Tag Archives: சாய்பல்லவி

சாய் பல்லவிக்கு அந்த மாதிரி ட்ரெஸ் கொடுப்பீங்களா? ஓப்பனாக கேட்ட ஸ்ரீ காந்த்.!

தமிழ் சினிமாவில் எவ்வளவு முயன்றும் இன்னமும் ரீ என்ட்ரி கொடுக்க முடியாத ஒரு நடிகராக ஸ்ரீகாந்த் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாக நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் ஸ்ரீகாந்த்.

அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் என்பது குறைய துவங்கியது அவர் நடித்த திரைப்படங்களுக்கு வரவேற்புகளும் குறைய தொடங்கியது. இந்த நிலையில் அவருக்கு ஒரு நல்ல திரைப்பட வாய்ப்பாக அமைந்த திரைப்படம் தான் நண்பன் திரைப்படம்.

நண்பன் திரைப்படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ரீகாந்த் ஆனாலும் கூட அதற்கு பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கிடைத்த படங்களும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதனால் இப்பொழுதுவரை ஸ்ரீகாந்த் சினிமாவில் வரவேற்பை பெறாமலே இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீப காலங்களாக சில திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார். அது குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசியிருந்தார் அப்பொழுது நடிகைகளின் ஆடை சுதந்திரம் குறித்து அவர் பேசியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது நடிகைகள் எந்த ஆடைகளை அணிய விருப்பப்படுகிறார்களோ அந்த ஆடைக்கு அவர்களை விட்டு விடலாம் அதை விட்டுவிட்டு யாரும் அவர்களை வற்புறுத்தி இந்த ஆடையை தான் அணிய வேண்டும் என்று கூறக்கூடாது.

நடிகைகளும் அந்த மாதிரி நிராகரிப்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும் உதாரணத்திற்கு நடிகை சாய் பல்லவியிடம் கவர்ச்சி ஆடையை போட்டுக் கொள்ளும்படி எந்த இயக்குனராவது கேட்டு விட முடியுமா? ஏனெனில் சாய்பல்லவி அந்த மாதிரி ஆடைகளை மறுத்துவிடுவார்.

அந்த ஒரு அதிகாரத்தை நடிகைகள் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் ஸ்ரீகாந்த்.

வாரிசு நடிகருக்கு மனைவியாகும்  சாய் பல்லவி.. இனிமே கைல பிடிக்க முடியாது போல..!

நடிகை சாய்பல்லவி தற்சமயம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியா முழுவதுமே வாய்ப்பை பெற்று நடித்து வரும் நடிகையாக இருக்கிறார். முதன் முதலாக மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலமாக இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அந்த திரைப்படமே அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. அதற்கு பிறகு தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அதிகமாக வாய்ப்புகளை நடித்து வந்தார் சாய் பல்லவி.

மற்ற சினிமாவுடன் ஒப்பிடும்போது தமிழ் சினிமாவில் குறைவான படங்களிலேயே நடித்துள்ளார் சாய் பல்லவி. ஆனால் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது.

sai pallavi

அமரன் திரைப்படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்கிற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாய் பல்லவி. அதனை தொடர்ந்து அதிக வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

அடுத்ததாக பாலிவுட்டில் பெரும்பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் வர துவங்கியுள்ளது.

நடிகர் அமீர்கானின் மகன் நடிக்கும் திரைப்படத்தில் அடுத்து அவர் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்தில் அவருக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சாய்பல்லவி.

அந்த படத்தை தொடர்ந்து அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைக்க உள்ளன என பேச்சுக்கள் இருக்கின்றன.

காட்டி நடித்தால்தான் பாலிவுட்டில் சான்ஸ்.. சாய் பல்லவிக்கு வந்த பிரச்சனை..!

தமிழ் தெலுங்கு அன்று இரண்டு மொழிகளிலும் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை சாய் பல்லவி. அதிலும் தமிழில் சமீபத்தில் அவர் நடித்த அமரன் திரைப்படம் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

அதனை தொடர்ந்து எப்படியும் தமிழில் ஒரு ரவுண்டு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நடுவே ஹிந்தியில் ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது.

பலரும் இதற்காக சாய்பல்லவியை விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் அமரன் திரைப்படம் ஹிந்தியில் கூட வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து சாய் பல்லவி நடிப்பதற்கு இப்பொழுது இந்தியிலும் வரவேற்புகள் அதிகரித்து இருக்கிறது.

sai pallavi

இந்த படத்திற்கு பிறகு ஹிந்தியில் நிறைய திரைப்படங்களில் சாய்பல்லவிக்கு வாய்ப்புகள் வந்து வண்ணம் இருக்கிறது. தற்சமயம் அமீர்கானின் மகனுடன் இன்னொரு திரைப்படத்தில் இவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு பாலிவுட்டில் அழைக்கின்றனர் என்று கூறப்படுகிறது. சாய்பல்லவியை பொருத்தவரை அவர் தொடர்ச்சியாக நடிக்க கூடாது என்கிற நோக்கத்துடன் இருந்தவர் எனவே இதை எப்படி கையாள போகிறார் என்பது கேள்வியாக இருக்கிறது.

ஒரு தடவை மட்டும்தான்.. பத்திரிக்கையாளர் கேட்ட அந்த கேள்வி.. கடுப்பான நடிகை சாய் பல்லவி..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக மாறியிருப்பவர் நடிகை சாய் பல்லவி. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சாய்பல்லவி மருத்துவ படிப்பை படித்துவிட்டு பிறகு சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார்.

சினிமாவிற்கு வந்த பிறகு சாய் பல்லவியின் நடனத்திற்கு தனி வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து சினிமாவிலும் பிரபல நடிகையாக மாறினார் சாய்பல்லவி.

இந்த நிலையில் தற்சமயம் தமிழில் அமரன் திரைப்படத்தில் நடித்து அதன் மூலமாக இவர் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறார். தொடர்ந்து நிறைய விருதுகளையும் வாங்கி வருகிறார். சமீபத்தில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அமரன் திரைப்படத்திற்காக சாய் பல்லவிக்கு விருது வழங்கப்பட்டது.

அப்பொழுது பத்திரிகையாளர்களை சந்தித்த சாய் பல்லவியிடம் அது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அமரன் திரைப்படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து இருந்தார் சாய் பல்லவி. அப்பொழுது தொடர்ந்து அவரை நிறுத்தி இன்னொரு கேள்வி கேட்க நினைத்தனர் பத்திரிகையாளர்கள்.

உடனே கோபம் அடைந்த சாய் பல்லவி ஒரு கேள்விக்குதான் பதில் சொல்ல முடியும் .சர்வதேச திரைப்பட விழா குறித்தும் பேசிவிட்டேன் விருது குறித்தும் பேசிவிட்டேன், பிறகு என்ன என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஒரு அளவுக்குதான் பொறுமை..! பிரபல பத்திரிக்கையால் கடுப்பான சாய்ப்பல்லவி..! அப்ப அது உண்மை இல்லையா..!

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளின் மிக முக்கியமானவர் நடிகை சாய் பல்லவி. சாய் பல்லவியை பொருத்தவரை முக்கியமான கதாபாத்திரங்களாக இருந்தால் மட்டும்தான் அந்த திரைப்படத்தில் அவர் நடிப்பார்.

சும்மா வந்துவிட்டு செல்லும் கதாநாயகியின் கதாபாத்திரம் என்றால் அதில் சாய் பல்லவி பெரிதாக நடிக்க மாட்டார். இப்படியான கதை தேர்ந்தெடுப்புகளின் காரணமாக நிறைய படங்களில் சாய் பல்லவிகளுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கிறது.

ஆனாலும் கூட அவர் நடிக்கும் குறைவான படங்கள் கூட அவருக்கு அதிக வரவேற்பு பெற்று தருகிறது. தமிழில் மாரி 2, கார்கில், அமரன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு முக்கியமான திரைப்படங்களாக இருந்து வருகின்றன.

சாய்பல்லவி வளர்ச்சி:

அமரன் திரைப்படத்திற்கு பிறகு சாய் பல்லவி சம்பளம் உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் அடுத்து பாலிவுட்டில் வெளியாக இருக்கும் ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடிக்கிறார் சாய்பல்லவி.

sai pallavi

இதன் மூலமாக இந்திய அளவில் அவருக்கு மார்க்கெட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பொதுவாக பாலிவுட் சினிமாவில் என்றாலே கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்கிற ஒரு விஷயம் இருக்கும். ஆனால் சாய் பல்லவி சீதையாக நடிக்க செல்வதால் அந்த பிரச்சனையே அவருக்கு கிடையாது.

இந்த நிலையில் இதை போல பாலகிருஷ்ணா உடன் சேர்ந்து ராமாயண கதையில் நயன்தாரா சீதையாக நடித்தார். அப்பொழுது நயன்தாரா படப்பிடிப்பு முடிவு வரையில் அசைவம் எதுவும் சாப்பிடாமல் இருந்தார். தற்சமயம் அதை விரதத்தை சாய் பல்லவியும் கடைபிடிப்பதாக நிறைய பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன.

கடுப்பான சாய்பல்லவி:

இந்த நிலையில் இதனால் கடுப்பான சாய்பல்லவி தொடர்ந்து வதந்திகளை பரப்பாதீர்கள் என்று விமர்சனம் செய்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். மேலும் பிரபல ஊடகம் ஒன்று போட்ட பதிவையும், அதோடு சேர்த்து போட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து அந்த ஊடகத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர். எனவே இதற்காக சாய்பல்லவி எதுவும் விரதம் இருக்கவில்லை என இதன் மூலம் உறுதியாகிறது.

அண்ணன் தம்பி ரெண்டு பேரும் என்னை பாடா படுத்தி எடுத்துட்டாங்க. தனுஷ் செல்வராகவன் குறித்து. சாய் பல்லவி ஓப்பன் டாக்.!

மலர் டீச்சர் என்கிற கதாபாத்திரம் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை சாய் பல்லவி. அவர் நடித்த முதல் படமான பிரேமம் திரைப்படம் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக மாறினார். பெரும்பாலும் சாய் பல்லவி நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று ஒரு வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல கிடைக்கும் படங்களில் எல்லாம் சாய்பல்லவி நடிப்பது கிடையாது.

அவருக்கு ஒரு வருடத்தில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகின்றன. ஆனாலும் நல்ல கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களில் மட்டுமே சாய் பல்லவி நடித்து வருகிறார்.

செல்வராகவன் மற்றும் தனுஷ்:

இந்நிலையில் தனுஷ் மற்றும் செல்வராகவன் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது தனுஷின் அண்ணனான செல்வராகவன் இயக்கிய என் ஜி கே திரைப்படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன்.

அதேபோல நடிகர் தனுசுடன் இணைந்து மாரி 2 திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன். நான் செல்வராகவன் படத்தில் நடிக்க செல்லும் பொழுது நடிகர் தனுஷ் என்னிடம் அண்ணன் உங்களுக்கு ஏதாவது தொல்லை கொடுத்தால் சொல்லுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுவார்.

அதே போல தனுசுடன் நடிக்க செல்லும் பொழுது செல்வராகவன் என்னிடம் தனுஷ் ஏதாவது தொல்லை கொடுத்தால் சொல்லுங்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறுவார். ஆனால் இருவருமே படப்பிடிப்பில் என்னை பாடாய்படுத்தி விட்டனர் என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார் சாய்பல்லவி.

அவங்களோட அந்த இடத்தை ரசிச்சு பார்ப்பேன்.. கூச்சம் இல்லாமல் பதில் சொன்ன சாய் பல்லவி…

ஒரே ஒரு திரைப்படம் மூலமாக மூன்று நடிகைகள் தென்னிந்தியா முழுக்க பிரபலமானவர்கள் என்றால் அது மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் தான் நடந்தது.

பிரேமம் திரைப்படம் மூலமாக அனுபமா பரமேஸ்வரன், மடோனா சபாஷ்டியன், மற்றும் சாய் பல்லவி ஆகிய மூன்று நடிகைகளும் அதிக பிரபலம் அடைந்தனர். அவர்கள் மூவருக்குமே முதல் படமாக பிரேமம் திரைப்படம்தான் இருந்தது என்பது முக்கியமான விஷயமாகும்.

தமிழில் வந்த வரவேற்பு:

அந்த வகையில் சாய்பல்லவி தமிழ்நாட்டைதான் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அதை திரைப்படம் வந்தது முதலே தமிழில் அதிக வரவேற்பு இருந்து வந்தது. சாய்பல்லவி எப்பொழுது தமிழில் நடிக்க போகிறார் என்பதுதான் அப்பொழுது அதிக பேச்சாக இருந்து வந்தது.

சாய்பல்லவி தனது டாக்டர் படிப்பை முடித்ததுமே நடனம் மீதுதான் அதிக ஆர்வம் காட்டி வந்தார் என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறப்பாக நடனமாட கற்றுக் கொண்டார் சாய் பல்லவி. அதற்குப் பிறகுதான் அவர் சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்தார்.

அதனால்தான் சிறப்பாக நடனமாடும் நடிகர்களுக்கு சமமாக சாய் பல்லவியால் ஆட முடிகிறது. அதுவும் தெலுங்கு சினிமாவில் சிறப்பாக நடனமாடும் நடிகர்கள் எக்கச்சக்கமாக உள்ளனர். அவர்களுக்கு ஈடு கொடுத்து சாய்பல்லவி ஆடி இருக்கிறார்.

மாரி 2 திரைப்படம்:

தமிழில் மாரி 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழிலும் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி தமிழிலும் அதிக வரவேற்பை பெற்ற பலமாக ஷியாம் சிங்காராய் திரைப்படம் இருந்தது.

அந்த திரைப்படத்தில் தாய் பல்லவிதான் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட மொத்த கதையும் சாய் பல்லவியை வைத்து பின்னப்பட்டு இருந்தது. அடிக்கடி பேட்டிகளில் பேசும் சாய் பல்லவி நிறைய ஆக்கப்பூர்வமான விஷயங்களை பேசுவார்.

முக்கியமாக வெள்ளை ஒரு அழகான விஷயம் கிடையாது என்று வெளிப்படையாக கூறுகிற ஒரே நடிகை நடிகை சாய் பல்லவி மட்டும்தான் இந்த நிலையில் ஒரு பேட்டியில் சாய்பல்லவியிடம் நீங்கள் சைட் அடிப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சாய் பல்லவி ஆண்களைவிட பொண்ணுங்களை தான் நான் அதிகமா ரசித்து பார்த்திருக்கிறே.ன் பொண்ணுங்களை பார்க்கும்போது அவங்களது ட்ரெஸ்ஸிங் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் முடி அழகா பண்ணி இருக்காங்க, கண் அழகாய் இருக்கு அப்படின்னு சொல்லி பார்ப்பேன் பசங்கனா வழக்கமா பேண்ட் சர்ட்தான் போடுவார்கள் அதனால் பொண்ணுங்கள தான் ரசித்து பார்த்திருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் சாய்பல்லவி.

செட்டில் பிரபுதேவா செஞ்ச வேலை.. கதறி அழுத சாய்ப்பல்லவி.. இதுதான் விஷயமா?

பிரேமம் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் நடிகை சாய் பல்லவியும் ஒருவர். பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்கிற அவரது கதாபாத்திரம் வெகுவாக வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க துவங்கின.

தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் அதற்கு பிறகு வாய்ப்புகளை பெற்றார் நடிகை சாய்பல்லவி. அந்த வகையில் தமிழில் மாரி 2 திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.

சிறப்பான நடன கலைஞர்:

பொதுவாகவே சாய் பல்லவி சிறப்பாக நடனமாட கூடியவர் மிக கடினமான நடனங்களை கூட அவரால் நடனமாட முடியும். இந்த நிலையில் ரவுடி பேபி என்கிற பாடலில் அவர் சிறப்பாக ஆடியிருப்பதை பார்க்க முடியும். தனுஷிற்கு ஈடு கொடுத்து அந்த பாடலில் ஆடியிருப்பார் சாய் பல்லவி.

அந்த படத்தில் நடந்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார் சாய்ப்பல்லவி. மாரி 2 திரைப்படத்தில் ஆட்டோ ஆனந்தி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வேறு திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

அதற்கு பிறகு தமிழின் முக்கியமான நடிகையாக மாறினார். ஆனால் மாரி 2 படத்தின் பாடல் படப்பிடிப்பில் அவர் கண்ணீர் விடும் வகையில் பிரச்சனைகள் நடந்துள்ளன.

மாரி 2 படப்பிடிப்பு:

சாய்பல்லவி எந்த ஒரு நடனத்தையும் படப்பிடிப்பில் ஆடுவதற்கு முன்பே பலமுறை முயற்சி செய்துவிட்டுதான் பிறகு வந்து நடனமாடுவார். மாரி 2 திரைப்படத்தில் பிரபுதேவாதான் டான்ஸ் மாஸ்டராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் சாய் பல்லவி ஏற்கனவே ப்ராக்டிஸ் செய்துவிட்டு நடனமாட வந்துள்ளார். ஆனால் பிரபுதேவா அப்படி ஆட வேண்டாம் என அப்போது புதிதாக ஒரு நடனத்தை சொல்லி கொடுத்துள்ளார்.

இதனால் பலமுறை அங்கு தவறாக நடனமாடியுள்ளார் சாய் பல்லவி. பிறகு அதனால் மனம் உடைந்து அழ துவங்கியுள்ளார். அதனை பார்த்த பிரபுதேவா அடுத்த டேக்கில் அந்த பாடலை ஓ.கே சொல்லிவிட்டாராம். இதனை சாய் பல்லவி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.