ஒரு வாரத்தில் இவ்வளவு வசூல் சாதனையா? – தெறிக்கவிடும் வாரிசு!

தல தளபதி திரைப்படங்கள் என்றாலே தமிழ் சினிமாவில் அந்த படங்கள் ஓடி முடிக்கும் வரை அவைதான் ட்ரெண்டிங்கில் இருக்கும். அதுவும் பல காலங்களுக்கு பிரகு இருவரது படங்களும் ஒன்றாக வெளியாகியிருப்பதால் தற்சமயம் தமிழ்நாடு முழுவதும் இவர்கள் படம் குறித்த அப்டேட்களே வலம் வந்துக்கொண்டுள்ளன.

கடந்த ஜனவரி 11 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு தளபதி நடித்த வாரிசு மற்றும் தல நடித்த துணிவு திரைப்படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே ஒன்றுக்கொன்று போட்டி போட்டு ஓடி கொண்டுள்ளன. இப்போது வரை பல திரையரங்குகளில் புக்கிங்கே கிட்டத்தட்ட முக்கால்வாசி முடிந்து வருகிறது.

ஆனால் வசூல் நிலவரம்தான் எந்த படம் முன்னணியில் உள்ளது என்பதை தீர்மானிக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே 5 நாள் வசூல் நிலவரங்கள் வெளியாகி இருந்தன. அதில் துணிவு படம் 116 கோடிக்கும், வாரிசு திரைப்படம் 150 கோடிக்கும் ஓடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 7 நாட்கள் முடிவில் வாரிசு படம் 210 கோடியை உலக அளவில் வசூலித்து உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் துணிவு படக்குழு வசூல் குறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எனவே இப்போது வரை தளபதியின் வாரிசுதான் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

Refresh