தமிழ் டப்பிங்கில் வெளியாகி அதிக ரசிகர்களை கொண்ட அனிமே தொடர்கள்

தமிழ் ரசிகர்கள் மத்தியில் அனிமே தொடர்களுக்கு அதிக வரவேற்பு உருவாகிய வண்ணம் இருக்கிறது. இதனால் இப்போது பல நிறுவனங்கள் தமிழில் அனிமே தொடர்களை டப்பிங் செய்து விட துவங்கியுள்ளன.

இது 2கே கிட்ஸ் மத்தியில் அனிமே தொடர்கள் மீதான ஆர்வத்தினை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் மத்தியில் பிரபலமான சில தமிழ் டப்பிங் அனிமேக்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

Naruto Shippudan

தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமான ஒரு அனிமே தொடராக நருட்டோ வெப் தொடர் இருந்து வருகிறது. நருட்டோ என்கிற சிறுவனை மையப்படுத்தி இந்த கதை செல்கிறது.

வழக்கமாக அதிக திறமையுள்ள அனைவராலும் போற்றப்படும் ஒரு கதாபாத்திரம்தான் கதாநாயகனாக இருக்கும். ஆனால் நருட்டோவை பொறுத்தவரை ஊரால் ஒதுக்கப்பட்ட நிராகரிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரமாக நருட்டோ கதாபாத்திரம் இருந்து வருகிறது.

ஊர் தலைவர் ஆக வேண்டும் என்கிற அந்த சிறுவனனின் கனவுகளை அடிப்படையாக கொண்டே கதை நகர்கிறது.

Spy x Family

ஸ்பை ஃபேமிலி என்னும் தொடரானது ஒரு உளவு துறை ஏஜெண்ட் மற்றும் அவனது குடும்பத்தை அடிப்படையாக கொண்டு செல்கிறது. கதையின்படி டிவலைட் என்னும் உளவாளி ஒரு நபரை உளவு பார்க்க வேண்டி இருக்கும்.

ஆனால் அந்த நபரை அவ்வளவு எளிதில் சந்திக்க முடியாது. ஆனால் அவரின் மகன் ஒரு பெரிய பள்ளியில் படித்து வருகிறான். இந்த நிலையில் டிவைலட் தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கி தனது குழந்தையை அந்த பள்ளியில் படிக்க வைக்கிறார்.

அதனை கொண்டு அவர் துப்பறியும் விஷயங்களை அடிப்படையாக கொண்டு கதை செல்கிறது.

Demon slayer

டீமன் ஸ்லேயர் மிக சுவாரஸ்யமான கதை அம்சத்தை கொண்ட தொடராகும். இரவு வேளைகளில் ஜப்பானில் மக்கள் உயிரை பறிக்கும் ராட்சசர்கள் உலா வருகின்றனர். இவர்களை வேட்டையாட என்றே ஒரு வேட்டை குழு உள்ளது அவர்கள்தான் டீமன் ஸ்லேயர் என அழைக்கப்படுகின்றனர்.

ராட்சசர்களால் தனது குடும்பத்தை இழந்த டாஞ்சிரோ என்னும் சிறுவன் ராட்சசர்களை அழிக்க இந்த குழுவில் சேர்கிறான். அவனுக்கும் ராட்சசர்களின் தலைவனுக்கும் இடையே நடக்கும் சண்டையை வைத்து கதை செல்கிறது.

Attack on Titans

சமீபத்தில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமான தொடராக அட்டாக் ஆன் டைட்டன்ஸ் இருந்து வருகிறது. மனிதர்களை விடவும் மிக பெரிதாக இருக்கும் டைட்டன் எனப்படும் ஜந்துக்கள் திடீரென தோன்று மனிதர்களை உணவாக உட்கொள்கின்றன.

இந்த நிலையில் இந்த டைட்டன்களால் தனது குடும்பத்தை இழக்கும் எரன் ஏகர் என்னும் சிறுவன் அவற்றை பழிவாங்க நினைக்கிறான். அதற்காக டைட்டன்களை எதிர்க்கும் நாட்டின் இராணுவத்தில் அவன் சேர்கிறான். அதனை அடிப்படையாக கொண்டு இதன் கதை செல்கிறது.

 

 

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version