Tag Archives: சாய்ப்பல்லவி

தொடர்ந்து தமிழ் சினிமாவில் சாய் பல்லவியின் சாதனைகள்.. மற்ற நடிகைகள் பக்கத்துல வர முடியாது போல..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் ஒரு முக்கியமான நடிகையாக மாறி இருப்பவர் நடிகை சாய் பல்லவி. அவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் அவருக்கு வரவேற்பைதான் பெற்று தருகின்றன.

ஏற்கனவே மாரி 2 திரைப்படத்தில் அவர் நடித்த ஆனந்தி என்கிற கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது. அதற்கு பிறகு அவர் நடித்த கார்கி திரைப்படம் தமிழக அளவில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் சாய் பல்லவிக்கும் அது நல்ல அந்தஸ்தை பெற்று கொடுத்தது.

சாய்பல்லவியை பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கிறது என்று அனைத்து திரைப்படங்களிலும் அவர் நடிப்பதில்லை. பெரும்பாலும் கதையை கேட்ட பிறகுதான் அவர் திரைப்படங்களில் நடிக்கிறார். முக்கியமாக அவரது கதாபாத்திரத்திற்கு கதையில் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடித்து வருகின்றார் சாய்பல்லவி.

சாய்பல்லவியின் மார்க்கெட்:

sai pallavi

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அமரன் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான ஒரு கதாபாத்திரமாக சாய் பல்லவியின் கதாபாத்திரம் இருந்தது. இந்த நிலையில் சாய்பாபாவின் மார்க்கெட் இன்னும் அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் சாய்பல்லவி பாடல்களுக்கு தமிழில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே சாய் பல்லவியும் தனுஷும் இணைந்து மாரி 2 திரைப்படத்தில் ரவுடி பேபி என்கிற ஒரு பாடலில் ஆடியிருந்தனர்.

அந்த பாடல் பலகோடி பார்வைகளை கடந்து பெரும் சாதனையை படைத்தது. தற்சமயம் அமரன் திரைப்படத்தில் வந்த மின்னலே பாடலும் அதே மாதிரியான சாதனையை படைத்திருக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் தானே காரணமாக இருக்க முடியும் என்று ஒரு பக்கம் கூறினாலும் கதாநாயகியின் நடனம் மற்றும் முகபாவனைகளும் இந்த பாடல்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

அந்த வகையில் சாய்பல்லவி இதற்கு காரணமாக இருக்கிறார். எனவே தமிழில் இவருக்கு இன்னமும் அதிகமாக வரவேற்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாய்ப்பல்லவி தூக்கிப்போட்ட சீட்டால் வந்த பிரச்சனை.. 1 கோடி இழப்பீடு வேண்டும்..!

தென்னிந்திய சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகள் மிகக் குறைவுதான். அப்படியான நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சாய் பல்லவி. எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக நடிக்க கூடிய நடிகை என்பதாலேயே சாய் பல்லவி மிக பிரபலமானவர்.

பெரும்பாலும் தென்னிந்திய சினிமாவில் நிறைய நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் கவர்ச்சியாக நடிக்க துவங்கி விடுவார்கள். ஆனால் இப்பொழுது வரை கவர்ச்சியாக நடிக்காத ஒரு நடிகையாக சாய் பல்லவி இருந்து வருகிறார்.

சாய்பல்லவி நடித்த அமரன் திரைப்படம் சமீபத்தில் அதிக வரவேற்பு பெற்றது. 300 கோடி ரூபாய் வரையில் வசூல் பெற்ற இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு சாய்பல்லவி முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

சாய்ப்பல்லவி பிரச்சனை:

amaran 2

முக்கியமாக ஆந்திர பிரதேசம் மாதிரியான மாநிலங்களில் அமரன் திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைப்பதற்கு சாய் பல்லவிதான் முக்கிய காரணமாக இருந்தார்.

ஏனெனில் அவருக்கு தெலுங்கு சினிமாவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அமரன் திரைப்படத்தில் வந்த ஒரு காட்சி தற்சமயம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. அமரன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் சாய்பல்லவி சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய மொபைல் நம்பரை எழுதிக் கொடுப்பதாக ஒரு காட்சி இருக்கும்.

அதில் எழுதப்பட்ட மொபைல் நம்பர் சென்னையை சேர்ந்த ஒரு இளைஞரின் மொபைல் எண் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பலரும் அது சாய் பல்லவியின் நம்பர் என்று நினைத்து இந்த இளைஞருக்கு போன் செய்திருக்கின்றனர்.

இதனால் கோபமடைந்த இளைஞர் தற்சமயம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அமரன் திரைப்பட குழு மீது வழக்கு ஒன்றை தொடர்ந்து இருக்கிறார் இந்த நிலையில் அவருக்கு இழப்பீடு கிடைக்குமா கிடைக்காதா என்பது குறித்துதான் பேச்சுக்கள் சென்று கொண்டுள்ளன.

எந்த நடிகையாலும் முடியாது… 3 நிமிஷத்தில் அதை பண்ணிடுவேன்.. அதிர்ச்சி கொடுத்த நடிகை சாய்பல்லவி..!

Actress Saipallavi made her debut in South Indian cinema with the movie Premam. Sai Pallavi has been talking about many things to create awareness. Recently, his talk about actresses’ clothes has become popular

பெரிதாக மேக்கப் எதுவும் போட்டுக் கொள்ளாமல் சிம்பிளாக பட நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் ஒரு நடிகை என்றால் அது நடிகை சாய் பல்லவி மட்டும்தான்.

தென்னிந்தியாவிலேயே பெரிதாக மேக்கப் மற்றும் மாடர்ன் உடைகளை விரும்பாத ஒரு நடிகையாக சாய் பல்லவி இருக்கிறார். இதனாலேயே சாய் பல்லவிக்கு என்று அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

பெரும்பாலும் நடிகைகள் சினிமாவில் பிரபலம் அடைவதற்காக முக அலங்காரங்களில் துவங்கி முகத்தில் அறுவை சிகிச்சைகள் வரைக்கும் செய்து கொள்கின்றனர். ஆனால் சாய் பல்லவியை பொருத்தவரை தனக்கு கிடைக்கும் மார்க்கெட் மட்டுமே போதுமானது என்று இயற்கையான முக அழகுடன் தொடர்ந்து இருந்து வருகிறார்.

இதனாலையே சாய் பல்லவிக்கு ரசிகர்கள் அதிகம் என்று கூறலாம். மேலும் வெள்ளை நிறம்தான் அழகு என்பதை ஒரு மூடநம்பிக்கை என்று முதன் முதலில் கூறிய தமிழ் நடிகை என்றால் அது சாய் பல்லவி தான்.

சாய் பல்லவி கொடுத்த பதில்:

இப்படி தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் சாய் பல்லவியின் பேச்சுக்கள் இருந்து வந்துள்ளன. இதே மாதிரி சமீபத்தில் அவர் பேசியிருந்த விஷயம் அதிக வரவேற்பை பெற்றது. சாய்பல்லவியிடம் ஒரு பேட்டியில் எதற்காக எல்லா நிகழ்வுகளுக்கும் புடவை கட்டிக் கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டிருந்தனர்.

அதற்கு பதில் அளித்த சாய் பல்லவி அதுதான் எனக்கு மிகவும் வசதியான ஒரு ஆடையாக இருக்கிறது. புடவையை கட்டிக் கொண்டோம் என்றால் உடல் பாகங்கள் அனைத்தையும் அது மூடிவிடும். நிகழ்ச்சிகளில் போய் அமர்ந்து விட்டால் நமக்கு எந்த பயமும் இருக்காது.

ஆனால் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு போனால் எங்கு துணி விலகும் என்கிற ஒரு பயத்திலேயே அமர்ந்திருக்க வேண்டியிருக்கும். மேலும் மற்ற உடைகளை அணிவதற்கு நிறைய நேரம் எடுக்கும் ஆனால் மூன்று நிமிடத்தில் நான் புடவையை கட்டி விடுவேன்.

எனக்கு புடவை அவ்வளவு எளிதானது. அதனால்தான் நான் புடவை கட்டிக்கொண்டு வருகிறேன் என்று கூறியிருக்கிறார் சாய் பல்லவி. இதற்கு பதில் அளித்து வரும் ரசிகர்கள் மூன்று நிமிடத்தில் புடவை கட்டுவதற்கு தமிழ் சினிமாவில் நடிகைகளே இல்லை. சினிமா நடிகைகளிலேயே சாய் பல்லவியால் மட்டும்தான் முடியும் என்று நினைக்கிறேன் என்று பதில் அளித்து வருகின்றனர்.

தனுஷ் பேச்சை கேட்டு விபரீத முடிவை எடுத்த சாய்பல்லவி.. அதை செய்யாமல் இருந்திருக்கலாம்..!

Actress Sai Pallavi failed in a Tamil film after taking Dhanush’s advice

தமிழில் தற்சமயம் வரவேற்பு பெற்று வரும் ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை சாய் பல்லவி. எப்போதுமே சாய் பல்லவி நடிக்கும் திரைப்படங்களுக்கு இங்கு தனி வரவேற்பு இருந்து வருகிறது.

ஏனெனில் பெரிதாக மேக்கப் எதுவும் இல்லாமல் இயல்பாக நடிக்க கூடியவர் சாய் பல்லவி. அதனால்தான் முதல் திரைப்படத்திலேயே அவருக்கு அதிக வரவேற்புகள் கிடைத்தது. அவரது முகத்தில் அதிகமாக பரு இருப்பதைக் கொண்டு சிலர் உருவாக்கேலி செய்தாலும் கூட வெகுவான மக்கள் அவருக்கு ஆதரவாக தான் இருக்கின்றனர்.

மேலும் அவர் நடிப்பில் வெளியான கார்கி என்கிற திரைப்படம் தமிழில் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் செல்வராகவன் திரைப்படத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் சாய் பல்லவி.

sai pallavi

உண்மையை பகிர்ந்த சாய்ப்பல்லவி:

அதில் அவர் கூறும்பொழுது என்.ஜி.கே திரைப்படத்தில் நடிக்கும் போது ஒவ்வொரு காட்சியிலும் முடிந்த பிறகு அது குறித்து எதுவுமே செல்வராகவன் என்னிடம் கூற மாட்டார். ஒரு காட்சியில் நன்றாக நடித்திருக்கிறோமா என்பது இயக்குனர் சொன்னால்தான் நமக்கே தெரியும்.

ஆனால் செல்வராகன் எதுவுமே கூற மாட்டார். இதனால் படத்திலிருந்து வெளியேறலாம் என்று இருந்தேன். இந்த நிலையில் தனுஷ் ஒரு நாள் வந்து என்னிடம் பேசினார். அப்பொழுது அவரிடம் இந்த பிரச்சினையை கூறினேன்.

உடனே அவர் செல்வராகவன் அப்படித்தான் இருப்பார் கண்டு கொள்ளாதீர்கள். படம் முடிந்த பிறகு நன்றாக இருக்கும் என்று கூறினார். சரி என்று நானும் நடித்தேன்என்று சாய் பல்லவி பகிர்ந்து இருக்கிறார். இதற்கு பதில் அளித்து வரும் நெட்டிசன்கள் அப்பொழுதே சாய் பல்லவி தனுஷ் பேச்சை கேட்காமல் இருந்திருந்தால் என்.ஜி.கே என்கிற தோல்வி படத்தில் இருந்து தப்பித்து இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

லட்சங்களில் செலவு பண்ணி  நடிகைகள் சும்மா அதை பண்ணுராங்க..! அலட்சியமாக நிராகரித்த சாய்பல்லவி..!

நடிகைகள் தொடர்ந்து தங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக ஏகப்பட்ட விஷயங்களை செய்ய வேண்டி இருக்கிறது. அதில் முக்கியமான விஷயம் தான் பிரமோஷன் என்கிற விஷயம்.

முன்பெல்லாம் நடிகைகள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக பத்திரிகைகளில் தங்களது புகைப்படங்களை வெளியிடுவார்கள். அதற்காக அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய வண்ணம் இருப்பார்கள்.

ஆனால் இப்பொழுது எல்லாம் சமூக வலைதளங்களின் வளர்ச்சி உருவான காரணத்தினால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்கிறார்கள். இதற்காகவே பி ஆர் என்கிற ஒரு ஆளை ஒவ்வொரு நடிகைகளும் நியமித்துக் கொள்வது உண்டு.

அவர்கள் எப்போதுமே நடிகைகளை பிரபலப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இது குறித்து சமீபத்தில் சாய் பல்லவி சில விஷயங்களை பேசி இருந்தார். அதில் சாய் பல்லவி கூறும் பொழுது ஹிந்தியில் இருந்து ஒருவர் எனக்கு பி ஆர் ஆக இருக்கிறேன் என்று கூறினார். ஆனால் அவரிடம் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன்.

ஓப்பன் டாக் கொடுத்த சாய்பல்லவி:

அப்பொழுது நாங்கள் உங்களை பிரபலப்படுத்திக் கொண்டே இருப்போம் என்று அவர் கூறினார். நீங்கள் வாய்ப்புகள் இல்லாமல் மக்கள் மத்தியில் பிரபலமாக இல்லாமல் இருக்கும் சமயத்தில் கூட தொடர்ந்து உங்களை பிரபலப்படுத்திக் கொண்டிருப்போம் என்று அவர் கூறினார்.

அதனால் எனக்கு வாய்ப்புகள் வருமா என்று நான் கேட்டேன். இல்லை வாய்ப்புகள் பெரிதாக வராது ஆனால் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசப்படும் நடிகையாக நீங்கள் இருப்பீர்கள் என்று கூறினார்.

தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசப்பட்டு கொண்டிருந்தால் அவர்களுக்கு போர் அடித்து விடும் எனவே எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டேன். என்று கூறியிருக்கிறார் சாய்பல்லவி. பல நடிகைகள் லட்சங்களில் செலவு செய்து பி.ஆர்களை வைத்துக் கொண்டிருக்கும் பொழுது அது குறித்த சாய்பல்லவி மாறுபட்ட கருத்திற்கு ஆதரவுகள் வந்தவண்ணம் உள்ளன.

புள்ளி வச்சி 3 கதாநாயகிகளை தூக்கிய தமிழ் நடிகர்!.. ஓ இதுதான் காரணமா?..

sai pallavi anupama and Madonna sabastian : தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர்களை காட்டிலும் ஒரு நடிகைகளுக்கு ஒவ்வொரு திரைப்படமும் முக்கியமான திரைப்படமாக இருக்கிறது. நடிகர்கள் கூட ஒரு திரைப்படத்தில் தோல்வியை கண்டால் மீண்டு எழுந்து அடுத்த படத்தில் வெற்றியை கொடுத்துவிடுவார்கள். ஆனால் கதாநாயகியை பொறுத்தவரை ஒருமுறை தோல்வி படத்தில் நடித்தால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே கடினமாகும்.

உதாரணமாக நடிகை பூஜா ஹெக்தே தமிழில் முதன் முதலாக நடித்த முகமூடி படமும் சரி அதற்கு பிறகு நடித்த பீஸ்ட் படமும் சரி நல்ல வெற்றியை பெறவில்லை. இதனால் அவர் தமிழ் சினிமாவில் நடிப்பதே கடினமான விஷயமானது.

ஆனால் ஒரே திரைப்படம் மூன்று கதாநாயகிகளை தூக்கிவிட்ட சம்பவமும் தென்னிந்திய சினிமாவில் நடந்துள்ளது. நடிகை அனுபாமா பரமேஸ்வரன், மடோனோ சபாஸ்டியன் மற்றும் சாய் பல்லவி மூவருக்குமே முக்கியமான படமாக அமைந்தது பிரேமம் திரைப்படம்.

dhanush

அந்த காலக்கட்டத்தில் நடிகர் தனுஷ் ஒரு விஷயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதாவது புதிதாக அறிமுகமாகி பிரபலமாக இருக்கும் கதாநாயகிகளுடன் படம் நடிப்பதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன் போன்ற நடிகைகள் கூட அறிமுகமானதுமே தனுஷுடன் நடிப்பதை பார்க்க முடியும்.

இந்த நிலையில் பிரேமம் படத்தில் நடித்த மூன்று நடிகைகளுடன் நிவின் பாலிக்கு பிறகு சேர்ந்து நடித்தது தனுஷ்தான். ஆமாம் பா. பாண்டி படத்தில் மடோனாவுடனும், கொடி படத்தில் அனுபாமாவுடனும், மாரி 2 வில் சாய் பல்லவியுடனும் நடித்தார் தனுஷ்.