Connect with us

என்னை பார்த்து நாகேஷ் சொன்ன அந்த வார்த்தை!. அப்படியே நடந்துச்சு!.. மன கஷ்டத்தில் இருக்கும் இயக்குனர்!.

actor nagesh

Latest News

என்னை பார்த்து நாகேஷ் சொன்ன அந்த வார்த்தை!. அப்படியே நடந்துச்சு!.. மன கஷ்டத்தில் இருக்கும் இயக்குனர்!.

Social Media Bar

பழம் பெரும் நடிகர்கள் பலரும் சினிமா துறையில் மிக சகஜமாக பழக கூடியவர்களாக இருந்தனர். அதனாலேயே அவர்களுக்கான நட்பு வட்டாரம் என்பதும் மிக பெரியதாக இருந்தது. அப்படி சினிமாவில் அனைவருடனும் நட்பாக பழக கூடியவர் நடிகர் நாகேஷ்,

நாகேஷை பொறுத்தவரை சினிமாவில் புதிதாக வந்தவர், ஏற்கனவே பல வருடங்களாக இருப்பவர் என்றெல்லாம் பார்த்து பழக மாட்டார். அவர் மனதுக்கு பிடித்துவிட்டால் அவர்களுடன் சமமாக பழகுவார்.

தமிழ் இயக்குனர் விஜியுடன் அப்படிதான் நடிகர் நாகேஷிற்கு பழக்கம் ஏற்பட்டது. விஜி தமிழில் அள்ளி தந்த வானம், மொழி, வெள்ளித்திரை ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார். மூன்று திரைப்படங்களுமே சிறப்பான திரைப்படங்கள் என்று கூறலாம்.

nagesh
nagesh

அவரது அனைத்து திரைப்படங்களிலும் காமெடி காட்சிகள் அதிகமாக இருக்கும். அது நாகேஷ்க்கு மிக பிடிக்கும். இந்த நிலையில் அவருக்கும் நாகேஷிற்கும் பழக்கம் ஏற்பட்டது. பொதுவாகவே நாகேஷ் ஒரு உணவு பிரியராவார். அவர் இயக்குனர் விஜியிடம் உங்களுக்கு எந்த உணவு ரொம்ப பிடிக்கும் என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த விஜி தஞ்சாவூர் பக்கம் சித்ரா பௌர்ணமி நாட்களில் புளிசாதம், தயிர்சாதம், கொடுப்பார்கள். அது எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். உடனே நாகேஷ் என் மருமகள் தஞ்சாவூரை சேர்ந்தவர்தான் என கூறி மறுநாளே அந்த உணவுகளை எல்லாம் செய்து கொண்டு வந்துள்ளார்.

பிறகு சில நாட்கள் கழித்து உன்னை நேரில் சந்திக்க வேண்டும் வா என அழைத்துள்ளார் நாகேஷ். ஆனால் அன்று தனக்கு வேலை இருப்பதாக கூறியுள்ளார் இயக்குனர் விஜி. எங்க நான் செத்த பிறகுதான் நீ பார்க்க வர போற என நாகேஷ் கூறியுள்ளார்.

அதே போல சில நாட்களில் நாகேஷ் இறந்துவிட்டார். உயிரோடு இருக்கும்போது அவரை பார்க்க முடியாமல் போய்விட்டது என மனம் வருந்தி ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் விஜி.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top