சூர்யா நடிப்பில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான Vishwanath And Sons, திரையரங்குகளில் வெளியான நான்கு நாட்களிலேயே 2026-ம் ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த குடும்பக் கதையில் சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் வெளியான முதல் வாரத்திலேயே வசூலில் நல்ல வேகத்தை தக்க வைத்திருக்கிறது
நான்கு நாள் வசூல் எவ்வளவு?
இந்தியாவில் நான்கு நாட்களில் படத்தின் நெட் வசூல் ரூ.65.65 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா கிராஸ் வசூல் சுமார் ரூ.75.88 கோடி.
குறிப்பாக நான்காவது நாளான திங்கட்கிழமை மட்டும் சுமார் ரூ.7.50 கோடி நெட் வசூல் செய்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 4,962 காட்சிகளில் இப்படம் திரையிடப்பட்டது. வெளிநாட்டு வசூலும் படத்திற்கு கை கொடுத்துள்ளது. நான்காவது நாளில் மட்டும் சுமார் ரூ.2 கோடி வசூல் கிடைத்த நிலையில், வெளிநாட்டு மொத்த கிராஸ் சுமார் ரூ.45 கோடியாக உயர்ந்துள்ளது.

2026 தமிழ் படங்களின் Top 3
இந்திய நெட் வசூல் அடிப்படையில் தற்போது Karuppu – ரூ.198.18 கோடி, Jana Nayagan – ரூ.196.97 கோடி, அதனைத் தொடர்ந்து Vishwanath And Sons – ரூ.65.65 கோடி என பட்டியல் அமைந்துள்ளது.
உலகளவில் நான்கு நாட்களில் இப்படம் சுமார் ரூ.120.88 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால், இந்த எண்ணிக்கை அடுத்த நாட்களில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.







