சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

Cinema History Tamil Cinema News

தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்கள் எடுக்கப்பட்டு பல வருடங்கள் ஆன பிறகும் கூட திரைக்கு வராமலே போய் இருக்கின்றன. அப்படி 2023 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு இன்றும் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படம் துருவ நட்சத்திரம்.

துருவ நட்சத்திரம் திரைப்படம் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த திரைப்படமாகும். பொதுவாகவே கௌதம் மேனன் இயக்கும் திரைப்படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு. அதுவும் கௌதம் மேனன் விக்ரம் காம்போவில் திரைப்படம் வந்ததே இல்லை.

இதனாலேயே இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. துருவ நட்சத்திரம் திரைப்படம் ஒரு பெரிய பட்ஜெட் படமாகும். முழுக்க முழுக்க இந்த படம் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படமாகும்.

இந்த நிலையில் 2023 நவம்பரிலேயே இந்த படம் திரைக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால் அப்போது முதலே பல்வேறு சிக்கல்களை இந்த திரைப்ப்டம் சந்தித்து வருகிறது. இதனால் படத்தின் வெளியீட்டு தேதி ஒத்தி போய்கொண்டே உள்ளது.

இந்த விஷயத்தில் நடிகர் சூர்யா மீதும் அதிருப்தியில் இருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். ஏனெனில் ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிகர் சூர்யாவை நடிக்க வைக்கதான் கௌதம் மேனன் முடிவு செய்திருந்தார். ஆனால் சூர்யா அப்போது தனக்கு கதை பிடிக்கவில்லை என்பதாக கூறிவிட்டாராம். ஒருவேளை சூர்யா நடித்திருந்தால் அந்த படம் இந்நேரம் வெளியாகியிருக்கும் என்பது கௌதம் மேனனின் எண்ணமாக இருக்கிறது.

எப்படி இருந்தாலும் இந்த படம் 2026 ஆம் வருடம் முடிவதற்குள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.