கொலைகளை செய்யும் மர்ம மனிதன் ! –  எதிர்பார்ப்பை பெறும் ஸ்க்ரீம் பட ட்ரெய்லர்!

1996 முதலே ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஒரு திரைப்படம் ஸ்க்ரீம். ஹாரர் மற்றும் த்ரில்லர் வகையை சேர்ந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று.

இந்த படம் இதுவரை மூன்று முறை படமாக்கப்பட்டுள்ளது. மூன்று முறையுமே நல்ல ஹிட் கொடுத்துள்ளது. எனவே மீண்டும் தற்சமயம் ஸ்க்ரீம் 4 என்கிற பெயரில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதைப்படி பேய் முகமூடி அணிந்த மர்ம ஆசாமி குறிப்பிட்ட சிலரை கொலை செய்கிறான். கதையின் முக்கிய நாயகர்களான கதாநாயகன் அல்லது கதாநாயகி அந்த முகமூடி அணிந்த மனிதனிடம் இருந்து தப்பிக்க வேண்டும். இதுவே கதை.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வெட்னஸ்டே சீரிஸில் பிரபலமான நடிகை ஜென்னா ஒர்டேகா நடிக்கிறார். இவருக்கென்று உலக அளவில் ஒரு ரசிக பட்டாளம் உருவாகி இருப்பதால் இந்த படம் ஹிட் அடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த வருகிற மார்ச் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது.

ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்.

Refresh