Tag Archives: thunivu

32 வருடமாக அஜித் கட்டிய கோட்டையை பத்தே நாட்களில் உடைத்த சிவகார்த்திகேயன்.. அமரன் படம் செய்த சம்பவம்.!

Amaran is a movie that was released on Diwali and was well received by the masses. Sivakarthikeyan has acted well in the movie Amaran. The status of how much this film collected in 10 days has come out

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களிலும் மிக முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் அமரன்.

இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பிருந்தே படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 31 அன்று தீபாவளியை முன்னிட்டு அமரன் திரைப்படம் திரையில் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே சூடுப்பிடித்து ஓடி கொண்டுள்ளது.

amaran

அமரன் வசூல்:

வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே 80 கோடி ரூபாய் வசூல் செய்தது அமரன் திரைப்படம். இந்த நிலையில் கடந்த பத்து நாட்களில் அமரன் திரைப்படத்தின் வசூல் இன்னமுமே அதிகரித்துள்ளது.10 நாட்களில் அமரன் திரைப்படம் 210 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அமரன் திரைப்பட்த்தின் வெற்றிக்கு நடிகை சாய் பல்லவி மிக முக்கியமான காரணமாக இருந்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் சிவகார்த்திகேயனை அங்குள்ளவர்களுக்கு பெரிதாக தெரியாது. ஆனால் அவர்களுக்கு சாய் பல்லவியை தெரியும். எனவே அவரது நடிப்பிற்காக தெலுங்கில் நல்ல வெற்றியை கொடுத்து வருகிறது அமரன் திரைப்படம்.

அமரன் திரைப்படம் அஜித் நடித்து வெளியான துணிவு திரைப்படத்தின் வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. துணிவு படத்தின் மொத்த வசூலையும் 10 நாட்களில் தாண்டியுள்ளது அமரன் திரைப்படம். இந்த நிலையில் இது இப்போது பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

நல்ல படம் வந்தா சொல்லுறேன்.. கிளம்புங்க.. அஜித்தை நேரடியாக கலாய்த்த ஹெச். வினோத்.. நடிகையால் வெளிவந்த தகவல்..!

தமிழில் முக்கியமான இயக்குனர்கள் என்று பட்டியலிட்டால் அதில் மிக முக்கியமான இடத்தில் இருக்க கூடியவர் இயக்குனர் ஹெச்.வினோத் ஹெச்.வினோத் ஒரு ஆகச் சிறந்த படைப்பாளி என்று கூறலாம்

ஒவ்வொரு திரைப்படத்தையும் இயக்கும் பொழுது அந்த திரைப்படத்தின் கதைகளுக்கான ஹெச்.வினோத் மெனக்கெடல்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

அவரது முதல் திரைப்படமான சதுரங்க வேட்டை திரைப்படத்திலேயே எம் எல் எம் எனப்படும் மிகப்பெரிய ஏமாற்று வேலை குறித்து மிகப் பெரிதாக பேசியிருந்தார். ஹெச்.வினோத் ஈமு கோழி மோசடியிலிருந்து துவங்கி பல பண மோசடிகளை அதில் விவரித்து இருந்தார்கள்.

h vinoth

மஞ்சு வாரியர் சொன்ன விஷயம்:

இப்படி ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிதான ஒரு விஷயத்தை தேர்ந்தெடுத்து படமாக்க கூடியவர் ஹெச்.வினோத். அதற்கு பிறகு அவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திலுமே கூட அப்படியான விஷயத்தை பார்க்க முடிந்தது.

ஆனால் பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கத் துவங்கிய பிறகு ஹெச்.வினோத் அவரது இஷ்டத்திற்கு படம் இயக்கம் முடியவில்லை கதாநாயகர்களுக்கு ஏற்ற மாதிரி கதையை மாற்றுவதால் அவருக்கு தொடர்ந்து வெற்றி படங்களே அமையவில்லை.

manju

அதற்கு பிறகு அவர் இயக்கிய வலிமை, துணிவு இரண்டு திரைப்படங்களுமே ஹெச் வினோத்தின் திரைப்படம் போல இல்லை. வேறு ஏதோ ஒரு திரைப்படம் போல தான் இருந்தது .இந்த நிலையில் அடுத்து அவர் தளபதி 69 திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் நடித்த பொழுது அவருக்கு சின்ன கதாபாத்திரம்தான் அந்த படத்தில் இருந்தது இந்த படத்திற்கு இவ்வளவுதான் கதாபாத்திரம் வேறு நல்ல படம் எடுக்கும் பொழுது உங்களுக்கு சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஹெச்.வினோத். இந்த விஷயத்தை மஞ்சு வாரியர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

சும்மா கூட அப்படி காட்டாத மனுஷனை!.. அஜித் பட ஃபர்ஸ்ட் லுக்கால் மனம் வருந்தும் ரசிகர்கள்!..

துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி திரைப்படம் துவங்கி கிட்டத்தட்ட ஒரு வருட காலமாகவே அதன் படப்பிடிப்பு வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன.

அஜித் உலக சுற்றுலா சென்று வந்த உடனேயே விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆனாலும் இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை. அதே சமயம் இந்த மாதத்திற்குள் விடாமுயற்சி திரைப்படத்தை முடிக்க வேண்டும் என்று அஜித் ஏற்கனவே லைகா நிறுவனத்திடம் கூறியிருந்தாராம்.

ஆனாலும் நிதி பிரச்சனை காரணமாக லைக்கா நிறுவனம் அஜித் படத்தின் படப்பிடிப்பை கொஞ்சம் தள்ளிப்போட்டது. எனவே விடாமுயற்சி திரைப்படத்தில் லேட்டாக நடித்துக்கொள்ளலாம் என அடுத்த படத்தில் நடிக்க சென்றுவிட்டார் அஜித்.

தற்சமயம் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் ஆபாசமான விஷயத்தை குறிக்கும் வகையில் அஜித் கை விரலை காட்டியிருக்கும் குறியீடு அஜித் ரசிகர்களுக்கே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் ஓட்டு போட்டுவிட்டு விரலை காட்டும்போது கூட ஒரு விரலை தனியாக காட்ட மாட்டார். அது தவறு என மொத்த விரல்களையும் சேர்த்துதான் காட்டுவார். அவரை போய் ஒரு விரலை ஆபாச குறியீட்டில் காட்ட வைத்து போட்டோ வெளியிட்டுள்ளார்களே என பேசி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

எக்ஸ்ட்ரா ஒரு ரூபாய் கூட கொடுக்க முடியாது!.. அஜித் படம் குறித்து நெட்ஃப்ளிக்ஸ் அளித்த பதில்!..

Ajith Movie : கொரோனா பிரச்சனைக்கு பிறகுதான் நடிகர்களின் சம்பளம் மிக அதிகமாக உயர்ந்ததை பார்க்க முடியும். ஏனெனில் ஓ.டி.டி உரிமம் என்கிற ஒரு விஷயம் திரைப்படத்திற்கு வந்த பிறகு அதுவும் படத்தின் முக்கிய லாபமாக மாறியது.

அதனை தொடர்ந்து கதாநாயகர்கள் அதையும் கணக்கில் கொண்டு தங்களது சம்பளத்தை உயர்த்த துவங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் கால் பதிப்பதற்காக தொடர்ந்து தமிழில் நிறைய திரைப்படங்களை வாங்கி வருகிறது.

அந்த வகையில் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை முன்பே வாங்கி இருந்தது. விக்னேஷ் சிவன் அந்த திரைப்படத்தின் கதையை எழுதி வந்த காலத்திலேயே படத்தை வாங்கி விட்டது Netflix. அதன் பிறகு படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டு படத்தின் கதையும் மாற்றப்பட்டு வேறு விதமாக படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்திற்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. இதனை அடுத்து தயாரிப்பு குழு நெட்ஃப்ளிக்ஸிடம் பேசி இன்னும் கொஞ்சம் அதிக தொகை ஓடிடி உரிமத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் அதற்கு பதில் அளித்த netflix ஏற்கனவே எவ்வளவு தொகை பேசப்பட்டதோ அவ்வளவு பேசி படத்தை நாங்கள் வாங்கி விட்டோம் இனிமேல் இதை தாண்டி படத்திற்கு ஒரு ரூபாய் கூடுதலாக கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது netflix நிறுவனம். ஏற்கனவே அக்ரிமெண்ட் போடப்பட்டு விட்டதால் அந்த தொகைக்கு துணிவு படத்தை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில்  தயாரிப்பு குழு இருக்கிறது.

உலக அளவில் ஐந்தாவது இடம் – துணிவு செய்த சாதனை!

போன மாதம் பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு இரண்டு திரைப்படங்களும் வெளியாகின. இந்த இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த அளவில் நல்ல வெற்றியை பெற்றன.

ஆனால் இரு படங்களுமே பெரும் போட்டியோடு வெளியாகின. இருவரில் யாருடைய திரைப்படம் வெற்றி காண போகிறது என்கிற போட்டியில் இரு படங்களும் வெளியானது. இரண்டு திரைப்படங்களுமே கிட்டத்தட்ட 200 கோடி ஹிட் அடித்தன.

இதனையடுத்து இரண்டு திரைப்படங்களும் ஓ.டி.டியில் வெளியாகின. வாரிசு திரைப்படம் அமேசான் ப்ரைமிலும், துணிவு திரைப்படம் நெட்ப்ளிக்ஸிலும் வெளியாகின. இந்த நிலையில் துணிவு திரைப்படம் நெட்ப்ளிக்ஸில் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் நெட்ப்ளிக்ஸ் தனது தளத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட 10 திரைப்படங்கள் வரிசையை வெளியிடும். அந்த வரிசையில் தற்சமயம் ஐந்தாவது இடத்தில் துணிவு திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு பீஸ்ட் திரைப்படம் 7 ஆவது இடத்தில் இருந்தது. அதை முறியடிக்கும் விதமாக தற்சமயம் துணிவு படம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

கல்யாணம் பண்ணி வைங்கன்னு வெக்கத்தை விட்டு கேட்டேன்! –  ஓப்பன் டாக் கொடுத்த துணிவு நடிகர்!

அஜித் நடித்து இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துணிவு. துணிவு படம் மக்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெற்றது. இதில் சின்ன கதாபாத்திரமாக அறிமுகமானாலும் படத்தில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் மோகன சுந்தரம்.

இவர் இதற்கு முன்பு பல பட்டிமன்றங்களில் நகைச்சுவை பேச்சாளராக இருந்தார். இந்த நிலையில் துணிவு படத்தில் இவருக்கு மெய்பா என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இவர் ஒரு பேட்டியில் தனது வாழ்வில் தனக்கு திருமணம் குறித்து நடந்த ருசியான தகவல்களை தெரிவிக்கிறார். சிறு வயது முதலே மோகன சுந்தரத்திற்கு திருமணம் செய்ய வேண்டும் என ஆசை. ஆண்களுக்கு எல்லாம் 21 வயதுதான் திருமணத்திற்கான வயது. எனவே 21 வயது ஆகும்வரை காத்திருந்தார் மோகனசுந்தரம்.

21 வயதில் தனது தந்தையிடம் சென்று அப்பா என் நண்பர்கள் எல்லோருக்கும் திருமணம் ஆகிட்டு இருக்குது அப்பா என கூறியுள்ளார். உடனே அவரது தந்தை “வெளங்குன மாதிரிதான்” என கூறியுள்ளார்.

ஆனால் அவரது தங்கைகளுக்கு எல்லாம் 18 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. இவரும் 28 வயதுவரை திருமணம் ஆகும் என காத்திருக்கிறார். பிறகு வீட்டில் வேறு விதமாக சொல்லி பார்ப்போம் என கூறி “அப்பா எனக்கு கல்யாணம் ஆனால் அலுவலகத்தில் சம்பளம் ஏத்தி தராங்கலாம் அப்பா” என கூறியுள்ளார்.

ஏண்டா யாராவது இலவச கண்ணாடிக்கு ஆசைப்பட்டு கண் அறுவை சிகிச்சை பண்ணிப்பாங்களாடா என கேட்டுள்ளார் அவரது தந்தை. இப்படியாக இறுதியாக மிகவும் தாமதமாகவே தனக்கு திருமணம் ஆனதாக மோகன சுந்தரம் கூறுகிறார்.

சினிமாவில் பத்தாதுன்னு ஒடிடியிலும் மோதல்! – தொடரும் வாரிசு துணிவு போட்டி!

நேரடியாவே மோதிக்கலாமா? என்பது போல நேரடி போட்டியில் விஜய்யும் அஜித்தும் இறங்கினர். இதையடுத்து பொங்கலை முன்னிட்டு இவர்கள் இருவரும் நடித்த வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் வெளியாகின.

தல தளபதி மோதல் என்பது இன்று நேற்று நடக்கும் பிரச்சனையல்ல. பல ஆண்டுகளாக இருவரும் போட்டி போட்டுக்கொண்டு திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். திரை துறையில் அவர்களை தக்க வைத்து கொள்ளவும் இந்த போட்டி அவர்களுக்கு உதவுகிறது.

இந்த நிலையில் வாரிசு துணிவு இரண்டு திரைப்படங்களுமே நல்ல வசூல் சாதனை படைத்து நல்ல வெற்றியை கண்டுள்ளது. இதற்கு அடுத்து இரு படங்களுமே ஓ.டி.டியில் வெளியாக இருக்கின்றன.

ஆனால் ஓ.டி.டியில் கூட போட்டி போட்டுக்கொண்டு ஒரே நாளில் இரு படங்களும் வெளியாக இருக்கின்றன. வாரிசு, துணிவு இரு படங்களுமே வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி ஓ.டி.டிக்கு வரவிருக்கின்றன.

வாரிசு திரைப்படம் அமேசான் ப்ரைமிலும், துணிவு திரைப்படம் நெட்ப்ளிக்ஸிலும் வெளியாக இருக்கிறது.

துணிவு ஓ.டி.டி ரிலீஸ் எப்போ? – தேதி அறிவிப்பு!

முன்பெல்லாம் ஒரு படம் வெளியானால் அதை நாம் திரையரங்குகளில் பார்க்க முடியவில்லை எனில் திரும்ப ஒரிஜினல் கேசட்டாகவோ அல்லது டிவியில் போடும்போதோதான் பார்க்க முடியும். அதற்கே கிட்டத்தட்ட ஆறு மாத காலங்கள் ஆகிவிடும். ஆனால் இப்பொழுதெல்லாம் படம் வந்து ஒரு மாதத்திற்குள் அது ஓ.டி.டிக்கு வந்துவிடுகிறது.

பெரும் படங்களில் துவங்கி சிறிய படங்கள் வரை அனைத்திற்கும் ஓ.டி.டியில் கிடைக்கும் லாபமே இதற்கு காரணமாக உள்ளது. அந்த வகையில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களும் ஓ.டி.டியில் வாங்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தை நெட்ப்ளிக்ஸ் வாங்கியுள்ளது. தற்சமயம் பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் குறித்த தகவலை அளித்த நெட்ப்ளிக்ஸ் துணிவு திரைப்படம் குறித்த எந்த தகவலையும் தரவில்லை.

ஆனால் தற்போதைய தகவல்கள்படி துணிவு திரைப்படம் பிப்ரவரி 10 அன்று நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் என கூறப்படுகிறது. பெரிய படங்கல் வெளியாகி 50 நாட்களுக்கு பிறகுதான் ஓ.டி.டியில் விட வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்துடன் தயாரிப்பாளர்களுக்கு ஒரு உடன்படிக்கை உண்டு. அதன் படி பார்த்தால் பிப்ரவரி 10 ஆம் தேதி துணிவு வர வாய்ப்பில்லை.

ஆனால் பிப்ரவரி இறுதிக்குள் வரலாம் என ஒரு பக்கம் கூறப்படுகிறது.

டைரக்டர்கிட்டயே திருட்டு ப்ரிண்ட் காட்டிய சபரி மலை பக்தர்! –  அதிர்ச்சியடைந்த ஹெச்.வினோத்!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் பல படங்கள் தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்துள்ளன. இதற்கு முன்பு அவர் எடுத்த நேர்க்கொண்ட பார்வை, தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை அனைத்து படங்களுமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள்.

தற்சமயம் இவர் இயக்கி வெளியான திரைப்படம் துணிவு. துணிவு படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்சமயம் வரை ஓடி நல்ல வெற்றியையும் பெற்று வருகிறது. படத்தின் வெற்றியை தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வரலாம் என முடிவெடுத்தார் ஹெச்.வினோத்.

சபரி மலைக்கு நடந்து செல்லும்போது அவருடன் ஒரு பக்தரும் வந்துள்ளார். அவருக்கு ஹெச்.வினோத்தை தெரியாது. ஓய்விற்காக அமர்ந்திருக்கும்போது அந்த பக்தர் தனது மொபைலில் ஏதோ வீடியோ வைத்துள்ளார். என்ன என பார்க்கும்போது அவர் துணிவு படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அதே போல வாரிசு படத்தையும் மொபைலிலேயே வைத்துள்ளார். அதை பார்த்து திடுக்கிட்டுள்ளார் இயக்குனர் ஹெச்.வினோத் இந்த நிகழ்வை தற்சமயம் பேசிய பேட்டி ஒன்றில் இவர் கூறியுள்ளார்,

வாரிசு 210 கோடிக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல ! –  உண்மையை உடைத்த திருப்பூர் சுப்ரமணியன்

வாரிசு மற்றும் துணிவு இரண்டு திரைப்படங்களும் வெளியாகி கடும் போட்டி போட்டு வருகின்றன. இரண்டு திரைப்படங்களுமே இன்னும் அதிகப்பட்சம் திரையரங்குகளை முழுமைப்படுத்தி வருகின்றன.

ஆனால் வாரிசு படக்குழுவினர் மட்டும் தொடர்ந்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளியிட்டு வருகின்றனர். துணிவு படக்குழுவினர் இப்போது வரை எந்த ஒரு அப்டேட்டையும் தரவில்லை.

வாரிசு படம் வெளியாகி 5 நாட்கள் கழித்து 5 நாட்களில் 150 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. அடுத்த 2 நாள் கழித்து 7 நாட்களில் 210 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. இதுக்குறித்து திரை துறையிலேயே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. அது எப்படி தொடர்ந்து தினசரி வாரிசு படம் 30 கோடிக்கு ஓடுகிறது என்பதே கேள்வியாக இருந்தது.

இந்த நிலையில் பட விநியோகஸ்தர் சங்க தலைவரான திருப்பூர் சுப்ரமணியன் இதுக்குறித்து கூறும்போது வாரிசு தொடர்பாக வரும் செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை. வாரிசு திரைப்படம் 210 கோடி வசூலித்திருக்க வாய்ப்பில்லை. என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

ஒரு வாரத்தில் இவ்வளவு வசூல் சாதனையா? – தெறிக்கவிடும் வாரிசு!

தல தளபதி திரைப்படங்கள் என்றாலே தமிழ் சினிமாவில் அந்த படங்கள் ஓடி முடிக்கும் வரை அவைதான் ட்ரெண்டிங்கில் இருக்கும். அதுவும் பல காலங்களுக்கு பிரகு இருவரது படங்களும் ஒன்றாக வெளியாகியிருப்பதால் தற்சமயம் தமிழ்நாடு முழுவதும் இவர்கள் படம் குறித்த அப்டேட்களே வலம் வந்துக்கொண்டுள்ளன.

கடந்த ஜனவரி 11 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு தளபதி நடித்த வாரிசு மற்றும் தல நடித்த துணிவு திரைப்படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே ஒன்றுக்கொன்று போட்டி போட்டு ஓடி கொண்டுள்ளன. இப்போது வரை பல திரையரங்குகளில் புக்கிங்கே கிட்டத்தட்ட முக்கால்வாசி முடிந்து வருகிறது.

ஆனால் வசூல் நிலவரம்தான் எந்த படம் முன்னணியில் உள்ளது என்பதை தீர்மானிக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே 5 நாள் வசூல் நிலவரங்கள் வெளியாகி இருந்தன. அதில் துணிவு படம் 116 கோடிக்கும், வாரிசு திரைப்படம் 150 கோடிக்கும் ஓடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 7 நாட்கள் முடிவில் வாரிசு படம் 210 கோடியை உலக அளவில் வசூலித்து உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் துணிவு படக்குழு வசூல் குறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எனவே இப்போது வரை தளபதியின் வாரிசுதான் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

வாரிசு, துணிவு வசூல் நிலவரம்? – யார் முன்னிலை!

சினிமாவில் அஜித் விஜய் திரைப்படங்கள் வெளியாகிறது என்றாலே அது பரபரப்பான விஷயம்தான். அந்த வகையில் வாரிசு துணிவு ஏற்படுத்திய பரபரப்பு இன்னமும் ஓய்ந்த பாடில்லை.

முழு வசூல் நிலவரமும் வரும் வரை எந்த படம் வெற்றி பெற்றது என்பதையும் கண்டறிய முடியாது. மேலும் விஜய்க்கு அடுத்த நிலையில்தான் அஜித் என்கிற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையை முறியடிக்கவே அஜித் விஜய்யுடன் தனது படத்தை வெளியிடுகிறார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் 5 நாட்கள் முடிவில் 150 கோடியை எட்டிவிட்டோம் என வாரிசு படக்குழு அறிவித்தது. பொதுவாக படக்குழு அவ்வளவாக படத்தின் பாக்ஸ் ஆபிஸை அறிவிப்பதில்லை. ஆனால் விஜய், அஜித் போட்டி காரணமாக வாரிசு படக்குழுவே தங்களது வெற்றியை அறிவித்தது.

ஆனால் அவர்களுக்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில் 5 நாளில் 116 கோடி வசூலித்தது துணிவு என அறிவித்துள்ளது துணிவு படக்குழு. தயாரிப்பு ரீதியாகவும் வாரிசு படத்தை விடவும் துணிவு படத்திற்கு செலவு குறைவு என கூறப்படுகிறது. எனவே இதுவே துணிவு படத்திற்கு அதிக லாபம் என கூறப்படுகிறது.

ஆனால் வங்கிகளில் நடக்கும் ஏமாற்று வேலைகள் குறித்து பேசப்பட்டுள்ளது என்கிற விஷயம் துணிவு படத்திற்கான வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது என சினி வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனாலும் இன்னும் முதல் இடத்தில் தளபதி இருப்பதற்கான வாய்ப்புகளை வாரிசு ஏற்படுத்தியுள்ளது.