Latest News
இதான் சான்ஸ் அஜித்தை வச்சு செஞ்சுரு!.. ஆதிக்கிற்கு விஷால் கொடுத்த ஐடியா!..
தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக நடித்து வருபவர் நடிகர் அஜித். பெரும்பாலும் அவரது திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுக்கும் படங்களாகவே அமைந்துள்ளன. இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் சென்றுக்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்து அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்னும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன் விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கினார்.
அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுக்குறித்து விஷால் ஒரு பேட்டியில் கூறும்போது மார்க் ஆண்டனி கதையை ஆதிக் முதலில் அஜித்திடம்தான் கூறினான். ஆனால் அஜித் அதை என்னிடம் கூறுமாறு கூறினார். சொல்லப்போனால் ஆதிக் முதலில் இயக்கிய த்ரிஷா இல்லனா நயன் தாரா திரைப்படம் அவனது படம் கிடையாது.
அது சினிமாக்குள் வருவதற்காக அவன் செய்தது. உண்மையில் அவனது முதல் படம் மார்க் ஆண்டனி திரைப்படம்தான். அவன் செய்ய நினைத்த அனைத்தையும் மார்க் ஆண்டனி படத்தில்தான் செய்திருந்தான். அதனால் நான் அவனிடம் கூறினேன். அஜித்திடம் உனக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. என்ன செய்ய முடியுமே செஞ்சிரு என கூறினேன்” இவ்வாறு கூறியுள்ளார் அஜித்.