தக் லைஃப் படத்தின் தோல்விக்கு நெட்டிசன்கள்தான் காரணமா? இதை கவனிக்கலையே..!

சமீபத்தில் நடிகர் கமல் நடிப்பில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்ற திரைப்படம் தக் லைஃப். தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் மணிரத்தினம் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் இருந்தே இந்த திரைப்படம் குறித்து எதிர்மறையான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் படத்தின் வசூலை இது வெகுவாக பாதித்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் படத்தின் கதைக்களத்திற்கும் அது தொடர்பாக வெளியான கருத்துக்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது.

படத்தின் கதைப்படி த்ரிஷாவின் கதாபாத்திரம் கமல்ஹாசனுக்கு காதலியாக இருந்து வருவார். கமலுக்கும் சிம்புவுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனையால் கமலை கொலை செய்ய முயற்சி செய்கிறார் சிம்பு. இந்த நிலையில் அதற்கு பிறகு த்ரிஷாவையும் அவர் கை பற்றி கொள்கிறார்.

thug-life
thug-life

ஆனால் இந்த போட்டி த்ரிஷாவிற்காக நடக்கும் சண்டையே கிடையாது சக்திவேல் மற்றும் அமரனுக்கும் இடையே ஏற்படும் மாறுபட்ட கருத்துக்களாலும் நம்பிக்கை இல்லா தன்மையாலுமே இந்த சண்டை துவங்கும்.

ஆனால் த்ரிஷாவிற்காக இந்த சண்டை நடந்ததாக சமூக வலைத்தளத்தில் மாற்றி கருத்துக்களை பரப்பினர். இதுவே இந்த படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தக் லைஃபை விடவும் சுமாரான படங்கள் கூட தமிழ் சினிமாவில் நல்ல வெற்றியை கொடுத்திருக்கின்றன.

ஆனால் தவறான விமர்சனத்தின் காரணமாக தக் லைஃப் திரைப்படம் தோல்வி அடைந்துள்ளது.