News
டைரக்டர்கிட்டயே திருட்டு ப்ரிண்ட் காட்டிய சபரி மலை பக்தர்! – அதிர்ச்சியடைந்த ஹெச்.வினோத்!
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் பல படங்கள் தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்துள்ளன. இதற்கு முன்பு அவர் எடுத்த நேர்க்கொண்ட பார்வை, தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை அனைத்து படங்களுமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள்.

தற்சமயம் இவர் இயக்கி வெளியான திரைப்படம் துணிவு. துணிவு படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்சமயம் வரை ஓடி நல்ல வெற்றியையும் பெற்று வருகிறது. படத்தின் வெற்றியை தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வரலாம் என முடிவெடுத்தார் ஹெச்.வினோத்.
சபரி மலைக்கு நடந்து செல்லும்போது அவருடன் ஒரு பக்தரும் வந்துள்ளார். அவருக்கு ஹெச்.வினோத்தை தெரியாது. ஓய்விற்காக அமர்ந்திருக்கும்போது அந்த பக்தர் தனது மொபைலில் ஏதோ வீடியோ வைத்துள்ளார். என்ன என பார்க்கும்போது அவர் துணிவு படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
அதே போல வாரிசு படத்தையும் மொபைலிலேயே வைத்துள்ளார். அதை பார்த்து திடுக்கிட்டுள்ளார் இயக்குனர் ஹெச்.வினோத் இந்த நிகழ்வை தற்சமயம் பேசிய பேட்டி ஒன்றில் இவர் கூறியுள்ளார்,
