Tamil Cinema News
என்ன மட்டும் மோசமா நடத்துரீங்க.. மேடையில் தயாரிப்பாளரை வைத்து செய்த தேவி ஸ்ரீ பிரசாத்..!
ஆரம்பத்தில் தமிழில் பெரிய வரவேற்பை பெற்ற இசையமைப்பாளராக இருந்தவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். ஆனால் ஆரம்பத்தில் அவருக்கு இருந்த வரவேற்பு போக போக குறைய தொடங்கியது.
அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவை விட்டுவிட்டு தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகளை தேட துவங்கினார் தேவி ஸ்ரீ பிரசாத். தெலுங்கு சினிமாவில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்றார் தேவி ஸ்ரீ பிரசாத்.
தொடர்ந்து தற்சமயம் இவரும் முக்கியமான இசையமைப்பாளராக தெலுங்கு சினிமாவில் இருந்து வருகிறார் இந்த நிலையில் தொடர்ந்து தேவி ஸ்ரீ பிரசாத் சரியாக திரைப்படங்களை இசையமைத்து கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
தேவி ஸ்ரீ பிரசாத்:
மைதிலி மூவி மேக்கர் என்ற நிறுவனம் புஷ்பா திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் இருந்து இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் புஷ்பா 2 திரைப்படத்திற்கும் அவர்தான் இசையமைத்திருக்கிறார். அதே போல அஜித் நடிக்கும் குட் பேட் அக்லியிலும் இவர்தான் இசையமைத்துள்ளார்.
ஆனால் இந்த படத்திற்கு அவர் சரியான நேரத்தில் பி.ஜி.எம் மற்றும் பாடல்களை தருவது கிடையாது இதன் எதிரொலியாக புஷ்பா திரைப்படத்தின் ப்ரோமோஷனில் வந்து பேசிய டி.எஸ்.பி நேரத்திற்கு நான் பாடல் தருவதில்லை, பேக்ரவுண்ட் தருவதில்லை ப்ரோக்ராமிற்கு நேரத்துக்கு வருவதில்லை என்று என்னை பற்றி சொல்லிக்கிட்டே இருக்கீங்க.
அன்பு இருக்கும் இடத்தில்தான் குற்றச்சாட்டுகள் இருக்கும் ஆனால் உங்களிடம் குற்றச்சாட்டுகள் தான் அதிகமாக இருக்கின்றன என்று தயாரிப்பாளரை கூறியுள்ளார்