Tag Archives: துல்கர் சல்மான்

தியாகராஜ பாகவதர் கதைதான்… துல்கர் கலம் இறங்கிய படத்தின் கதை..!

நடிகர் துல்கர் சல்மான் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே வித்தியாசமான கதைகளாக இருக்கின்றன. அந்த வகையில் அவர் அடுத்து நடித்து வரும் திரைப்படம் நான் காந்தா.

இந்த காந்தா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே இதற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் காந்தா திரைப்படம் ஒரு பழைய காலத்து சினிமா திரைப்படமாக இருக்கிறது.

படத்தின் கதைப்படி துல்கர் சல்மான் ஒரு கதாநாயகனாக நடிக்கும் நடிகராக இருக்கிறார். அதிக புகழ்பெற்ற நடிகராக இருக்கும் அவர் செய்யும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதைகளம் செல்கிறது.

ஆரம்பத்தில் இந்த படம் எம்.ஜி.ஆரின் கதையாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. ஏனெனில் சமுத்திரகனியின் கதாபாத்திரம் கிட்டத்தட்ட கலைஞர் கருணாநிதியின் கதாபாத்திரம் போலவே இருந்தது. ஆனால் இப்பொழுது வந்த தகவலின் படி இந்த திரைப்படம் தியாகராஜ பாகவதரின் கதையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்திற்கு முன்பே தமிழ் சினிமாவில் அதிக புகழ் பெற்ற நடிகர்களாக இருந்தவர்கள் தியாகராஜ பாகவதரும் என் எஸ் கிருஷ்ணனும்தான். அவர்களுக்கு பிறகு தான் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஆகியோர் வந்தனர்.

எனவே இந்த கதைகளமானது அவர்களது காலகட்டத்தை கூறும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்திற்கு முன்பு இருந்த சினிமாவை இதுவரை யாரும் படம் எடுத்ததில்லை அந்த வகையில் இந்த திரைப்படம் தான் முதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாடு நடிகை நடிப்பில் வரும் மாயாஜால சூப்பர் ஹீரோ படம்.. Lokah – Chapter 1 – Chandra

மலையாளம் மற்றும் தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். கல்யாணி பிரியதர்ஷன் தயாரிப்பாளரும் இயக்குனருமான பிரியதர்ஷனின் மகள் ஆவார்.

இந்த நிலையில் இவரது நடிப்பில் லோகா என்கிற ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் பல பாகங்களாக வர இருக்கிறது. துல்கர் சல்மான் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது படம் முழுக்க முழுக்க ஒரு மாயாஜால படமாக தெரிகிறது. இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மாயாஜால சக்திகளை கொண்ட ஒரு சூப்பர் ஹீரோவாக இருக்கிறார் என்றும் தெரிகிறது.

படத்தின் டீசர் டிரைலரை பார்க்கும் பொழுது வித்தியாசமான ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சினிமாவில் சூப்பர் ஹீரோ படங்கள் மிக குறைவாகவே வருவதால் இந்த படம் நிச்சயமாக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

எம்.ஜி.ஆராக களம் இறங்கும் துல்கர்? வெளியான காந்தா ட்ரைலர்..!

துல்கர் சல்மான் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவரது திரைப்படம் குறித்த டீசர் ஒன்றை வெளியாகி இருக்கிறது. காந்தா என்கிற தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் துல்கர் சல்மான். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக சமுத்திரகனி நடித்திருக்கிறார்.

இந்த படம் அடுத்த மாதம் 12ஆம் தேதி திரையரங்கிற்கு வர இருக்கிறது. சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

படத்தின் கதை கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் கருணாநிதிக்கு இடையேயான போட்டியை கூறும் வகையில் இருக்கிறது. ஆனால் அதற்குள்ளாக நிறைய கற்பனைகளை சேர்த்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இந்த படத்தின் டீசர் இப்பொழுது வரவேற்பை பெற துவங்கியிருக்கிறது. டீசர் வெளியாகி நான்கு மணி நேரத்திலேயே youtube டிரெண்டிங்கில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது இந்த படம்.

எனவே இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது செல்வமணி செல்வராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

துல்கர் சல்மான் எடுத்த அந்த முடிவு… இப்ப தப்பிச்சிக்கிட்டார்..!

துல்கர் சல்மான் மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலுமே பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் ஏற்கனவே இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஓ காதல் கண்மனி என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனால் தக் லைஃப் திரைப்படத்திலும் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

சிம்பு நடித்த கதாபாத்திரத்தில்தான் துல்கர் சல்மான் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவருக்கு லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

lucky bhaskar

லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் கதை பிடித்திருந்ததால் துல்கர் தக் லைஃப் திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டார். இது பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால் இப்போது பார்க்கும்போது தக் லைஃப் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை தரவில்லை.

அதே சமயம் லக்கி பாஸ்கர் எப்படியான வெற்றியை கொடுத்தது என்பது பலருமே அறிந்த விஷயம்தான்.. நல்ல வேளை துல்கர் நல்ல முடிவைதான் எடுத்துள்ளார் என இதுக்குறித்து கூறி வருகின்றனர் ரசிகர்கள்.

படப்பிடிப்பில் செஞ்ச அந்த தப்பு.. துல்கரை வச்சி செஞ்ச ரசிகர்கள்.. தவறை உணர்ந்து பிராய்ச்சித்தம் செய்த துல்கர்..!

An incident in a Dulquer Salmaan film brought her under a lot of criticism

துல்கர் சல்மான் நடிப்பில் தற்சமயம் வெளியாகி ஐந்து நாட்களில் பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது. லக்கி பாஸ்கர் திரைப்படம் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லக்கி பாஸ்கர் திரைப்படம் ஐந்தே நாட்களில் எடுக்கப்பட்ட தயாரிப்பு செலவை தாண்டி வசூலை கொடுத்து இருக்கிறது.

சொல்லப்போனால் அமரன் திரைப்படம் கூட இன்னும் அதன் தயாரிப்பு செலவை தொடவில்லை. ஆனால் லக்கி பாஸ்கர் திரைப்படம் அதையெல்லாம் தாண்டி லாபத்தை பெற்று வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு துல்கர் சல்மான் வேறு படத்தில் நடிக்க வேண்டி இருந்ததார்.

டப்பிங்கில் நடந்த வேலை:

lucky baskar

தமிழில் டப்பிங் வேறு யாராவது பார்த்துக் கொள்ளட்டும் என்று கூறியிருந்தாராம். ஆனால் தமிழிலும் துல்கர் சல்மானுக்கு ரசிகர்கள் அதிகம் அவரது சொந்த குரலில் டப்பிங் செய்தால் தான் இங்கு வரவேற்பை பெறும் என்கிற நிலை இருந்தது.

ஆனால் துல்கர் சல்மான் அவர்கள் ஒப்புக் கொள்ளாததால் ஏஐ முறையில் டப்பிங் செய்து ட்ரைலரை வெளியிட்டுள்ளனர். ஆனால் ட்லைரிலேயே அந்த விஷயத்தை கண்டறிந்த ரசிகர்கள் துல்கர் சல்மானையும் பட குழுவையும் திட்ட துவங்கியிருக்கின்றனர்.

இந்த விஷயத்தை அறிந்த துல்கர் சல்மான் உடனடியாக வந்து படத்தின் முழு டப்பிங்கை அவரே தமிழில் செய்து கொடுத்து இருக்கிறார். அதேபோல இப்பொழுது தமிழிலும் வரவேற்பை பெற்று இருக்கிறது லக்கி பாஸ்கர் திரைப்படம்.

என்னதான் மணிரத்னம் படமா இருந்தாலும் இதை எல்லாம் பொறுத்துக்க முடியாது!.. நடையை கட்டிய ஜெயம் ரவி!..

பொதுவாகவே பெரிய கதாநாயகர்கள் எல்லாம் ஒருமுறை மணிரத்னம் இயக்கத்தில் படம் நடித்தார்கள் என்றால் அடுத்து திரும்ப அவரது இயக்கத்தில் திரைப்படங்களில் நடிக்க மாட்டார்கள். தற்சமயம் அதை மாற்றி அமைக்கும் வகையில் இரண்டாவது முறை மணிரத்னத்தோடு கூட்டணி போட்டுள்ளார் கமல்ஹாசன்.

அதனையடுத்து மணிரத்னத்தின் இயக்கத்தில் தக் லைஃப் என்னும் திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். பொதுவாகவே மணிரத்னம் ப்ளான் செய்து படம் இயக்குவதில் சிம்பு ரகம்தான் என்று அவர் குறித்து நாயகன் பட தயாரிப்பாளரே ஒருமுறை குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

அந்த அளவிற்கு தேவையில்லாத பல விஷயங்களை செய்து அப்போதே அதிக பண விரயத்தை செய்திருந்தாராம் மணிரத்னம், தற்சமயம் இப்படியாக அவர் செய்யும் விஷயங்கள் இளம் நடிகர்களுக்கு ஒத்து வராத விஷயங்களாக இருந்து வருகின்றன.

படத்தில் இருந்து விலகிய ஜெயம் ரவி:

ஏற்கனவே இந்த படத்தில் துல்கர் சல்மான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் ஏதோ காரணங்களால் அவர் மணிரத்னம் திரைப்படத்தில் இருந்து விலகினார். தற்சமயம் சிம்பு அந்த படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

அதே போல படத்தில் ஜெயம் ரவிக்கும் முக்கியமான கதாபாத்திரம் இருந்தது. தற்சமயம் அதிலிருந்து ஜெயம் ரவியும் விலகியுள்ளார். இதுக்குறித்து சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்ளும்போது ஒவ்வொரு முறையும் ஜெயம் ரவி மணிரத்தினத்திற்காக பெரும் நேரத்தை கால்ஷீட்டிற்காக ஒதுக்கியுள்ளார்.

ஆனால் இரண்டு முறை அந்த கால்ஷூட் வேண்டாம் அடுத்த முறை உங்கள் காட்சிகளை எடுத்துக்கொள்ளலாம் என நிராகரித்துள்ளார் மணிரத்தினம். ஏறகனவே ஜெயம் ரவி நடிக்க வேண்டிய படங்களே நிறைய வரிசையில் நிற்கின்றன. இந்த நிலையில் இப்படி நேர விரயம் செய்ய முடியாது என படத்தில் இருந்து விலகி விட்டாராம் ஜெயம் ரவி.

இதனையடுத்து இந்த கதாபாத்திரத்தில் அடுத்து நடிகர் நிவின் பாலி நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் துல்கர் சல்மான், ஜெயம் ரவி இருவருமே இதற்கு முன்பு மணிரத்தினம் இயக்கத்தில் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேக்கப் இல்லாம பார்த்தா உன்ன யாருக்கும் பிடிக்காது!. செல்பி எடுத்த பெண்ணால் மனைவியிடம் திட்டு வாங்கிய துல்கர் சல்மான்..

டெல்லிக்கே ராஜானாலும் பல்லிக்கு புள்ளதான என ஒரு படத்தில் வசனம் வரும் அதுப்போல என்னதான் நடிகர்கள் ஊருக்கே பெரும் பிரபலமாக இருந்தாலும் கூட அவர்கள் வீட்டில் அவர்கள் ஒரு சாதாரண மனிதர்கள் தான்.

பொதுவாக அதிகமாக இளம் பெண்களை கவரும் நடிகர்கள் தங்கள் மனைவியிடம் அதிகமாக திட்டு வாங்குவது உண்டு. நடிகர் சிவகார்த்திகேயனே ஒரு பேட்டியில் கூறும் பொழுது எதிர்நீச்சல் திரைப்படத்தில் அவர் நடித்த பொழுது அதில் வா வா என் வெளிச்ச பூவே வா என்கிற ஒரு பாடலை சற்று ரொமான்டிக்காக செய்திருப்பார்.

அந்த பாடலை கடைசி வரை அவரது மனைவி பார்க்கவே இல்லை என்று கூறியிருந்தார் சிவகார்த்திகேயன். அந்த அளவிற்கு மனைவிகள் கணவர்களை தங்களின் உடைமைகளாக பார்ப்பது உண்டு. இந்த நிலையில் நடிகர் நடிகர் துல்கர் சல்மானும் இதே போல அதிகமான இளம் பெண்கள் ரசிகர்களை கொண்ட ஒரு நடிகராவார்.

அவரிடம் இது குறித்து கேட்கும் பொழுது என் மனைவி யாராவது ஒரு பெண் என்னிடம் செல்பி எடுக்க வந்தாலே யார் அந்த பொண்ணு எதற்காக உன்னிடம் வந்து செல்பி எடுக்கிறார் என்று கேட்பார். நான் வீடுகளில் தூங்கி காலை நேரங்களில் எழும் பொழுது முடியெல்லாம் கலைந்து மோசமாக இருப்பேன்.

அப்போது என்னை பார்க்கும் மனைவி இந்த நேரத்தில் உன்னை பார்க்கும் எந்த பெண் ரசிகர்களுக்கும் உன்னை பிடிக்காது என்று தனது மனைவி திட்டுவதாக தனது பேட்டியில் நகைச்சுவையாக கூறியிருந்தார் துல்கர் சல்மான்.

நான் யாருன்னு தெரியுமா? விக்ரம் பிரபுவை கல்லூரியில் அதிர்ச்சியடைய வைத்த நடிகர்…

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் சிறந்த நடிகராக போற்றப்படும் நடிகர் சிவாஜி கணேசனின் மூன்றாம் தலைமுறையாக இன்றும் சிவா சினிமாவில் இருந்து வரும் ஒரு நடிகராக விக்ரம் பிரபு இருக்கிறார்.

விக்ரம் பிரபு சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் அவரை பெரிதாக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, என்றாலும் அவர் நடித்த கும்கி, சிகரம் தொடு டானாகாரன், போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன.

அதனைத் தொடர்ந்து பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் விக்ரம் பிரபு நடித்து விட்டார். தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார். அவர் கல்லூரியில் படித்த பொழுது அவருக்கு நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்துள்ளார்.

விக்ரம் பிரபு கல்லூரியில் படிக்கும் போது அவர் படிக்கும் கல்லூரியில் தமிழர்களே இல்லை. சென்னையில் இருந்து அங்கு படிக்க வந்தவராக விக்ரம் பிரபு மட்டுமே இருந்தார். அதனால் விக்ரம் பிரபு மிகவும் கவலையில் இருந்தார்.

அந்த சமயத்தில் சென்னையிலிருந்து இன்னொரு நபரும் அங்கே படிக்க வந்திருந்தார். ஆனால் அவர் யார் என்று விக்ரம் பிரபுவுக்கு தெரியாது. அந்த நபரிடம் போய் விக்ரம் பிரபு பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார். அதன் பிறகு யார் அந்த நபர் என அவரிடம் கேட்கும் போது அந்த நபர் அதை சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருந்தார்.

பிறகு ஒரு நாள் விக்ரம் பிரபுவை சந்தித்த அவரது நண்பர் ”உங்கள் அப்பா பிரபுவை எனது தந்தை நேற்று சந்தித்தார் தெரியுமா?” என கூறியுள்ளார் அப்பொழுதுதான் விக்ரம் பிரபு யோசித்துள்ளார். ஒருவேளை பெரும் பிரபலத்தின் மகனாக இவர் இருப்பாரோ? என்று யோசனையில் இருந்தவர் பிறகு யார் என கேட்டு பல நடிகர்களின் பெயரை சொல்லி அவர்களின் மகனா நீ என்று கேட்டுள்ளார் விக்ரம் பிரபு.

ஆனால் இதெற்கெல்லாம் பதில் சொல்லாமல் இருந்த அந்த நபர் கடைசியில் என்னுடைய அப்பா மம்முட்டி மலையாள நடிகர் என கூறினார். அப்படி கூறியது வேறு யாரும் அல்ல துல்கர் சல்மான் தான் அந்த நபர். அப்பொழுது இருந்தே விக்ரம் பிரபுவும் துல்கர் சல்மானும் நண்பர்களாக இருந்துள்ளனர் என்பது பலரும் அறியாத விஷயமாகும்.