைப்படமாக 23ஆம் புலிகேசி திரைப்படம் இருந்தது. வடிவேலு நடிப்பில் வெளியான 23ஆம் புலிகேசி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

படம் முழுக்கவே அரசியல் ரீதியான நகைச்சுவைகள் மிக அதிகமாகவே இருந்தது. அதனை தொடர்ந்து அந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கவே அதன் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என திட்டமிடப்பட்டது. அப்படியாக 24 ஆம் புலிகேசி என்கிற படத்தின் கதையை சிம்புதேவன் தயார் செய்தார்.

இதில் மொத்தம் 3 வேடங்களில் வடிவேலு நடிப்பது என முடிவானது. அதன்படி படப்பிடிப்பும் துவங்கியது. ஆனால் பாதியிலேயே அந்த படம் நின்று போனது. இயக்குனருக்கும் வடிவேலுவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இந்த திரைப்படம் நின்று போக காரணம் என கூறப்பட்டது. பொதுவாக நகைச்சுவை காட்சிகளை பொறுத்தவரை அதை வடிவேலு அவருக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்துக்கொள்வார்.

ஆனால் 24 ஆம் புலிகேசி படத்தில் காட்சியை மாற்றுவதற்கு இயக்குனர் அனுமதிக்கவில்லை என்றும் அதனால்தான் அந்த படம் நின்று போனது என்றும் பேச்சுக்கள் உண்டு. இந்நிலையில் இந்த கதையில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் சிம்புதேவன்.

அதனை தொடர்ந்து 3 வேடங்களில் விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிப்பதாக முடிவானது. ஆனால் படத்தின் காமெடி காட்சிகள் விஜய் சேதுபதியை விடவும் வடிவேலுவிற்கு அதிகமாக செட் ஆகும் என்கிற நிலை  இருந்தது. எனவே விஜய் சேதுபதியும் கூட அந்த படத்தில் நடிக்கவில்லை.

இதனால்  இப்போது வரை 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் என்பது உருவாகவே இல்லை

Share Share on Facebook Share on X Share on LinkedIn Share on Pinterest Share on WhatsApp

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.