கோடிங்கே தெரியாமல் கணினி துறையில் வேலை.. வைப் கோடிங் என்றால் என்ன?

கணினி துறையில் ப்ரோகிராமிங் என்கிற துறையை எடுத்துக்கொண்டாலே கோடிங் திறமை இருந்தால்தான் வேலை கிடைக்கும் என்கிற நிலை இருந்து வருகிறது. ஆனால் இப்போது ஏ.ஐ தொழில்நுட்பம் வந்த பிறகு தொடர்ந்து ப்ரோகிராமிங் மற்றும் சாப்ட்வேர் துறையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையில்தான் தற்சமயம் வைப் கோடிங் என்கிற புது வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது. ஒரு வைப் கோடராக வேண்டும் என்றால் அதற்கு கோடிங் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஏ.ஐ தொழில்நுட்பத்தை தெரிந்து வைத்திருந்தாலே போதும்.

குறைவான அளவில் கோடிங் தெரிந்த நபர்களாலேயே வைப் கோடர் ஆக முடியும். ஏ.ஐ ஐ பயன்படுத்தி முழுக்க முழுக்க கோடிங் செய்பவர்களே வைப் கோடர் என அழைக்கப்படுகின்றனர். எதிர்காலத்தில் இவர்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இப்போது Replit போன்ற ஏ.ஐ கருவிகள் தொடர்ந்து வைப் கோடிங் செய்வதற்கு உதவுகின்றன. Deeplearning தளம் Replit AI ஐ பயன்படுத்தி எப்படி வைப் கோடிங் செய்வது என்கிற பயிற்சியை இலவசமாக வழங்குகிறது. விருப்பமுள்ளவர்கள் லிங்கை (link) பயன்படுத்தி அந்த கோர்ஸை படிக்கலாம்.

இதை படிக்க பெரிதாக ப்ரோகிராமிங் குறித்த அறிவு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நபர் மூன்று ப்ரோஜக்ட் வரை Replit AI யில் இலவசமாக உருவாக்கி கொள்ள முடியும்.