News
இந்த கொடுமையை நீங்கதான் கேட்கணும்.. விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த இளைஞன்..!
புதுச்சேரியில் உள்ள குயவர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்ரம். இவர் அந்த பகுதியிலேயே உள்ள இறைச்சி கடையில் பணிப்புரிந்து வந்துள்ளார். மேலும் நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் மீது அதிக பிரியம் கொண்டவர் விக்ரம்.
எனவே அவரது கட்சியில் தொண்டராக இருந்துள்ளார். இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு மினி டெம்போ ஒன்று சொந்தமாக வாங்கி தொழில் செய்யலாம் என கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.
ஆனால் அவருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரால் வட்டியை கட்ட முடியவில்லை. இதனையடுத்து விரக்தியடைந்த விக்ரம் தற்கொலை செய்துகொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக விஜய்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் எழுதியுள்ளதாவது, ”கந்து வட்டி தொல்லையால் மனம் உடைந்துதான் தற்கொலை செய்து கொள்கிறேன். விஜய் அண்ணா இனி வரும் ஆட்சி உங்களுடையதுதான்.
உங்கள் ஆட்சியில் கந்துவட்டிக்கு விடவே அனைவரும் பயப்பட வேண்டும். என் குழந்தைகள் மற்றும் மனைவியின் படிப்பு மற்றும் வாழ்க்கைக்கு உதவுங்கள் அண்ணா. எனது மகள் ஏஞ்சல் நன்றாக படிப்பாள். அவளை படிக்க வையுங்க அண்ணா என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அதிர்ச்சியளித்த நிலையில் விஜய் இதற்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
