News
த்ரிஷா பண்ணா தப்பில்லை.. நான் பண்ணுனா மட்டும் பி*டு படமா.. சர்ச்சையை கிளப்பிய ஷகிலா.!
வெகு காலங்களுக்குப் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷகிலா. ஆரம்பம் முதலே தவறான கண்ணோட்டத்தில் மக்களால் பார்க்கப்பட்ட ஷகிலாவிற்கு ஒரு மாற்று விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.
அதுவரை ஒரு கவர்ச்சி நடிகையாக ஷகிலாவை பார்த்து வந்த மக்கள் அதற்கு பிறகு அவரை பார்க்கும் கோணம் என்பது மாறத் துவங்கியது. இந்த நிலையில் சமீப காலமாக ஷகிலா அவர்களுடைய ஆரம்பகால வாழ்க்கையில் ஏன் அந்த மாதிரியான திரைப்படங்களில் நடித்தார் என்பது குறித்த விளக்கங்களை கொடுத்து வருகிறார்.
ஷகிலா கொடுத்த ஓப்பன் டாக்
அதில் அவர் கூறும் பொழுது 15 வயதில் எனக்கு விவரம் தெரியவில்லை சம்பளம் அதிகமாக தருகிறார்கள் என்பதற்காக தான் அதில் நடித்தேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கும் பொழுது நீங்கள் திருமணம் செய்துவிட்டு எல்லோரும் செய்யும் விஷயத்தை கேமரா முன்பு திருமணம் செய்யாமல் செய்தால் உங்களுக்கு எப்படி கல்யாணம் ஆகும் என்று கேட்டிருந்தனர் .
அதற்கு பதில் அளித்த ஷகிலா கூறும்போது இப்பொழுது யார்தான் அதையெல்லாம் செய்யவில்லை நான் முத்த காட்சிகளில் நடித்தேன் என்பதை ஒரு குற்றமாக கூறுகிறீர்கள். சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் கூட திரிஷாவிற்கும் விஜய்க்கும் உதட்டு முத்தம் காட்சிகள் இருந்தது.
ஆனால் அது உங்களுக்கு தவறாக தெரியவில்லை அதையே நான் சில வருடங்களுக்கு முன்பு செய்ததால் அப்பொழுது உங்களுக்கு அது தவறாக தெரிகிறது என்று வெளிப்படையாக கேள்வி கேட்டு இருந்தார் இந்த நிலையில் இது அதிக சர்ச்சையாக துவங்கி இருக்கிறது.
