Tag Archives: trisha

தக் லைஃப் படத்தின் தோல்விக்கு நெட்டிசன்கள்தான் காரணமா? இதை கவனிக்கலையே..!

சமீபத்தில் நடிகர் கமல் நடிப்பில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்ற திரைப்படம் தக் லைஃப். தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் மணிரத்தினம் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் இருந்தே இந்த திரைப்படம் குறித்து எதிர்மறையான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் படத்தின் வசூலை இது வெகுவாக பாதித்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் படத்தின் கதைக்களத்திற்கும் அது தொடர்பாக வெளியான கருத்துக்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது.

படத்தின் கதைப்படி த்ரிஷாவின் கதாபாத்திரம் கமல்ஹாசனுக்கு காதலியாக இருந்து வருவார். கமலுக்கும் சிம்புவுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனையால் கமலை கொலை செய்ய முயற்சி செய்கிறார் சிம்பு. இந்த நிலையில் அதற்கு பிறகு த்ரிஷாவையும் அவர் கை பற்றி கொள்கிறார்.

thug-life

ஆனால் இந்த போட்டி த்ரிஷாவிற்காக நடக்கும் சண்டையே கிடையாது சக்திவேல் மற்றும் அமரனுக்கும் இடையே ஏற்படும் மாறுபட்ட கருத்துக்களாலும் நம்பிக்கை இல்லா தன்மையாலுமே இந்த சண்டை துவங்கும்.

ஆனால் த்ரிஷாவிற்காக இந்த சண்டை நடந்ததாக சமூக வலைத்தளத்தில் மாற்றி கருத்துக்களை பரப்பினர். இதுவே இந்த படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தக் லைஃபை விடவும் சுமாரான படங்கள் கூட தமிழ் சினிமாவில் நல்ல வெற்றியை கொடுத்திருக்கின்றன.

ஆனால் தவறான விமர்சனத்தின் காரணமாக தக் லைஃப் திரைப்படம் தோல்வி அடைந்துள்ளது.

மேடையிலேயே சிம்புவை லாக் செய்த த்ரிஷா.. அதிர்ச்சியான எஸ்.டி.ஆர்.!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்சமயம் மணிரத்தினம் இயக்கி வரும் திரைப்படம் தக் லைஃப்.

இந்த திரைப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கமல்ஹாசன் என பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய த்ரிஷா பேசிய சில விஷயங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

simbu

அதில் த்ரிஷா பேசும்போது என்னை இப்போதும் பலரும் பார்க்கும்போது சிம்புவுடன் விண்ணை தாண்டி வருவாயா பாகம் 2 எப்போது செய்வீர்கள் என்றுதான் கேட்கிறார்கள் என கூறினார். அதனை கேட்டதும் சிம்பு அதிக அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

ஏனெனில் சிம்புவே இப்போது வரை விண்ணைதாண்டி வருவாயா 2 திரைப்படம் நடிக்கலாம் என முடிவெடுக்காமல்தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் த்ரிஷா இப்படி கூறியதை அடுத்து அது தொடர்பான பேச்சு வார்த்தைகள் துவங்கப்படலாம் என கூறப்படுகிறது.

த்ரிஷா செய்த ஆன்லைன் குற்றம்.. வெளி கொண்டு வந்த ஆங்கில பாடகர்.!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நடிகை திரிஷா இருந்து வருகிறார். தமிழில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான லேசா லேசா திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை திரிஷா.

அதற்குப் பிறகு திரிஷாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. தொடர்ந்து தமிழில் பெரிய நடிகர்களான விக்ரம் சூர்யா அஜித் விஜய் என்று அனைவருடனும் த்ரிஷா நடித்திருக்கிறார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு திரிஷாவிற்கு தமிழில் வரவேற்புகள் என்பது குறைய துவங்கியது.

இந்த சமயத்தில்தான் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்தார் திரிஷா. அந்த கதாபாத்திரம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார் திரிஷா. இந்த நிலையில் சமீபத்தில் திரிஷாவின் சமூக வலைதள பக்கத்தில் தேவையில்லாத விளம்பரங்கள் சில வெளியானது.

யாரோ தன்னுடைய கணக்கை ஹேக் செய்து விட்டார்கள் என்று இது குறித்து திரிஷா விளக்கமளித்து இருந்தார். இந்த நிலையில் பிரபல பாடகர் ஒருவர் இது குறித்து கூறும் பொழுது நடிகைகள் இதை வேண்டுமென்றே செய்கின்றனர்.

இதற்காக அந்த நிறுவனங்களிடம் நல்ல காசு வாங்கிக்கொண்டு அவர்களுடைய விளம்பரத்தை போடுகின்றனர் பிறகு தன்னுடைய கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாக கூறி விடுகின்றனர் என்று கூறுகிறார்.

விடிய விடிய எல்லை மீறிய நயன்தாராவும், த்ரிஷாவும், தாக்குபிடிக்க முடியாமல் ஓடிய டான்ஸ் மாஸ்டர்.!

எப்படி நடிகர்களில் விஜய் அஜித் இருவரும் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கிறார்களோ அதே போல நடிகைகளில் டாப் நடிகைகளாக இருந்து வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை த்ரிஷா. இருவருமே தற்சமயம் போட்டி நடிகைகளாக இருந்து வருகின்றனர்.

த்ரிஷா நயன்தாரா இருவருமே ஒரே காலக்கட்டத்தில்தான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்கள். அதே போல இருவருமே தமிழில் உள்ள மிக முக்கியமான பெரிய நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளனர். சொல்ல போனால் நயன்தாராவை விட த்ரிஷா அதிக பெரும் நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

ஆனாலும் கூட நயன்தாராவுக்கு கிடைத்த மார்க்கெட் என்பது த்ரிஷாவுக்கு கிடைக்காமலே இருந்தது. அந்த விஷயத்தை மணிரத்தினம் இயக்கத்தில் வந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் முறியடித்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்தப்பிறகு மீண்டும் த்ரிஷாவுக்கு மார்க்கெட் கிடைத்தது.

nayanthara

இப்போது நயன்தாராவை விட த்ரிஷாவுக்குதான் மார்க்கெட் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் த்ரிஷாவும், நயன் தாராவும் தோழிகளாக இருந்தப்போது நடந்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஒருமுறை த்ரிஷா, நயன்தாரா மற்றும் பிருந்தா மாஸ்டர் மூவரும் ஒரு காரில் சென்று பேசியுள்ளனர். நயன் தாராவும் த்ரிஷாவும் இரவு 3 மணிவரை பேச்சை நிறுத்தவே இல்லையாம். ஒரு கட்டத்தில் பிருந்தா மாஸ்டர் அவரை வீட்டில் கொண்டு போய் விடும்படி கேட்டுள்ளார்.

எங்களுக்கு கடினமான டான்ஸ்களை வைக்க மாட்டேன் என வாக்குறுதி கொடுங்கள் அப்போதான் வீட்டில் விடுவேன் என இருவரும் பிருந்தா மாஸ்டரை தொல்லை செய்துள்ளனர். இந்த விஷயம் சினி வட்டாரத்தில் கசிந்து பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

அரசியலுக்கு செல்கிறாரா த்ரிஷா.. திடீர் முடிவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!

நடிகர்கள் பொதுவாக பல காலங்கள் சினிமாவில் நிலைத்து கொண்டிருப்பது சாதாரண விஷயம்தான். அவர்களுக்கு இருக்கும் ரசிகர் சங்கங்களே அவர்கள் வரவேற்பு பெற காரணமாக இருப்பார்கள். ஆனால் நடிகைகளுக்கு தொடர்ந்து 5 வருடம் சினிமாவில் வரவேற்பை பெற்று இருப்பதே கடினமான காரியமாக இருக்கிறது.

சில நடிகைகள் மட்டுமே 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நிலைத்து நின்று வருகின்றனர். அப்படியான நடிகைகளில் த்ரிஷா முக்கியமானவர். பெரும்பாலும் த்ரிஷா நடிக்கும் திரைப்படங்களில் படங்களுக்கு வரவேற்பு கிடைக்கிறதோ இல்லையோ த்ரிஷாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவிடுகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பெரிய நடிகர்கள் படங்களில் வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் த்ரிஷா. இந்த நிலையில் த்ரிஷா திடீரென நடிப்பதை விட்டு செல்ல போகிறார் என ஒரு பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதுக்குறித்து த்ரிஷா எந்த ஒரு அதிகாரப்பூர்வ செய்தியையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனாலும் த்ரிஷா சினிமாவை விட்டு செல்கிறார் என்றால் அவரும் அரசியலுக்குதான் செல்வார். கண்டிப்பாக விஜய்யின் கட்சியில் அவர் சேர்வதற்கு வாய்ப்புள்ளது என்கின்றனர் நெட்டிசன்கள்.

ஒவ்வொரு பத்து வருடத்திற்கு ஒருமுறையும்  அஜித்துக்கு நடக்கும் விசித்திர நிகழ்வு.. இந்த வாட்டியும் நடந்திருக்கு..!

1993 ஆம் ஆண்டு அமராவதி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அஜித். அப்போது துவங்கி இப்போது வரை அஜித்துக்கு சினிமாவில் இருக்கும் மார்க்கெட் என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தப்பாடில்லை.

இத்தனைக்கும் அஜித்துக்கு என்று ரசிகர் மன்றங்கள் கிடையாது. அவர் எந்த பொது நிகழ்சிக்கும், விருது வழங்கும் விழாக்களுக்கும் வருகை தர மாட்டார். அப்படி எல்லாம் இருந்தும் கூட அஜித்துக்கு இருக்கும் ரசிகர்கள் குறைவதே இல்லை.

சமீபத்தில் அஜித் கார் ரேசில் கலந்துக்கொண்டப்போது கூட அவருடைய ரசிகர்கள் அங்கும் வருகை புரிந்திருந்தனர். இந்த நிலையில் ஒவ்வொரு 10 வருடத்திற்கு ஒருமுறையும் அஜித்துக்கு ஒரே விஷயம் மீண்டும் மீண்டும் நடந்து வருவதாக  அஜித் ரசிகர்கள் கூறுகின்றனர்.

அதன்படி இது 2005 ஆம் ஆண்டுதான் முதன் முதலாக துவங்கியது. 2005 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஒரே திரைப்படம் ஜீ திரைப்படம் மட்டும்தான். இந்த திரைப்படம் பிப்ரவரி 11 அன்று வெளியானது. இதில் கதாநாயகியாக திரிஷா நடித்தார்.

அடுத்து 10 வருடங்கள் கழித்து 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி என்னை அறிந்தால் திரைப்படம் அஜித் நடிப்பில் வெளியானது. இந்த திரைப்படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷாதான் நடித்திருந்தார்.

அதற்கு பிறகு மீண்டும் 10 வருடங்கள் கழித்து 6 பிப்ரவரி 2025 அன்று விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷாதான் நடித்துள்ளார்.

இதில் இன்னொரு ஒற்றுமை என்னவென்றால் இந்த மூன்று படங்களுமே பொங்கலுக்கு திட்டமிடப்பட்டு பிறகு சில காரணங்களால் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. எனவே அஜித்துக்கு 10 வருடத்திற்கு ஒருமுறை இப்படி நடப்பது விசித்திரமாக உள்ளது என்கின்றனர் ரசிகர்கள்.

தல ரசிகர்களுக்கு முழு ட்ரீட்.. வெளியான விடாமுயற்சி ட்ரைலர்… இதுதான் படத்தின் கதை..!

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு அதிக இடைவெளி விட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் விஜய் படம் இரண்டு வெளியாகிவிட்டது. ஆனால் அஜித் நடிப்பில் ஒரு படம் கூட வராமல் இருந்தது.

போன வருடத்தின் துவக்கத்திலேயே ஆரம்பமான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களின் காத்திருப்பிற்கு பிறகு ஒரு வழியாக திரையரங்கிற்கு வர இருக்கிறது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கெசாண்ட்ரா போன்றொர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் கதை எனன்வென்று ஓரளவு ஊகிக்கப்படுகிறது. காதலித்து வரும் நடிகை த்ரிஷாவுக்கும் அஜித்துக்கும் ஆரம்பத்தில் திருமணம் நடக்கிறது.

அஜர் பைஜானில் சாகசம்:

அதற்கு பிறகு ஒரு வேலையாக அவர்கள் அஜர்பைஜான் நாட்டிற்கு செல்கின்றனர். அஜர்பைஜான் நாட்டை பொறுத்தவரை அங்கு குற்றங்கள் குறைவாக நடக்கும் ஒரு நாடாக இருக்கிறது. ஆனால் உண்மையில் தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் அங்கு குற்றங்கள் நடக்கின்றன.

ஆனால் அந்த நாட்டு போலீஸ் அந்த விஷயத்தை வெளியில் தெரியாமல் மறைக்கின்றனர். அப்படியாக நெடுஞ்சாலையில் குற்றம் செய்யும் கும்பலை சேர்ந்தவராக அர்ஜுன் மற்றும் ரெஜுனா இருக்கின்றனர்.

இந்த நிலையில் தனி ஆளாக இந்த கும்பலிடம் சிக்கும் அஜித் எப்படி தப்பிக்கிறார். இந்த கும்பலை எப்படி வேட்டையாடுகிறார் என்பதே கதையாக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.

வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்சமயம் அஜித் ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

 

அவன் இறந்ததும் என் வாழ்க்கை முடிஞ்சிட்டு.. குடும்ப நபரை இழந்து தவிக்கும் த்ரிஷா.!

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். என்னதான் பிரபல நடிகையாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் நடிகைகளுக்கு வாய்ப்புகள் குறைவது என்பது இயல்புதான். அந்த வகையில் நடிகை த்ரிஷாவுக்கும் வாய்ப்புகள் குறைந்தது.

ஆனால் அதற்கு பிறகு சில வருடங்கள் கழித்து அவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியது.

தற்சமயம் மீண்டும் பெரிய ஹீரோக்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகளை பெற்று வருகிறார் த்ரிஷா. தொடர்ந்து விஜய்,அஜித் என பலருடனும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் திடீரென த்ரிஷா தற்சமயம் வெளியிட்டிருக்கும் பதிவு பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திரிஷாவிற்கு இப்போது வரை திருமணமே ஆகவில்லை. ஆனால் அவர் நடிகர் விஜய்யை காதலித்து வருவதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது.

இதற்கு நடுவே இன்று தனது மகன் இறந்துவிட்டதாக ஒரு பதிவை போட்டுள்ளார் த்ரிஷா. அதில் எனது மகன் சோரோ இன்று கிருஸ்மஸ் அன்று காலையில் உயிரிழந்தான். இந்த உலகில் என்னை அதிகம் அறிந்தவன் அவன் தான். அவன் போன பிறகு என் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிட்டது.

எனது குடும்பமும் நானும் உடைந்து போய்விட்டோம். இதிலிருந்து மீள்வதற்கு எனக்கு சில நாட்கள் தேவைப்படும் என பதிவிட்டுள்ளார். த்ரிஷாவிற்கு வளர்ப்பு நாய்களை மிகவும் பிடிக்கும். எனவே அவருடைய நாய் ஒன்றில் இறப்பைதான் இப்படி பதிவு செய்துள்ளார் த்ரிஷா என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

பட வாய்ப்புக்காக உடலை தியாகம் செஞ்ச திரிஷாவின் அம்மா.! வெளிப்படையாக கூறிய பிரபலம்..

பொதுவாக சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பது பலரும் அறிந்த விஷயம்தான். ஆனால் அது நடிகைகளை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமாக இருக்கிறது.

இந்த நிலையில் ஒரு பத்திரிகையாளர் இதை குறித்து ஒரு பேட்டியில் பேசும் பொழுது அதிக தகவல்களை கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறும்பொழுது நடிகைகள் பத்திலிருந்து பதினைந்து வருடங்கள் சினிமாவில் தாக்குப்பிடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

அதற்கு அவர்கள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் நடிகைகள் நடிப்பை மட்டும் கொடுப்பது இல்லாமல் அவர்களது உடலையும் இதற்காக கொடுக்க வேண்டியிருக்கும்.

திரிஷா அம்மா குறித்து பேசிய பிரபலம்:

அப்படியாக நிறைய நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து கொண்டு தான் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். ஆனால் இந்த நடிகைகளின் தாயாரால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் நடிகைகள் தொடர்ந்து இந்த மாதிரி அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைகளுக்கு ஆளாகும் பொழுது அவர்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு கட்டத்தில் போதை மருந்துகளுக்கு அவர்கள் அடிமையாக துவங்கின்றனர் இப்படி சினிமாவில் வாழ்க்கையை தொலைத்த நடிகைகளும் உண்டு. எனவே நடிகைகளின் அம்மாக்கள் சில சமயங்களில் அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கு செல்வது உண்டு.

அதன் மூலம் தனது மகளை காப்பாற்ற நினைப்பார்கள் அருகில் திரிஷாவின் அம்மா கூட இந்த மாதிரி ஒரு விஷயத்தால் தான் தனது கணவருடன் விவாகரத்தை பெற்றார் என்று கூறியிருக்கிறார் அந்த பத்திரிகையாளர்.

அந்த மாதிரி கவர்ச்சியா நடிக்கிறது கஷ்டமா இருக்கு.. ஓப்பனாக கூறிய த்ரிஷா..! எந்த படம்னு தெரியுமா?

40 வயதை கடந்த பிறகும் கூட தமிழ் சினிமாவில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை த்ரிஷா. நடிகை திரிஷா மிக இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது அப்படியே வாய்ப்பை பெற்று வந்த திரிஷா ஒரு கட்டத்தில் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்தார்.

சினிமாவில் பிரபலம்:

ஆனால் பொதுவாகவே சினிமாவில் கதாநாயகிகளுக்கான காலம் என்பது மிக குறைவுதான். அதிகபட்சம் 10 வருடம் சினிமாவில் தொடர்ந்து கதாநாயகியாக இருந்து விட்டாலே பெரிய விஷயம். இந்த நிலையில் திரிஷாவிருக்கும் ஒரு கட்டத்திற்கு பிறகு வரவேற்புகள் குறைய தொடங்கின.

trisha

புது நடிகைகளுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வந்தன. இந்த நிலையில் சில வருடங்கள் கழித்து வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மீண்டும் திரிஷாவின் மார்க்கெட்டை உயர்த்தியது.

அதனை தொடர்ந்து தற்சமயம் மீண்டும் கதாநாயகியாக நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. ஒரு பேட்டியில் நடிப்பு குறித்த தனது அனுபவத்தை கூறியிருந்தார்.

அதுதான் கஷ்டம்:

அதில் அவரிடம் கேட்கும் பொழுது படங்களில் சாதாரணமாக நடிப்பது கஷ்டமாக இருக்கிறதா? அல்லது கவர்ச்சியாக நடிப்பது கஷ்டமாக இருக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த திரிஷா இரண்டுமே கஷ்டமாகத்தான் இருக்கிறது.

சாதாரணமாக நடிப்பதை விடவும் கவர்ச்சியாக நடிப்பது அதிக கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் நடிகைகளுக்கு வேறு வழியில்லை இரண்டையுமே செய்துதான் ஆக வேண்டி இருக்கிறது என்று கூறியிருக்கிறார் திரிஷா.

திரிஷாவுக்கு மட்டும் சட்டத்தில் தனி இடமா? அந்த தீர்ப்பால் கடுப்பான ரசிகர்கள்..!

அதிக வயதானாலும் கூட தமிழ் சினிமாவில் தொடர்ந்து மார்க்கெட்டை பெற்று வரும் நடிகைகளின் முக்கியமானவராக நடிகை திரிஷா இருந்து வருகிறார்.

இளமை காலங்களில் அதிக படங்களில் நடித்தாலும் கூட அதற்கு பிறகு திரிஷாவிற்கு வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது. அதற்குப் பிறகு சினிமாவில் குறைந்த படங்களில் நடித்து வந்தார் திரிஷா.

இப்பொழுது அவருக்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் மீண்டும் ஒரு ரீ எண்ட்ரியாக அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு மீண்டும் அதிக வாய்ப்புகளை பெற்று வருகிறார் திரிஷா. இந்த நிலையில் திரிஷா விற்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரர்க்கும் இடையே நடந்த சண்டை தொடர்பான வழக்கு அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:

இந்த இரண்டு வீட்டுக்கும் நடுவில் இருக்கும் காம்பவுண்ட் சுவர் தொடர்பாக ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே பெருசா அந்த பக்கத்து வீட்டுக்காரருடன் சமரசமாக போய்விட்டதாகவும் அதனால் வழக்கை தள்ளுபடி செய்து கொள்வதாகவும் கூறினார்.

இதனை அடுத்து திரிஷாவிடம் நீதிமன்றம் வாங்கிய தொகையை திரும்ப தருமாறு உத்தரவை பெற்றுள்ளது. இது குறித்து பேசி வரும் நெட்டிசன் கூறும் பொழுது இதுவே சாமானிய மனிதர்களாக இருந்திருந்தால் நீதிமன்றத்தின் நேரத்தை விரயம் செய்து விட்டதாக கூறி நம்மிடம் தொகையை வாங்கி இருப்பார்கள் திரிஷாவிற்கு மட்டும் தனி கரிசனம் காட்டுகிறார்கள் என்று கூறி வருகின்றனர்.

த்ரிஷா பண்ணா தப்பில்லை.. நான் பண்ணுனா மட்டும் பி*டு படமா.. சர்ச்சையை கிளப்பிய ஷகிலா.!

வெகு காலங்களுக்குப் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷகிலா. ஆரம்பம் முதலே தவறான கண்ணோட்டத்தில் மக்களால் பார்க்கப்பட்ட ஷகிலாவிற்கு ஒரு மாற்று விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.

அதுவரை ஒரு கவர்ச்சி நடிகையாக ஷகிலாவை பார்த்து வந்த மக்கள் அதற்கு பிறகு அவரை பார்க்கும் கோணம் என்பது மாறத் துவங்கியது. இந்த நிலையில் சமீப காலமாக ஷகிலா அவர்களுடைய ஆரம்பகால வாழ்க்கையில் ஏன் அந்த மாதிரியான திரைப்படங்களில் நடித்தார் என்பது குறித்த விளக்கங்களை கொடுத்து வருகிறார்.

ஷகிலா கொடுத்த ஓப்பன் டாக்

அதில் அவர் கூறும் பொழுது 15 வயதில் எனக்கு விவரம் தெரியவில்லை சம்பளம் அதிகமாக தருகிறார்கள் என்பதற்காக தான் அதில் நடித்தேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கும் பொழுது நீங்கள் திருமணம் செய்துவிட்டு எல்லோரும் செய்யும் விஷயத்தை கேமரா முன்பு திருமணம் செய்யாமல் செய்தால் உங்களுக்கு எப்படி கல்யாணம் ஆகும் என்று கேட்டிருந்தனர் .

அதற்கு பதில் அளித்த ஷகிலா கூறும்போது இப்பொழுது யார்தான் அதையெல்லாம் செய்யவில்லை நான் முத்த காட்சிகளில் நடித்தேன் என்பதை ஒரு குற்றமாக கூறுகிறீர்கள். சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் கூட திரிஷாவிற்கும் விஜய்க்கும் உதட்டு முத்தம் காட்சிகள் இருந்தது.

ஆனால் அது உங்களுக்கு தவறாக தெரியவில்லை அதையே நான் சில வருடங்களுக்கு முன்பு செய்ததால் அப்பொழுது உங்களுக்கு அது தவறாக தெரிகிறது என்று வெளிப்படையாக கேள்வி கேட்டு இருந்தார் இந்த நிலையில் இது அதிக சர்ச்சையாக துவங்கி இருக்கிறது.