தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு மற்ற நடிகர்களை போலவே ஒரு தனிப்பட்ட இடம் உருவாகி இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். தமிழில் விஜய் அஜித் மாதிரியான பெரிய கமர்சியல் நடிகர்கள் சினிமாவின் மீது ஆர்வம் காட்டாமல் தங்களது சொந்த விருப்பங்களின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் அரசியலுக்கும் அஜித் கார் ரேஸுக்கும் சென்று விட்டார்கள். இந்த நிலையில் கமர்சியல் கதாநாயகர்களுக்கான ஒரு வெற்றிடம் தானாகவே தமிழ் சினிமாவில் உருவாகி உள்ளது.
அதில் ஒரு முக்கியமான இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்தது. அமரன் திரைப்படம் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவான திரைப்படம்.
தமிழில் டாப் நடிகராக இருந்தாலும் எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் தொடர்ந்து சினிமாவில் சில பிரச்சினைகளை அவர் சந்தித்து கொண்டு தான் இருக்கிறார்.
இந்த நிலையில் அமரன் திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது மட்டும் இல்லாமல் 100 நாட்களாக திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளது அதற்கான கொண்டாட்டம் சமீபத்தில் நடந்தது.
அதில் பேசிய சிவகார்த்திகேயன் கூறும் பொழுது படத்திற்கான அக்ரிமெண்ட் போட்ட போதே எனக்கான முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டார் கமல்ஹாசன். மேலும் பெரும்பாலும் நான் நடிக்கும் திரைப்படத்திற்கு நிறைய பிரச்சனைகள் வரும்.
ஆனால் இந்த திரைப்படத்தில் எனக்கு எந்த பிரச்சனைகளும் வராமல் பார்த்துக் கொண்டார் கமல்ஹாசன் என்று கூறியிருக்கிறார் சிவ கார்த்திகேயன். இதன் மூலமாக சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு எவ்வளவு மோசமான விஷயங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன என தெரிகிறது.