நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற டிவி சீரிஸாக ஸ்க்விட் கேம் இருந்து வருகிறது. பண தேவை அதிகமாக இருக்கும் நபர்களை ஒரு விளையாட்டு விளையாடுவதற்காக ஒரு குழு அழைக்கிறது. அங்கு செல்பவர்களில் ஒவ்வொரு விளையாட்டின்போதும் பலர் இறக்கின்றனர்.
அனைத்தையும் தாக்குப்பிடித்து இறுதி வரை வரும் நபரே வெற்றி பெற்றவராகிறார். அவருக்கு மிகப்பெரிய பரிசு தொகையை வழங்குகின்றனர். முதல் சீசனில் கதாநாயகன் இந்த விளையாட்டிற்குள் சென்று மிகவும் கஷ்டப்பட்டு இறுதியில் அவன் மட்டும் உயிர் பிழைத்து பல கோடி தொகையுடன் வெளியில் வருகிறான்.
அதனை தொடர்ந்து இந்த ஸ்குவிட் கேம் விளையாட்டை நடத்தும் கும்பலை பிடிப்பதற்காக கதாநாயகன் மீண்டும் அந்த விளையாட்டுக்குள் போகிறான். ஆனால் இந்த முறையும் கதாநாயகன் அந்த விளையாட்டுக்குள் சிக்கி கொள்கிறான்.
மீண்டும் அவன் எப்படி தப்பிக்கிறான் என்பதாக கதை இருக்கிறது. இந்த முறையாவது இந்த குழுவை பழி வாங்குவான் என பலரும் எதிர்பார்த்து பார்த்து கொண்டிருந்த தருணத்தில் அது எதுவுமே நடக்காதது பலருக்குமே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.