Tag Archives: premam

என் படத்தை அப்படியே தூக்கிட்டாங்க!.. சேரன் படத்தை காபி அடிச்சி ஹிட் கொடுத்த படம்..

Director Seran: தமிழ் சினிமாவில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் சிலர் உண்டு அப்படியான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சேரன். அவர் இயக்கிய வெற்றி கொடிக்கட்டு திரைப்படமே அப்பொழுது பெரும் வெற்றியைப் பெற்ற ஒரு திரைப்படம் எனக் கூறலாம்.

பொதுவாக இப்போது இருக்கும் சில இயக்குனர்கள் கதைக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல் திரைப்படத்தை இயக்குவதை பார்க்க முடியும். ஆனால் சேரனை பொறுத்தவரை அவர் அந்த மூன்று மணி நேரத்தில் ஒரு பெரிய கதையை மக்கள் மத்தியில் கூறி இருப்பார்.

அதிகபட்சம் சேரனின் கதைகள் எல்லாம் சாமானிய மக்களின் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டதாகதான் இருக்கும் அப்படி சேரன் இயக்கிய பல திரைப்படங்கள் பெரும் வெற்றியை கண்டிருக்கின்றன. இந்த நிலையில் சேரன் நடித்து இயக்கி வெளியான திரைப்படம் ஆட்டோகிராஃப்.

ஒரு இளைஞனின் காதல் கதைகளை கூறும் வகையில் அமைந்திருக்கும் அந்த திரைப்படம் வெளியான காலகட்டத்திலேயே பெரும் வெற்றியை கண்டது. அந்த திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அப்பொழுது பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக இருந்தன.

இந்த நிலையில் சில வருடங்கள் கழித்து சேரனிடம் வந்த அவரது நண்பர்கள் உங்களது திரைப்படத்தை அப்படியே திருடி மலையாளத்தில் படமாக்கி பெரும் வெற்றியை கண்டிருக்கின்றனர் எனக் கூறியிருக்கின்றனர். அதுதான் பிரேமம் என்கிற திரைப்படமாகும்.

கிட்டத்தட்ட பிரேமம் மற்றும் ஆட்டோகிராப் இரண்டின் கதை அம்சமும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் அதை காட்சிப்படுத்தும் விதத்தில் மலையாளத்தில் மிகவும் சிறப்பாக செய்திருந்ததால் ஆட்டோகிராஃபை விட பிரேமம் அதிகமாக பிரபலமானது.

ஆனால் இதற்காக சேரன் கோபப்படவில்லை என்னுடைய கதையை ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக்கொண்டு அவர்கள் திரைப்படம் எடுத்திருக்கிறார்கள் இது நல்ல விஷயம்தானே இதை திருட்டு என்று கூற முடியாது என்று கூறி தனது நண்பர்களை சமாதானப்படுத்தி இருக்கிறார் சேரன்.

புடவைதான் எனக்கு பாதுக்காப்பான ஆடை!.. சாய் பல்லவி இப்படி சொல்ல ஒரு காரணம் இருக்கு!..

Premam Actress Sai pallavi : ப்ரேமம் திரைப்படம் கதாநாயகன் நிவின் பாலிக்கு (nivin paul) எப்படியான படமாக இருந்தது என தெரியவில்லை. ஆனால் அந்த படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகளுக்குமே அந்த திரைப்படம் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அதில் நடித்த அனுப்பாமா பரமேஸ்வரன் (Anupama parameshwaran), மடோனா சபாஸ்டியன் (Madona Sabastian), சாய் பல்லவி (sai pallavi) மூவருமே அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் வாய்ப்பை பெற துவங்கினார்.

தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் அந்த படம் மூலமாக சாய் பல்லவிக்கு மலையாள சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போது தமிழ் நாட்டு ரசிகர்களே மலர் டீச்சர்  என்று சுற்றி கொண்டிருந்ததை பார்த்திருக்க முடியும். இந்த நிலையில் அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றார் சாய் பல்லவி.

பொதுவாக தெலுங்கிற்கு சென்றாலே கதாநாயகிகளை வைத்து கவர்ச்சி காட்சிகளை எடுத்துவிடுவார்கள், சமந்தா, தமன்னா மாதிரியான நடிகைகள் தெலுங்கு சென்றதும் அதிகமாக கவர்ச்சி காட்டியதை பார்க்க முடியும். ஆனால் சாய் பல்லவி தெலுங்கு சினிமாவிற்கு சென்ற போதும் கூட மிகவும் நாகரிகமாகவே நடித்து வந்தார்.

தற்சமயம் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது எதற்காக அனைத்து பேட்டிகளுக்கும், விழாக்களுக்கும் புடவை கட்டி வருகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, புடவைதான் எனக்கு பாதுக்காப்பான உடையாக உள்ளது. ஒரு விழாவிற்கு பேச வந்திருக்கும்போது கவர்ச்சியாக உடை அணிந்தால் அது எங்கு விலகும் என்ற பயத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் புடவையில் அந்த பயம் இல்லை. அதற்காக புடவைதான் நல்ல உடை என நான் கூறவில்லை. எனக்கு அந்த உடை சரியாக இருக்கிறது என்று கூறியுள்ளார் சாய் பல்லவி. அவரின் இந்த பேச்சுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டாகியுள்ளது.

டான்ஸ் ஆட கூப்பிட்டு மோசம் பண்ணிட்டாங்க!.. அழுதுக்கிட்டுதான் வீட்டுக்கு வந்தேன்.. தெலுங்கு படத்தில் சாய் பல்லவிக்கு நடந்த கொடுமை!.

Sai Pallavi on Telugu movie: பிரேமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் வெகுவாக பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அதன் பிறகு தென்னிந்தியா முழுக்க சாய் பல்லவிக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன.

தமிழிலும் கூட ஒரு சில படங்களில் நடித்தார் சாய் பல்லவி. ஆனால் தெலுங்கு சினிமாவில் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன. சாய் பல்லவி சிறப்பாக நடனமாட கூடியவர். மாரி 2 திரைப்படத்தில் கூட அவர் ஆடிய ரவுடி பேபி பாடல் எந்த அளவிற்கு பிரபலமானது என பலருக்கும் தெரிந்திருக்கும்.

அதே சமயம் கவர்ச்சி காட்டி நடிப்பதில் சாய் பல்லவிக்கு அவ்வளவாக விருப்பம் கிடையாது. அவரது திரைப்படங்களில் அவர் கவர்ச்சியாக நடிப்பதை பார்ப்பது அரிதான விஷயமாகும். ஆனால் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

சாய் பல்லவி கவர்ச்சி காட்ட மாட்டார் என்பதால் அவரிடம் அதிகமாக நடனத்தை வாங்கி அதை வைத்து சமரசம் செய்துக்கொண்டனர் தெலுங்கு சினிமா துறையினர். இந்த நிலையில் மிடில் க்ளாஸ் ஆம்பள என்கிற திரைப்படத்தில் முதுகை வளைத்து ஒரு நடனத்தை சாய் பல்லவிக்கு வைத்துள்ளனர்.

அந்த நடனம் கொஞ்சம் கடினமான நடனமாகும். பாடலுக்காக அதை ஆடும்போது 20 முறைக்கும் மேல் அதை செய்ததால் சாய் பல்லவிக்கு பயங்கரமான முதுகு வலி வந்ததது. இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டுமா? என அழுதுக்கொண்டேதான் அன்று வீட்டிற்கு வந்தேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சாய் பல்லவி.

புடவையில் தெரிய வேண்டியதெல்லாம் கச்சிதமா தெரியுது! – ட்ரெடிஷன் லுக்கில் அனுபாமா!

மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்சமயம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமாக இருப்பவர் அனுபாமா பரமேஸ்வரன். இவர் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படம் தென்னிந்தியா அளவில் வரவேற்பை பெற்றது.

அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பை பெற்றார் அனுபாமா. பிரேமம் திரைப்படம் மலையாளத்தில் வெற்றியடைந்ததை அடுத்து அதை தெலுங்கில் ரிமேக் செய்தனர். அந்த படத்திலும் கூட மேரி என்னும் கதாபாத்திரத்தில் அனுபாமாவே நடித்திருந்தார்.

அதற்கு பிறகு தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழில் கொடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்தார்.

2022 இல் இவர் கார்த்திகேயா 2 என்கிற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்சமயம் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் அனுபாமா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.