Tag Archives: பாகுபலி

ஏண்டா நடிக்கிறோம்னு இருந்துச்சு.. ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகை என்று கூறலாம். எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக நடிக்கக் கூடியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

பஞ்சதந்திரம் மாதிரியான திரைப்படங்களில் ஜாலியான கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி. பாகுபலி மாதிரியான திரைப்படத்தில் வரும் சிவகாமி தேவி மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி.

அதை சிறப்பாக செய்யக்கூடியவர் ரம்யா கிருஷ்ணன். அதனாலேயே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் தன்னுடைய சினிமா அனுபவம் குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது படையப்பா திரைப்படம் குறித்து கூறியிருந்தார்.

அதில் அவர் கூறும்பொழுது படையப்பா திரைப்படத்தில் நெகட்டிவ்வான ஒரு கதாபாத்திரம் என்று கூறிய பிறகு நான் அதில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். ஆனாலும் வற்புறுத்திய பிறகு விருப்பம் இல்லாமல் தான் அந்த படத்தில் நடித்தேன்.

ஆனால் அது எனக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது அதேபோல நான் எதிர்பாராமல் நடித்த இன்னொரு திரைப்படம் பாகுபலி பாகுபலி எனக்கு இந்திய அளவில் இவ்வளவு பெரிய வரவேற்பை பெற்று தரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த படமும் எனக்கு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது என்று கூறியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

 

வசூலில் பாகுபலியை முறியடித்த அமரன் திரைப்படம்..! மாஸ் காட்டும் எஸ்.கே..!

நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். இதனாலேயே சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

மக்களை பொருத்தவரை சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு சென்றாலே கண்டிப்பாக என்டர்டைன்மென்ட் ஆக இருக்கும் என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது.

அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்து இருக்கிறது.

அமரன் பட வசூல்:

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான திரைப்படம் அமரன். உண்மையாக வாழ்ந்த முகுந்த் வரதராஜன் என்கிற ராணுவ வீரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அமரன்.

amaran

தீபாவளி ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் இப்பொழுது வரை திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது. சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் வெளியான பிறகும் கூட சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் நிறைய திரையரங்குகளில் ஓடி வருவதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் உலக அளவில் இதுவரை 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் சாதனை படைத்திருக்கிறது அமரன் திரைப்படம். இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் பெற்ற திரைப்படமாக அமரன் திரைப்படம் இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது அமரன் திரைப்படம். இதற்கு முன்பு வெளியான பாகுபலி திரைப்படத்தின் தமிழ் நாடு வசூலை விட தற்சமயம் அமரன் படத்தின் வசூல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஏன் இந்த பொழப்பு பொளைக்கணும்!.. ஆர்ட்டிஸ்டிடிடம் திருடிய கல்கி படக்குழு.. இது வேறயா!..

பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் அடுத்து நடித்து வரும் திரைப்படம்தான் கல்கி 2898 ஏடி. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பேன் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் பிரபாஸ். அந்த வகையில் பாகுபலிக்கு பிறகு அவர் நடித்த படங்களில் சலார் மட்டுமே நல்ல வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரமானது கலியுகத்தின் இறுதியில் வரும் என்பது புராணங்களில் எழுதப்பட்ட நம்பிக்கையாகும். அதை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம்.

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வந்தது. அதில் பார்க்கும்போது மகாபாரத கதையில் துரோணாச்சாரியாரின் மகனாக வரும் அசுவத்தாமன் கதாபாத்திரம் படத்தில் வருவதை பார்க்க முடிந்தது. அதே சமயம் நடிகர் பிரபாஸ் அந்த கல்கி அவதாரம் இல்லை என தெரிகிறது.

திரைப்படம் குறித்து குற்றச்சாட்டு:

நடிகை தீபிகா படுகோன் அவரது வயிற்றில் சுமந்து வரும் குழந்தைதான் கல்கி அவதாரம். அடுத்த பாகத்தில்தான் அந்த கல்கி அவதாரம் யார் என்பதே கூறப்படும் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

இதற்கு நடுவே இந்த திரைப்படத்தின் காட்சிகள் பல ஹாலிவுட் திரைப்பட காட்சிகளின் தழுவலாக தெரிகிறது என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதற்கு நடுவே கொரியாவை சேர்ந்த ஓவியர் ஒருவர் தன்னுடைய ஓவியத்தை திருடி படத்தில் பயன்படுத்தியுள்ளதாக கல்கி திரைப்படம் குறித்து குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இனி என்னென்ன படங்கள் வாயிலாக இந்த படத்திற்கு குற்றச்சாட்டு வரப்போகிறது என தெரியவில்லை.

பாகுபலி அடுத்த பார்ட் எடுக்கப்போறோம்… கன்ஃபார்ம் செய்த ராஜமௌலி…

ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி தமிழில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும். அதன் இரண்டாம் பாகமும் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரு படத்தின் க்ளைமேக்ஸ் என்னவென்று தெரிந்தும் கூட அதை ஆர்வமாக பார்க்கும்படி செய்திருப்பார் ராஜமௌலி. இந்த நிலையில் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியான பிறகு அதன் மூன்றாம் பாகம் வேண்டும் என தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இதற்கு முன்பு இதுக்குறித்து பிரபாஸிடம் கேட்டப்பொழுது பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் என் கையில் இல்லை. அது இயக்குனர் ராஜமௌலி கையில்தான் இருக்கிறது. ஆனால் பாகுபலி திரைப்படம் எனது இதயத்துக்கு நெருக்கமான திரைப்படம் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இயக்குனர் ராஜமௌலியிடமும் கூட பாகுபலி 3 ஆம் பாகம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜமௌலி பாகுபலி 3 ஆம் பாகம் கண்டிப்பாக வரும். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் கலாய்ச்சா இதுக்கூட நடக்குமா? – மொத்த படத்தையும் மாற்றிய ஆதிபுருஷ் குழு..!

ரசிகர்கள் நினைத்தால் ஒரு படத்திற்கு போஸ்டர் ஒட்டலாம், பிரபலங்களுக்காக நன்மைகள் செய்யலாம் என்றெல்லாம் பார்த்திருப்போம். ஆனால் சினிமா ரசிகர்கள் நினைத்தால் ஒரு திரைப்படத்தையே மாற்றி அமைக்க முடியும் என்பது ஆதிபுருஷ் திரைப்படத்தில் உண்மையாகியுள்ளது.

ராமாயண கதையை அனிமேஷனில் எடுத்து பேன் இந்தியா திரைப்படமாக வெளியிட வேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தில் பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடித்தார். போன வருடம் இந்த படத்தின் ட்ரைலர் ஒன்று வெளியானது.

வழக்கமாக இந்தியாவில் அனிமேஷன் திரைப்படங்கள் என்றாலே அவை அவ்வளவு நன்றாக வருவதில்லை. அதே போல ஆதிபுருஷ் திரைப்படத்தின் ட்ரைலரும் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதனால் சினிமா ரசிகர்கள் அந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை வைத்தனர்.

படம் வெளியானால் அதை மக்கள் பார்க்க வருவார்களா? என்பதே சந்தேகமாக இருந்தது. இந்த நிலையில் மொத்த படத்தையும் மீண்டும் ரீ எடிட் செய்து, அனிமேஷன் வேலைகளை வேறு நிறுவனத்திடம் கொடுத்து நல்ல முறையில் அனிமேஷன் செய்தனர் படக்குழுவினர்.

இந்த நிலையில் அந்த படத்தின் புது ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலர் அட்டகாசமாக உள்ளது. மக்கள் இந்த படத்திற்கு தற்சமயம் வரவேற்பு அளித்து வருகின்றனர். ஹாலிவுட்டில் இதே போல சோனிக் படத்தின் முதல் பாகம் வந்தபோது ரசிகர்கள் சோனிக் நன்றாக இல்லை என கழுவி ஊற்றிய பிறகு படத்தை ரீ எடிட் செய்த சம்பவம் நிகழ்ந்தது.

ஆதி புருஷ் ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்.

சீதா ராமம் கதாநாயகியா இது! – உச்சக்கட்ட கவர்ச்சியில் மிர்னல் தாகூர்..!

2012 ஆம் ஆண்டு பாலிவுட் வெப் சீரிஸ் மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமானவர் மிர்னல் தாகூர். இந்திய சினிமாவில் அனைத்து மொழிகளிலும் கதாநாயகி ஆவதற்கான முயற்சியை 2012 முதலே எடுத்துவந்தார் மிர்னல் தாகூர்.

ஆனால் குறைவான திரைப்படங்களிலேயே இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் மனம் தளராமல் முயற்சித்து வந்தார் மிர்னல் தாகூர். 2019 இல் கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் சீரிஸில் நடித்தது மூலம் பாலிவுட்டில் கொஞ்சம் வாய்ப்புகள் கிடைத்தது.

அதனை தொடர்ந்து டூஃபான்,தமாகா, ஜெர்சி போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அவர் நடித்து போன வருடம் வெளியான சீதா ராமம் திரைப்படம்தான் மக்கள் மத்தியில் அவரை மிகவும் பிரபலமாக்கியது.

மேலும் தென்னிந்தியாவில் இவர் பிரபலமாவதற்கும் சீதா ராமம் முக்கியமாக உதவும் படமாக அமைந்தது. சீதா ராமத்திற்கு பிறகு அதிக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் மிர்னல் தாகூர்.

தற்சமயம் நானியின் 30 ஆவது படத்தில் நடித்து வருகிறார் மிர்னல் தாகூர். இது மட்டுமின்றி பாகுபலி கதையை மையமாக வைத்து வெளியாகவிருக்கும் பாகுபலி பிஃபோர் த பிகினிங் என்ற டிவி சீரிஸிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சீதா ராமம் திரைப்படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்த மிர்னல் தாகூர் தற்சமயம் இன்ஸ்டாகிராமில் அசத்தலான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.