Bigg Boss Tamil
இந்த சதிக்காரன் கிட்ட சிக்க கூடாது.. உஷாரான பெண்கள் அணி.. ரவீந்தர் அப்படி என்ன பண்ணுனார்..!
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து அதில் ஒரு மாஸ்டர் மைண்டாக செயல்பட்டு வருபவர் ரவீந்தர். ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன் குறித்தும் ரிவ்யூ கொடுத்து வந்தவர் ஆவார்.
அதனால் அவர் பிக் பாஸ் சென்ற பிறகு பிக் பாஸின் களம் என்பதே மாறி இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்தையும் பொறுமையாக நிதானித்து பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் ஆடி வருகிறார் ரவீந்தர்.
அந்த வகையில் நேற்று அனைவரையும் ஏமாற்றும் வகையில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருந்தார். அவருக்கும் ரஞ்சித்துக்கும் இடையே சண்டை வருவது போன்ற ஒரு நடிப்பை ஏற்கனவே செட் செய்து விட்டு அப்படி நடித்து அனைவரையும் ஏமாற்றி இருந்தனர்.
ரவீந்தர் செய்த வேலை:
இந்த நிலையில் இதுக்குறித்து ரவீந்தர் தர்ஷா குப்தாவிடம் பேசும் பொழுது ரஞ்சித் இந்த வாரம் எலிமினேட் ஆகி போவதற்கான வாய்ப்புகள் இருந்தது அவரை காப்பாற்றி விடலாம் இதை செய்தேன் என்று கூறினார். இதனால் பெண்கள் அணியினர் மிகவும் கோபப்பட துவங்கியிருக்கின்றனர்.
எங்களை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு நீங்கள் ரஞ்சித்தை பிரமோட் செய்திருக்கிறீர்கள் என்று ரவீந்தரின் மீது குற்றம் சுமத்த துவங்கி இருக்கின்றனர். மேலும் இது குறித்து தர்ஷா குப்தா மற்றவர்களிடம் சென்று கூறும் பொழுது ரவீந்தரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தினமும் காலையில் எழுந்தவுடன் எப்படி இந்த கேமை விளையாடலாம் என்று இவர் பிக்ஸ் செய்து கொண்டு விளையாடுகிறார் என்று அவர் கூறியிருக்கிறார்.
