வாரிசு, துணிவு வசூல் நிலவரம்? – யார் முன்னிலை!

சினிமாவில் அஜித் விஜய் திரைப்படங்கள் வெளியாகிறது என்றாலே அது பரபரப்பான விஷயம்தான். அந்த வகையில் வாரிசு துணிவு ஏற்படுத்திய பரபரப்பு இன்னமும் ஓய்ந்த பாடில்லை.

முழு வசூல் நிலவரமும் வரும் வரை எந்த படம் வெற்றி பெற்றது என்பதையும் கண்டறிய முடியாது. மேலும் விஜய்க்கு அடுத்த நிலையில்தான் அஜித் என்கிற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையை முறியடிக்கவே அஜித் விஜய்யுடன் தனது படத்தை வெளியிடுகிறார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் 5 நாட்கள் முடிவில் 150 கோடியை எட்டிவிட்டோம் என வாரிசு படக்குழு அறிவித்தது. பொதுவாக படக்குழு அவ்வளவாக படத்தின் பாக்ஸ் ஆபிஸை அறிவிப்பதில்லை. ஆனால் விஜய், அஜித் போட்டி காரணமாக வாரிசு படக்குழுவே தங்களது வெற்றியை அறிவித்தது.

ஆனால் அவர்களுக்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில் 5 நாளில் 116 கோடி வசூலித்தது துணிவு என அறிவித்துள்ளது துணிவு படக்குழு. தயாரிப்பு ரீதியாகவும் வாரிசு படத்தை விடவும் துணிவு படத்திற்கு செலவு குறைவு என கூறப்படுகிறது. எனவே இதுவே துணிவு படத்திற்கு அதிக லாபம் என கூறப்படுகிறது.

ஆனால் வங்கிகளில் நடக்கும் ஏமாற்று வேலைகள் குறித்து பேசப்பட்டுள்ளது என்கிற விஷயம் துணிவு படத்திற்கான வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது என சினி வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனாலும் இன்னும் முதல் இடத்தில் தளபதி இருப்பதற்கான வாய்ப்புகளை வாரிசு ஏற்படுத்தியுள்ளது.

Refresh