வாரிசு 210 கோடிக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல ! –  உண்மையை உடைத்த திருப்பூர் சுப்ரமணியன்

வாரிசு மற்றும் துணிவு இரண்டு திரைப்படங்களும் வெளியாகி கடும் போட்டி போட்டு வருகின்றன. இரண்டு திரைப்படங்களுமே இன்னும் அதிகப்பட்சம் திரையரங்குகளை முழுமைப்படுத்தி வருகின்றன.

ஆனால் வாரிசு படக்குழுவினர் மட்டும் தொடர்ந்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளியிட்டு வருகின்றனர். துணிவு படக்குழுவினர் இப்போது வரை எந்த ஒரு அப்டேட்டையும் தரவில்லை.

வாரிசு படம் வெளியாகி 5 நாட்கள் கழித்து 5 நாட்களில் 150 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. அடுத்த 2 நாள் கழித்து 7 நாட்களில் 210 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. இதுக்குறித்து திரை துறையிலேயே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. அது எப்படி தொடர்ந்து தினசரி வாரிசு படம் 30 கோடிக்கு ஓடுகிறது என்பதே கேள்வியாக இருந்தது.

இந்த நிலையில் பட விநியோகஸ்தர் சங்க தலைவரான திருப்பூர் சுப்ரமணியன் இதுக்குறித்து கூறும்போது வாரிசு தொடர்பாக வரும் செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை. வாரிசு திரைப்படம் 210 கோடி வசூலித்திருக்க வாய்ப்பில்லை. என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

Refresh