துணிவு ஓ.டி.டி ரிலீஸ் எப்போ? – தேதி அறிவிப்பு!

முன்பெல்லாம் ஒரு படம் வெளியானால் அதை நாம் திரையரங்குகளில் பார்க்க முடியவில்லை எனில் திரும்ப ஒரிஜினல் கேசட்டாகவோ அல்லது டிவியில் போடும்போதோதான் பார்க்க முடியும். அதற்கே கிட்டத்தட்ட ஆறு மாத காலங்கள் ஆகிவிடும். ஆனால் இப்பொழுதெல்லாம் படம் வந்து ஒரு மாதத்திற்குள் அது ஓ.டி.டிக்கு வந்துவிடுகிறது.

பெரும் படங்களில் துவங்கி சிறிய படங்கள் வரை அனைத்திற்கும் ஓ.டி.டியில் கிடைக்கும் லாபமே இதற்கு காரணமாக உள்ளது. அந்த வகையில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களும் ஓ.டி.டியில் வாங்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தை நெட்ப்ளிக்ஸ் வாங்கியுள்ளது. தற்சமயம் பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் குறித்த தகவலை அளித்த நெட்ப்ளிக்ஸ் துணிவு திரைப்படம் குறித்த எந்த தகவலையும் தரவில்லை.

ஆனால் தற்போதைய தகவல்கள்படி துணிவு திரைப்படம் பிப்ரவரி 10 அன்று நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் என கூறப்படுகிறது. பெரிய படங்கல் வெளியாகி 50 நாட்களுக்கு பிறகுதான் ஓ.டி.டியில் விட வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்துடன் தயாரிப்பாளர்களுக்கு ஒரு உடன்படிக்கை உண்டு. அதன் படி பார்த்தால் பிப்ரவரி 10 ஆம் தேதி துணிவு வர வாய்ப்பில்லை.

ஆனால் பிப்ரவரி இறுதிக்குள் வரலாம் என ஒரு பக்கம் கூறப்படுகிறது.

Refresh