லீக் ஆன பிச்சைக்காரன் 2 கதை – விஜய் படத்தின் காபியா?

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன். இயக்குனர் சசி இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் பிச்சைக்காரன் 2.

பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் கதை குறித்து சிறு தகவல் வெளியாகியுள்ளது. பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்தின் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். பெரும் பணக்காரனாக இருக்கும் கதாநாயகன் தனது தாயை காப்பாற்ற வேண்டி பிச்சைக்காரனாக சில நாட்கள் இருந்து வருவான்.

அதே போல இந்த படத்திலும் கூட மிகப்பெரிய கோடீஸ்வரனாக வருகிறார் விஜய் ஆண்டனி. இந்த படத்திலும் ஏதோ ஒரு சூழ்நிலையில் பிச்சைக்காரனாக மாற வேண்டிய சூழல் வர விஜய் ஆண்டனி பிச்சைக்காரனாக வருகிறார். அங்கு வாழும் ஏழை மக்களோடு குடிசையில் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் அந்த குடிசைகளை இடித்து அங்கு ஒரு கட்டிடம் கட்ட திட்டமிடுகிறது ஒரு கார்பரெட் நிறுவனம். இந்த விஷயம் அறிந்த விஜய் ஆண்டனி ஒரு பிச்சைக்காரனாகவே அவர்களை எப்படி எதிர்க்கிறார் என்பதே கதை என இணையத்தில் ஒரு பேச்சு உலாவி வருகிறது.

இந்த கதையை பார்க்கும்போது விஜய் நடித்த கத்தி மற்றும் சர்கார் படங்களின் கலவை போல தெரிகிறது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Refresh